11/08/2018

திமுக வின் திராவிட பகுத்தறிவு...


இன்று ஆடி அமாவாசை. இறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் முக்கிய  நாள். குளம் கண்ட இடங்களில் எல்லாம் மக்கள் தங்கள்  முன்னோர்களுக்கு இன்று காலை முதல்  நேர்த்திக்கடன் செய்து  வருகிறார்கள். கருணாநிதி இறந்த நான்கு நாளில் இப்படி  ஒரு தர்ப்பண நாள் வந்து விட்டதால், கருணாநிதிக்கும்  தர்ப்பணம் கொடுத்தார்கள். அதிகாலையில் கோபாலபுரம் வீட்டில் வெகு விமரிசையாக பட்சணங்கள் செய்து அப்பனுக்குப் படைத்தார்கள்.

இரண்டு பிராமணர்களை அழைத்து எந்த குறைவுமில்லாமல் வெகு நேர்த்தியாக இந்த தர்ப்பணம் செய்யப்பட்டது. அதை புகைப்படக்காரர் புகைப்படம் எடுக்க முனைந்தபோது, பிராமணர்களை மட்டும் புகைப்படத்தில் இடம்பெறாமல் இருக்க தள்ளி இருக்க சொல்லி விட்டார்கள். கேட்டால் இவர்களின் பகுத்தறிவு படமாகி விடக்கூடாதாம். பிராமணர்கள் படத்தில் இருக்க வேண்டாமாம். ஆனால் அவர்கள் செய்துகொடுத்து சாங்கியங்கள் மட்டும் படத்தில் இருக்கலாமாம். அவற்றை திராவிடர்கள் செய்ததாக நினைத்துக் கொள்ள வேண்டுமாம். திராவிடர்கள் செய்கிற சாங்கியம் பகுத்தறிவில் வருமாம். தமிழன் என்றால் வந்துவிடும் பார்ப்பான், திராவிடன் என்றால் வர மாட்டானாம். அதுபோல நேரில் வரும் பிராமணன் புகைப்படத்தில் வர மாட்டானாம்.

என்னே பகுத்தறிவு... என்னே சுயமரியாதை..என்னே தன்மானம்... புல்லரிக்குதடா கொய்யால...

திமுக கட்டுமரம் பழக்கடை...


கொழுக்கட்டையை பிள்ளையார் சாப்பிடப்போகிறாரா? என கேட்டவனுக்கு பழக்கடை வச்சிருக்கானுங்க..

பழத்தை எல்லாம்  கட்டுமரம் சாப்ட போதா என்ன?

அடேய் உங்க பகுத்தறிவு பல்ல இலிக்குதுடா...

அகத்தியர் தாபனம் - கங்குவேலி...


தமிழுக்கு ஐந்திலக்கணம் தந்து, தமிழை அறிவியல் மொழியாக உலகிற்கு உயர்த்திய மாபெரும் தமிழன் அகத்திய மாமுனிவர். இவர் தொடர்பாக பல அவதாரங்கள் கூறப்பட்டாலும், தமிழர் வாழ்பகுதிக்கு மிகச் சிறப்பான அங்கிகாரமாக அகத்தியர் தாபனம் விளங்குவது தமிழர்க்கெல்லாம் பெருமையாகும்.

ஆடி அவமாசை வந்துவிட்டால் அகத்திய தாபனம் விழாக்கோலம் கொள்ளும். வருடத்தில் ஒருமுறை வரும் இந்நன்னாளில் பிதிர்க்கடன் தீர்ப்பது சிறப்பு என நம் முன்னோர்கள் கூறிச்சென்றுள்ளார்கள்.

இந்த அகத்திய தாபனச்சூழலானது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அழகை கொண்டமைந்த அறபுதமான, காண்பதற்கு அரிய இடமாகும்.

கங்கை மகள் பாடி வர
முத்துமகள் ஆடி வர
உழவின் வாசம் வீசி வர
உயிரின் மொழி தமிழாய் நறுமணம் தர
கங்கைவெளியில் வாழ்ந்து
கங்குவேலிக்கே பெருமை தரும்
குருமுனியின் பாதம் பட்ட மண்ணை
தாழ் பணிந்து - நிந்தன்
தமிழ் வணங்கி
நித்தம் உமை தொழுது
வாழும் வரம்
யாருக்கும் கிடைத்திராத பாக்கியம்
இம்மக்கள் பெற்ற பெரும் பேறு

அகத்தியர் வாழ்ந்த புனித பூமி கானகத்தின் செழிப்பாலும், கங்கை நதியின் குளுமையாலும், வனவிலங்குகளின் அன்பாலும், பறவைகளின் இன்னிசையாலும் அமையப்பட்ட புனித தலம். இது கங்குவேலி எனும் புண்ணிய கிராமத்தின் வரமுமாகும்.

திருக்கரசை நாதனை வணங்கி, அகத்தே அவரை நினைத்து முக்காலமும் தொழுது தமிழை மட்டுமன்றி சித்த வைத்தியம், அறிவியல் என பல தரப்பட்ட மனிதர்களுக்கு பயன்தரு சிறப்புக்களை அகத்தியர் அருளிச்சென்றார்.

திருகோணமலையிலிருந்து ஏறக்குறைய 23 மைல்கள் தொலைவில் உள்ள புனித பூமியாக கங்குவேலியும் அகத்தியர்தாபனமும் விளங்குகின்றது. இங்கு விவசாயம் கால்நடை வளர்ப்பு என்பன பிரதானமான தொழில்களாகும். இங்குள்ள சிறப்பு மிக்க சிவனாலயத்திலிருந்து மக்கள் காவடிகள், மற்றும் நேர்கடன்களுடன் அகத்தியர் தாபனம் நோக்கி புறப்படுவர்.

காட்டு வழி பயணப்பட்ட போதும், வனவிலங்குகளின் எவ்வித தொல்லையுமின்றி அகத்தியரின் அருளால் எக்குறையுமின்றி பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொள்வர்.

திருமங்கலாய், திருக்கரசை சிவனாலயம் மற்றும் அகத்தியர் தாபனம் என்பன புராதன காலத்தின் சைவசமய தொன்மையையும் தமிழின் புதுமையும் விளக்கி நிற்பதோடு மட்டுமல்லாது, தமிழரின் பண்டைய வளர்ச்சியடைந்த பண்பாட்டை எடுத்தியம்புகின்றது.

தமிழரின் பெருமை கூறிடும் இந்த புனித தலங்கள், மென்மேலும் வளர்ச்சி பெற தமிழராகிய நாம் அயராது பாடுபட வேண்டும்.

தமிழை அழித்து மறைக்க எழும் வல்லாதிக்க சக்திகளுக்கு முன்னமே வீரமிகு தமிழனாய் எழுந்து அகத்தியர் எமக்களித்த தமிழுணர்வோடு தமிழரையும் சைவநெறியையும் காப்போம்...

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி...


நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்: கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல் ..

காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே...

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்...

நான் ஒரு தேச விரோதி, சமூக விரோதி. நீங்க?


தமிழக இறையாண்மைக்காக போராடுபவர்கள் இந்திய(?) தேச விரோதிகள்.

ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காக போராடுவோர் பார்ப்பன/பனியா சமூக விரோதிகள்.

நான் ஒரு தேச விரோதி, சமூக விரோதி. நீங்க?

சிந்தனைப் பதிவு - 1...


தொடர்ந்து தற்சார்புக்கான பதிவுகளை விதைத்து க்கொண்டே இருப்போம்...

எண்ணங்கள்...


உங்களை சமூகத்தை அழிக்க போவதே நீங்களும் உங்கள் எண்ணங்களும்தான்.

உலகை ஆள்பவர்கள் ஆன்மீக அறிவில் ,அறிவியலில் சிறந்தவர்கள் இது கசப்பான உண்மையும் கூட.

உலகில் எங்கு மனிதர்களின் எண்ணங்கள் போலி கடவுள்களை மறந்து உண்மையான உணர்வு நிலை அதிகரிக்கிறதோ .அதை இறைசக்தி, பிரபஞ்சம் உணர்வதற்கு முன் இவர்கள் உணர்வார்கள் அறிவியல் துணை கொண்டு.

எல்லா உணர்வுகளுக்கும் ஒரு அதிர்வலைகள் (Vibration) உண்டு. அவை பிரபஞ்ச சக்தியோடு சேரும் போது அதற்கான பதில்கள் கிடைக்கும்.

ஆனால் இதை இவர்கள் வேறு விதமான பயன்படுத்துகிறார்கள். போர்கள், பெண்கள், குழந்தைகள் மீது வன்முறை , குடும்ப அமைப்பை சீர்குலைப்பது இது போல. மனிதனின் உலவியல் ரீதியில் திசைதிருப்புவார்கள். பிறகு நல்ல அதிர்வலைகள் குறையும். இவர்களை யாரும் அசைக்க முடியாது.

தன்னலமற்ற சில மனிதர்கள் கடைசிவரை சென்று அடுத்த தலைமுறைக்கு இந்த அதிர்வலைகளை கடத்துவார்கள். இதில் நீங்கள் யார் என்று முடிவு செய்து கொள்ளுங்கள். வரலாறு முழுக்க இதுதான் நடந்தது நடக்கவும் போகிறது.

புரிந்தவர்களுக்கு தலை வணங்குகிறேன்...

வரும் ஞாயிறு 12-8-18 அன்று தெரிக்க விடக் காத்திருக்கும் இளைஞர்கள்.. தரமான முடிவு... த்தூ_தினத்தந்தி...


தோழர் திருமுருகன் காந்தி கைது : தமிழ்நாடு அரசின் சனநாயகப் பறிப்பு தீவிரமாகிறது...


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் கண்டனம்...

மே பதினேழு இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களை நேற்று (09.08.2018) பெங்களுரு வானூர்தி நிலையத்தில், தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்து, சிறையிலடைக்க சென்னை கொண்டு வந்திருப்பது முற்றிலும் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும், இந்தியக் குற்றவியல் மற்றும் தண்டனைச் சட்டங்களுக்கும் எதிரான செயலாகும்! இச்செயல் சனநாயக விரோதமானது மட்டுமல்ல, தமிழின உரிமைகளுக்கும் எதிரானது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அறப்போராட்டம் நடத்திய மக்கள் மீது மனிதவேட்டை நடத்துவது போல், காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி 15 பேரை சுட்டுக் கொன்றும், சற்றொப்ப 80 பேருக்கு படுகாயங்களை உண்டாக்கியும் தமிழ்நாடு காவல்துறை வன்முறை வெறியாட்டம் நடத்தியது. இந்த மனித உரிமை மீறலையும், சென்னை – சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தோரைக் கைது செய்த தமிழ்நாடு அரசின் சனநாயக விரோதப் போக்கையும் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தோழர் திருமுருகன் காந்தி எடுத்துக்கூறி, நீதிகேட்டதுதான் அவர் செய்த “குற்றம்”.

ஐ.நா. மன்றத்தின் சட்டதிட்டங்கள்படி ஒரு நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல்களை அந்நாட்டு மக்கள் வெளிப்படுத்துவதற்கு மனித உரிமை மன்றம் வாய்ப்பளிக்கிறது. ஐ.நா. மன்றத்தின் இச்சட்டம் இந்திய அரசு ஏற்றுக் கொண்ட சட்டமாகும். இச்சட்டத்தின்படிதான் திருமுருகன் காந்தி பேசியிருக்கிறார். திருமுருகன் காந்தியின் மேற்படி உரையை மே பதினேழு இயக்கத்தினர் தங்களின் முகநூலில் வெளியிட்டார்கள் என்றும், அதைப் பார்த்த தமிழ்நாட்டைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க.வினர் சென்னை காவல்துறையில் புகார் கொடுத்தார்கள் என்றும், அந்தப் புகாரின் அடிப்படையில் திருமுருகன் காந்தியைக் கைது செய்திருப்பதாகவும் காவல்துறை கூறுகிறது.

அண்ணா தி.மு.க.வினர் புகார் அளித்திருப்பதால், திருமுருகன் காந்தி பேச்சு சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை உருவாக்கும் என்று கருதி, அவரைக் கைது செய்திருப்பதாகக் கூறுகிறார்கள். திருமுருகன் காந்தி பேச்சால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை எழும் என்று கூறும் காரணம், எவ்வளவு போலியானது – புனைவானது என்பது எல்லோருக்கும் புரியும்! அவர் ஐ.நா. அவையில் பேசிவிட்டு வந்த, இந்த இடைப்பட்ட ஒரு மாத காலத்தில் அவரால் எந்த சட்டம் ஒழுங்குப் பிரச்சினையும் எழவில்லை! இது ஒரு அடிப்படையற்ற கற்பனை என்பதற்கு இதுவே சான்று!

தமிழ்நாடு அரசின் இந்தப் புதிய போக்கை ஏற்றுக் கொண்டால், யார் வேண்டுமானால் யார் மீதும் பொய் புகார் கொடுக்கலாம், அந்த அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறையினர் அவர்களைக் கைது செய்யும் என்ற நிலை ஏற்படும்.

தமிழ்நாடு அரசு நடுவண் அரசின் அறிவுறுத்தலோடு தொடர்ந்து தமிழ்நாட்டில் சனநாயக உரிமைகளையும் மனித உரிமைகளையும் பறித்து வருகிறது. அதன் ஒரு பகுதிதான் திருமுருகன் காந்தி கைது! இச்செயல்களால் தமிழ்நாடு அரசு, மேலும் மேலும் தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அந்நியப்பட்டு வருகிறது என்ற உண்மையை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

சனநாயக உரிமைகள், மனித உரிமைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழர்களின் குடிமை உரிமைகள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு தொடர்ந்து பறித்து வருகிறது. பணயக் கைதிகள் போல், மக்களை தன் ஏவலுக்கும் கண்காணிப்புக்கும் கட்டுப்பட்டவர்களாக வைத்துக் கொள்ள தமிழ்நாடு அரசு முனைகிறது.

எனவே, மக்கள் உரிமையில் அக்கறையுள்ள அனைவரும் சனநாயக உரிமைகளை மீட்கவும், தோழர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தியும் மக்கள் திரள் அறப்போராட்டங்கள் நடத்த வேண்டிய தேவை உள்ளது.

தமிழ்நாடு அரசு, தனது சனநாயக விரோத நடவடிக்கைகளைக் கைவிட வேண்டுமென்றும், தோழர் திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்...

இடைத்தேர்தல் பரிதாபங்கள்...