29/10/2018

எப்பவும் நாங்க தனித்துத்தான் போட்டியிடுவோம். யாருக்கு தலையாவோ வாலாவோ இருக்க மாட்டோம். யாரோடும் கூட்டணி கெடையாது - சீமான்...


இத கேட்கும்போது பயங்கர உணர்ச்சி வரும். ஆகா சீமானிசம் என பொங்கும். ஆனா கொஞ்சம் யோசிச்சா, மலர்ந்து வரும் தமிழ்த்தேசிய இளைஞர்களை எப்படி செல்லாக்காசாக்கும் திட்டம் என தெரியும்.

சீமான் இந்தியாவை எதிர்த்து கொரில்லா யுத்தம் நடத்தினால் சிறு எண்ணிக்கை ஆட்களே போதும். நடப்பது ஓட்டரசியல். இங்கே 45 சதம் வாக்கு வாங்கினாலே வாழ முடியும்.

சீமான் ஒரு சத வாக்கை வைத்துக்கொண்டு தனித்து நிற்போம் , இறங்கி அடிப்போம் என்பதன் பின்னணியில்,

ஈழத்தில் பிரபாகரனை தனிமைப்படுத்தி அழித்தொழித்தது போல், தமிழ்நாட்டிலும் தமிழ்த்தேசிய இளைஞர்களை பிற கட்சிகளுடன் இணைந்து வெல்லாமல், தனிமைப்படுத்தி ஓட்டரசியலிலும் அழித்தொழிக்கும் திட்டமே...

கன்னட ஈ.வே. ராமசாமி எனும் பெரியார் கம்பனி கும்பல்களின் திராவிட பகுத்தறிவு யாதெனினில்...


கருணாநிதி ராமானுஜரை புரட்சியாளர் என்று சொல்லி தொடர் எழுதலாம்..

அவர் மகன் சாய்பாபா படத்தை தன் அலுவலக மேசையில் வைக்கலாம்..

அவர் குடும்பத்தினர் கோயில் கோயிலாக போய் பூசை செய்யலாம்..

கலைஞர் டிவியில் தீபாவளி திருநாள் கொண்டாடலாம்..

அதெல்லாம் கண்டு கொள்ளக் கூடாது.. கேள்விக்கு உட்படுத்தக்கூடாது..

ஆனால் தமிழன் எது செய்தாலும் அதை மூடநம்பிகை என்று சொல்லனும் கேலி செய்யனும் கேள்விக்கு உட்படுத்தனும்..

அப்போ தான் நாமும் கன்னட ஈ.வே. ராமசாமி போல் தமிழனை ஏமாற்றி பிழைப்பை நடத்த முடியும்...

எவனை ஒழிக்கிறோமோ இல்லையோ இவனுங்கள ஒழிச்சே ஆகணும்... தடம் தெரியாம அழிக்கனும்...

தமிழ் மெய்யியலை மீட்கிறேன் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு சில லேகிய வியாபாரிகள் இன்று தமிழ்நாட்டில் உலாவி வருகிறார்கள்...


வட இந்தியாவில் பாதாஞ்சலி போலிச் சாமியார் பாபா ராம்தேவ் எவ்வாறு தன்னை ஒரு ஆன்மீகவாதி என்று சொல்லிக் கொண்டு கோடி கோடியாய் சம்பாரித்தானோ அதே போல தமிழ் நாட்டிலும் சிலர் கிளம்பியுள்ளார்கள்.

இவர்களை போலிகள் என்று எவ்வாறு கண்டு பிடிப்பது?

மிக எளிது, சிவ வழிபாடு/சித்தர் மார்க்கம் என்றெல்லாம் வாய் கிழியப் பேசும் அவர்களிடம் போய், ஐயா சிவலிங்கம் என்றால் என்ன? என்ற ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டுப் பாருங்கள்.

முதலில் தயங்குவார்கள். நீங்கள் விடாப்பிடியாக பதில் வேண்டும் என்று நின்றால் அவர்கள் ஒரு நீண்ட நெடிய விளக்கத்தைக் கொடுக்கத் தொடங்குவார்கள்.

அதாவது அண்ட சராசரம், பிரபஞ்சம், அண்டவெளி, யோகி, சித்தன், குண்டலினி, விண்வெளி என்றெலாம் சுத்தி வளைத்து கடைசியில் லிங்கம் என்றால் சிவனின் மொத்த உருவம் என்று கொண்டு வந்து முடிப்பார்கள்.

கடைசிவரை சிவன்/சிவம் என்றால் என்னவென்றே சொல்லமாட்டார்கள்.

பாபா ராம்தேவ், ஆசாரம் பாபு, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ் என அனைவரும் இந்த ரகம் தான்.

சங்கராச்சாரி முதல் நித்யானந்தா வரை இதே கதை தான்.

சிவன்/சிவம் என்றாலே என்னவென்று விளங்கிக் கொள்ள முடியாத முண்டங்கள் சிவலிங்கம் என்றால் என்ன என்று எப்படி விளக்குவார்கள்?

இவர்களைப் பொறுத்தவரை தமிழ் மெய்யியல் என்றால் தமிழ் மந்திரங்கள் மூலம் ஒரு கல்லைக் கும்பிடுவது. அவ்வளவே.

ஏண்டா.. மெய் என்றால் உடல் என்று தானே பொருள். அப்போ மெய்யியல் என்றால் உடலியல் என்று தானே பொருள்படும்?

உடலின் இயக்கத்தை நன்கு புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப வாழ்வியலை நெரிப்படுத்திக் கொள்வது தானே மெய்யியலைக் கடைபிடிப்பது என்று பொருள்?

அதை விடுத்து வேறு ஏதோ விளக்கம் கொடுக்கிறீர்களே, நீங்கள் எல்லாம் யார்? தெரிந்து தான் பேசுகிறீர்களா? இல்லை தெரியாமல் உளருகிறீர்களா?

தெரியாமல் உளறினால் மன்னிக்கலாம். ஆனால் தெரிந்தே மறைத்தால் நீங்கள் யாரோ ஒருவரின் கட்டளைக்கு அடிபணித்து தானே செயல்படுகிறீர்கள் என்று பொருள்?

இந்த லட்சணத்தில் புத்தகம் வேறு வெளியிட்டு காசு பார்க்கிறார்கள் பரதேசிகள்.

நானும் பலபேரிடம் சென்று சிவலிங்கம் என்றால் அது மேல்தோல் நீக்கப்பட்ட (சுன்னத் செய்யப்பட்ட) ஆண்குறி தான் என்று ஆதாரத்தோடு நிரூபித்தேன்.

ஆனால் என் இளம் வயதைக் காரணம் காட்டி “சித்தர் மரபைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது தம்பி” என்று தட்டிக்கழித்தால் என்ன அர்த்தம்?

நீங்கள் ஏதோ செயல்பாட்டோடுதான் இயங்குகிறீர்கள் என்றுதானே அர்த்தம்?

தமிழ்ச் சமயத்தை அழித்தொழிக்க எதிரிகள் முதலில் எடுத்த ஆயுதம் சிலை வழிபாட்டை ஆதரித்த பௌத்த மதம் ஆகும்.. அடுத்து ஜைனம்.. குத்துயிரும் குலையுயிருமாக இருந்த தமிழ்ச் சமயத்தை அடுத்து வந்த சைவமும் வைணவமும் தமிழில் பாட்டுபாடியே கொன்றன. அதற்குப் பெயர் பக்தி இயக்கமாம்.. கொலைகாரப் பாவிகளே..

ஆனால் எதிரிகள் சற்றும் எதிர்பார்க்காத வண்ணம், பண்டைய தமிழ்ச் சமயமானது இன்று குல தெய்வ வழிபாட்டோடு தொடர்புடைய சேவல்/கிடாய் வெட்டு மட்டும் முடி இறக்குதல் ஆகியவை மூலம் இன்று நம் குடும்பங்களில் உயிர்த்தெழுந்தது.

இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத எதிரிகள் இந்து மதம் என்று ஒன்றை செயற்கையாய் உருவாக்கி, ராமன், கிருஷ்ணன், நேற்று முளைத்த சாய் பாபா போன்ற சிலைகளை நம் வீட்டுக்குள் இன்று வலியத் திணித்து வருகிறார்கள்.

அதிமுக அம்மையாரின் கடந்த ஆட்சியில் சேவல்/கிடாய் வெட்டுக்கு போடப்பட தடையை நினைவு கூறவும்.

சரி, இதற்கும் சிவ லிங்கத்துக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா?

தொடர்பு இருக்கு, அதாவது “சிவம்” என்றால் நாம் வைக்கும் படையல் என்று தான் பொருள்.. முதன் முதலில் சேவல்/கிடாயை வெட்டி படையல் வைத்தனர். அப்படையலில் இரத்தமும், சதையும் சிவப்பாகத்தனே இருக்கும். அதனால் தான் அப்படையலுக்கு சிவம் என்று பெயர்.

இந்த உண்மையை மறைக்கத்தான் நாயன்மார்கள் பாடிப் பாடியே சைவம் என்ற ஒன்றை வளர்த்தார்கள்.

சிவலிங்கம் என்றால் மேல் தோல் நீக்கப் பட்ட ஆண்குறி என்று தான் பொருள்.
சிவ + ஆள் + அங்கம் = சிவாளங்கம் => சிவாலிங்கம் => சிவலிங்கம்.

அதாவது சேவல்/கிடாய் வெட்டுக்கு ஒரு படி மேலே போய், பாலை நில ஆண்கள் தங்கள் ஆண்குறிகளின் மேல்தோலையே அறுத்துக் கொண்டு அதைப் படையலாக (சிவமாக) கொற்றவைக்கு வைத்தனர்.

இவ்வாறு மேல் தோல் நீக்கப்பட்ட (சுன்னத் செய்யப்பட்ட) ஆண்குறிக்குப் பெயர் தான் சிவலிங்கம்.

பலி கொடுத்து அதைப் படையல் வைப்பதற்குப் பெயர் தான் சிவவழிபாடு.

இதை நாம் அடுத்த தலைமுறைக்கு ஒரு புத்தகத்தில் எழுதிவைத்துக் கடத்தவில்லை. ஆனால் ஒரு கல்லில் சிவலிங்கத்தைச் செதுக்கி வைத்து அடுத்த தலைமுறை ஆண்களுக்கு கொற்றவை வழிபாட்டின் நுட்பத்தைக் கடத்தி வந்தோம்.

இது மட்டும் அல்ல, நுட்பத்தைக் கடத்த சூலத்தையும் நாம் குல தெய்வக் கோவில்களில் நட்டு வைத்தோம்.

இவை எல்லாம் எதற்கு என்றால் ஆண்கள் சிவவழிபாட்டை விட்டுவிடக் கூடாது என்பதால் அதை நினைவுப் படுத்திக் கொண்டே இருப்பதற்காகத் தானே தவிர கோவில் கட்டி கும்பாபிசேகம் செய்வதற்கு அல்ல.

இன்று சிவவழிபாட்டை விடாமல் செய்பவர்கள் உலகத்தில் இருவர் மட்டுமே.

ஒருவன் தமிழன், மற்றொருவன் இசுலாமியன்.

இந்த உண்மையைச் சொன்னால் சில லேகிய வியாபாரிகள் நம்மை இசுலாமியக் கைக்கூலி என்கின்றனர்.

இசுரேலிய யூதர்களும் சுன்னத் செய்கிறார்களே? அப்போ அவர்கள் சிவவழிபாடு செய்யவில்லையா? என்றால் இல்லை என்று தான் நான் சொல்வேன்.

இதைப் பற்றியும் சூலம் பற்றியும் விரிவாக அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

இந்த சிவலிங்க நுட்பத்தை எவன் எவன் எல்லாம் பூசி முழுகி மறைக்கப் பார்க்கிறானோ, அவர்கள் அனைவரும் வியாபார நோக்கம் கொண்டவர்கள்.

சாமியார் வேடம் போட்டு ஏமாற்றும் லேகிய வியாபாரிகள். அவ்வளவே..

 - சிவகுமார் அவர்களின் பதிவிலிருந்து..

கீழே சில பழமையான சிவலிங்க உருவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரங்கள்:

1 - Sri Parasurameswara Temple, Gudimallam, Andhra Pradesh. Second Century B.C.

2 - Vishnupad Temple, Gaya, Bihar.

3 - Ek Mukha Lingam, Aghapura, Bharatpur, Rajasthan. First Century A.D.

4 - Aradhanarishwara Temple, Indabettu, Dakshina Kannada, Karnataka. Second Century B.C...

கணவன் உண்ட அதே இலையில் மனைவி உண்டால் ஆணாதிக்கமா....


கணவன் உண்ட அதே இலையிலோ அல்லது தட்டிலோ மனைவி உண்ண காரணம்..

கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான்...

அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம், பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.

கணவனில் எச்சிலில் இருக்கும் புதிய மரபணுக்கள் சாப்பாட்டின் மூலம் மனைவியின் உடலில் கலந்து அது அவள் பாலூட்டும் குழந்தைக்கு கிடைக்கவே (ஜீன் அப்டேசன்) இந்த ஏற்பாடு..

என்ன தான் கணவனின் மரபணு குழந்தைக்குள் இருந்தாலும் அது சமீபத்திய மேம்படுத்தவே இந்த ஏற்பாடு.

மேலும் இது வயிற்றிற்குள் இருக்கும் குழந்தையின் முதல் ஆறு மாதத்திற்குள் உண்டாகும் வளர்சிதை மாற்றங்களுக்கும், பிறந்தபின் முதல் ஆறு மாதங்களுக்கு ஏற்படும் வளர்ச்சிக்கும் மிக மிக அத்தியாவசமாகிறது என்று மேல்நாட்டு அறிவியல் வல்லுனர்கள் கண்டறிந்து ஆச்சரியப்படுகின்றனர்...

இப்பொழுது சொல்லுங்கள் கணவன் உண்ட அதே இலையில் மனைவி உண்டால் ஆணாதிக்கமா?

ஆம் நான் இனவாதி தான்...


நான் ஏன் இனவாதியானேன்?
ஏன் எனக்கு திராவிடம் முதல் எதிரி?

தமிழகத்தின் வடக்கெல்லை வேங்கடம் முதல் தெற்கெல்லை குமரி வரை தெலுங்கன், கன்னடன், மளையாளிகளிடம் பறிபோக மிச்சமிருக்கும் கோவனத்துண்டு தமிழகத்தின் நிலமும், வணிகமும், அரசியலும் வீட்டில் தெலுங்கும் வெளியில் தமிழும் பேசும் ஜரிகை தலைப்பாகை வந்தேறிகளின் வசமானது எப்படி?

ஆரியர் அடிமைப்படுத்திய வரலாற்றைப் பேசும் திராவிடப் பொரச்சியவாதிகளின் நொள்ளைக் கண்களில் 14ம் நூற்றாண்டு முதல் 19ம் நூற்றாண்டு வரை ஆண்டு அடிமைப் படுத்திய நாயக்கர்கள் வரலாறு தென்படுவதில்லையே எப்படி?

ராசராசன்களைத் தோண்டியெடுத்து போஸ்ட்மார்டம் செய்து வர்ணாசிரமவாதி என ஆய்வறிக்கை வழங்கும் திராவிட பகுத்தறிவுப் பொங்கப் பானைகள், கர்நாடகத்துக் கடம்ப பேரரசன் மயூரவர்மன் அரசவையில் முதன்முதலில் அரங்கேற்றப்பட்டதே மனுதர்ம சட்டம் என்ற உண்மையை ஒப்புக்கொள்ள மட்டும் முன்வாசலிலும் பின்வாசலிலும் வாழைப்பழத்தைத் தினித்துக் கொண்டு பம்முகின்றனரே எப்படி?

முகமதியர்களின் படையெடுப்புக்கு அஞ்சி வந்தேறிய வடுக இனப்பெண்கள் மேனாமினுக்கி சிலுக்கு உடை தரித்திருக்க, எம்குலப் பெண்கள் ரவிக்கையின்றி தண்ணீர்குடம் சுமக்கப் பணிக்கப்பட்டது எப்படி?

சிலுக்கு உடை மினுக்கிகளின் சொர்கபுரி வாசலுக்குள் எம்மன்னர்களின் சிற்றரசுகள் சமாதியானது எப்படி?

வேட்டைநாய்களுடன் பிழைக்க வந்த வெண்ணைகள் பாளையக்காரனாவும், நிலவுடைமை சமீன்தாராகவும் ஆனதெப்படி?

ஆட்டுத்தலைக்கும், கம்பங்கதிருக்கும், கள்ளுமொந்தைக்கும் ஆதித்தமிழரின் அடிமடி எழுதி வாங்கப்பட்டது எப்படி?

வள்ளலாரும், வைகுண்டரும், இரட்டைமலையாரும் மறைக்கப்பட்டு வடுக இனவெறி பொரச்சியாளர்கள் மட்டும் பெரியார்களாக கட்டமைத்துக் காட்டப்பட்டது எப்படி?

நட்சத்திரங்களையும், காலத்தையும், கோள்களையும், வான்வெளியையும் கணித்து பிரபஞ்சத்தின் அசைவையே ஒற்றை ஓலைக்குள் சுருக்கி எழுதிய எம் சித்தர்களின் அறிவியலும், முன்னோரை வழிபட்ட எம் தமிழ்க்குடியின் மெய்யியலும் குருட்டு பகுத்தறிவாளர்களின் வறட்டு வாதங்களால் மூடநம்பிக்கையாக சித்தரிக்கப்பட்டது எப்படி?

தமிழர்கள் மட்டும் பலியான இந்தியெதிர்ப்புப் போரின் பலன்களை எல்லாம் திராவிடர் மட்டும் அறுவடை செய்தது எப்படி?

பள்ளனும், பறையனும், தேவனும், வன்னியனும், நாடாரும், கோனாரும் வெட்டிக்கொண்டு சாக நாயக்கனும், ரெட்டியும், மார்வாடியும் தமிழ்நிலத்தில் உல்லாச கானம் பாடி உவகையடைவது எப்படி?

தமிழ்ப்பூசாரிகள் உண்டக்கட்டிக்கும், உருண்டைச் சோத்துக்கும் மணியடித்துக் கொண்டிருக்க தமிழகத்திலுள்ள பெரும்பாலான வருமானம் கொழிக்கும் கோயில்கள் தெலுங்குப் பிராமணர்கள் வசமானது எப்படி?

இசைக்கே இலக்கணம் வகுத்துக் கொடுத்த தமிழிசை தெலுங்கிசையாகத் திரிந்து, எங்கள் காதுகளில் பால்டாய்ல் ஊற்றுகிறதே எப்படி?

உலகிற்கே பொதுமறை வகுத்தளித்த எம்பாட்டன்கள் கோலோட்சிய இலக்கிய உலகில், பிறப்புறுப்புகளை வெட்டவெளிச்சாமாக விளிக்கும் சரோஜாதேவி வகையறா வேற்றின இலக்கியவாதிகளே புற்றீசலாகக் கிளம்புவது எப்படி?

தமிழகத்தின் பலம்பொருந்திய திரைஊடகத்தை வந்தேறிகளின் கவர்ச்சிப் பொறியாக்கி தமிழகத்தை ஆளும் வடுகர்களையே பன்றியிட்ட குட்டிகளாய் பிதுக்கித் தள்ளுகிறதே எப்படி?

ஊராட்சி உறுப்பினராவதற்கே தமிழன் ததிங்கினத்தோம் தாளமிட்டுக் கொண்டிருக்க தமிழகத்தின் ஆட்சி அதிகார குடுமி மட்டும் வடுகர்களிடம் சிக்கி சீவி சிங்காரித்து சிரித்து நிற்கிறதே எப்படி?

எல்லாவற்றுக்கும் மேலாக, போர்தொடுத்த இந்தியத்திற்கு காட்டியும் கூட்டியும் கொடுத்த திராவிட ஆட்சியாளர்களின் கயமைத்தனத்தை தாங்கமுடியா ஆத்திரத்தில் வெந்து தனிந்த ஈழத்துச் சாம்பல் மேட்டில் நான் தமிழின வெறியனானேன்..

மரணத்திற்குப் பின் என்ன?


ஆழ்மன சக்தியில் ஒன்பது வகை வெளிப்பாடுகளில் ஒன்றாக உடலை விட்டு வெளியேறி அனைத்தையும் காண முடிந்த சக்தியை க் குறிப்பிட்டு இருந்தோம். அப்படி உடலை விட்டு வெளியேறிய பின் காண்பது மட்டுமல்லாமல், கேட்பது, உணர்வது, தகவல்கள் தெரிவிப்பது, அறிந்து கொள்வது போன்றவையும் சாத்தியமாகும் ஆழ்மன சக்தியை சித்தர்கள், யோகிகள், தெய்வீகசக்தி உடையவர்கள் போன்றோர் பெற்றிருந்ததாக பல நாடுகளின் பழங்கால ஏடுகளில் குறிப்புகள் உள்ளன.

ஆனால் சாதாரண மனிதர்கள் உடலை விட்டுப் பிரிவது ஒரே ஒரு சமயத்தில் தான். அது அவரவர் மரண காலத்தில் தான். அந்த சமயத்தில் புலன்கள் வழியாகக் கிடைக்கும் அறிவை ஐம்புலன்கள் உதவியில்லாமலேயே மனிதனால் அறிய முடிகிறது. இதை சொல்வது மெய்ஞான சித்தர்கள் மட்டும் அல்ல. இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சிகளும் தான். இப்படிச் சொல்லும் நிலையை ஆராய்ச்சியாளர்கள் எட்டியது எப்படி என்று பார்ப்போமா?

மரணத்திற்குப் பின் என்ன ஆகிறது என்கிற கேள்வி மனிதன் சிந்திக்க ஆரம்பித்து விட்ட காலத்திலேயே அவனுள் எழுந்த கேள்வி. இதற்குப் பதிலாக பல சித்தாந்தந்தங்களை மனிதன் உருவாக்கி இருந்தாலும் அந்த சித்தாந்தங்கள் சரியா என்று சரிபார்த்துக் கொள்ளுதல் இயலாத காரியமாகவே மனிதனுக்கு இருந்து வந்தது. ஏனென்றால் இறந்து விட்ட பின்னரே தெரிந்து ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள வேண்டிய விஷயங்கள் அவை. இறந்து விட்டாலோ திரும்பி வந்து சொல்லுதல் சாத்தியமில்லை. இந்த சிக்கல் மரணத்திற்குப் பின் என்ன என்ற கேள்வியைப் பெரிய கேள்விக் குறியாகவே மனிதனுக்கு தக்க வைத்து விட்டது.

பெரும்பாலான எல்லா மதங்களும் தங்கள் தங்கள் சித்தாந்தங்களைச் சொல்லி மரணத்திற்குப் பின் இது தான் திட்டவட்டமாக சொன்னாலும் பகுத்தறிவு கொண்ட மனிதன் அது சரியா என்று ஆராய ஆசைப்பட்டான். காரணம் மதங்களின் சித்தாந்தங்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருந்தன. பல அறிஞர்களும் தங்கள் பங்குக்கு சில சித்தாந்தங்களைச் சொன்னார்கள். கிழக்கத்திய நாடுகளில் கூடு விட்டு கூடு பாய்தல், மரணத்திற்குப் பிந்தைய பயணம் போன்ற அமானுஷ்ய பதிவுகள் அதிகமாக இருந்தாலும் மேற்கத்திய நாடுகளில் அது போன்ற பதிவுகள் குறைவே. ஆனாலும் அவையும் இதில் மேற்கொண்டு அறியும் ஆவலைத் தூண்டுவனவாக இருந்தன.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ப்ளேடோ (Plato) என்ற கிரேக்க ஞானி தன் குடியரசு (Republic) என்ற நூலில் ஓரிடத்தில் இறந்து விட்டதாகக் கருதப்பட்ட சிப்பாய் ஒருவன் கொள்ளி வைக்கப்படும் முன் எழுந்து தன் தற்காலிக மரணத்திற்குப் பின் என்ன ஆயிற்று என்று விவரிப்பதாக எழுதியிருக்கிறார். அந்த விவரிப்புகளில் சில பிற்கால விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளிற்கு ஒத்து வருகின்றன.

சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் (Paul Brunton) என்ற இங்கிலாந்து தத்துவஞானி விசேஷ அனுமதி பெற்று பிரமிடின் உள்ளே ஓர் இரவு தனியாகத் தங்கினார். அந்த இரவில் அவர் உடலை விட்டு வெளியேறி தன் உடலைத் தெளிவாகப் பார்த்ததாகத் தெரிவிக்கிறார். பிரமிடுக்குள் அவர் தனியாகக் கழித்த அந்த இரவின் அனுபவங்கள் பற்றி ரகசிய எகிப்தில் ஒரு தேடல் (A search in secret Egypt) என்ற புத்தகத்தில் சுவாரசியமாக எழுதியுள்ளார். அந்த அனுபவத்தில் நம் தற்போதைய அலசலுக்குத் தேவையான மரண் விளிம்பு அனுபவப் பகுதியை மட்டும் பார்ப்போம்......

அவருடைய தசைகள் எல்லாம் இறுக ஆரம்பித்தன. அவருடைய உடல் முழுவதும் பக்கவாதம் வந்தது போல் செயல் இழக்க ஆரம்பித்தது. முழு உடலும் பாறையாக கனக்க ஆரம்பித்தது. உடலில் இருந்து உணர்வுகள் மங்க ஆரம்பித்தன. மரணம் நெருங்குவது போல் இருந்தது. ஆனால் பால் ப்ரண்டனின் தத்துவார்த்தமான பக்குவம் அதற்கு பயப்படவில்லை.

ஒருவித இனம் புரியாத சிலிர்ப்பு தண்டுவடத்தில் கீழிருந்து மேலாகப் பரவி கடைசியில் மூளையில் மட்டும் ஏதோ உணர்வு தங்கியது. பால் ப்ரண்டன் நினைவை இழக்க ஆரம்பித்தார். நினைவினை இழக்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் "நாளை என்னுடைய பிணத்தை இந்தப் பிரமிடினுள் பார்ப்பார்கள். இதுவே என் முடிவு என்ற எண்ணம் வந்து போயிற்று.

உடலெல்லாம் மரத்தாலும் தலையில் மட்டும் லேசான உணர்வு சிறிது நேரம் தங்கியிருந்தது. ஏதோ சூறாவளியில் சிக்கியதைப் போல் ஒரு உணர்வு மூளையில் தங்கி ஏதோ ஒரு துளை வழியாக வெளியேறுவதை பால் ப்ரண்டன் உணர்ந்தார். பின் உடலிலிருந்து பரிபூரண விடுதலை பெற்றது போல் உணர்ந்தார். உடலின் கனம் இல்லாமல் லேசானதைப் போன்று தோன்றிய அந்த நேரத்தில் உடல் தானல்ல என்பது அவருக்குப் புரிந்தது. இவ்வளவு நாள் தான் அடைபட்டிருந்த சிறையாகவே உடல் தோன்றியது. உடலை விட்டு வெளியே வந்திருந்த போதும் இன்னும் எல்லாவற்றையும் காணக் கூடிய சக்தியும், உணரக் கூடிய சக்தியும் தன்னை விட்டு போய் விடவில்லை என்பது புரிந்த போது அவருக்குத் திகைப்பு மேலிட்டது. இன்னும் சொல்லப் போனால் முன்னெப்போதையும் விட உணர்வுகள் கூர்மை பெற்றது போல் தோன்றியது.

அவரால் அவர் உடலைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. கண்கள் லேசாக மூடிய, இரண்டு கைகளையும் மடித்து மார்பில் வைத்திருந்த தன் உடலை அவர் ஆச்சரியத்துடன் பார்த்தார். ஏக காலத்தில் நிற்பதைப் போலவும் மிதப்பதைப் போலவும் அவருக்குத் தோன்றியது......

1944ல் உலகப் புகழ் பெற்ற மனவியல் நிபுணர் கார்ல் ஜங் (Carl Jung) சுவிட்சர்லாந்து மருத்துவமனை ஒன்றில் மாரடைப்பால் தனக்கு ஏற்பட்ட சிறிது நேர மரண அனுபவத்தை விரிவாக தன் சுய சரிதத்தில் எழுதியுள்ளார். அவரது அனுபவமும் பிற்கால ஆராய்ச்சியாளர்கள் தொகுத்த அனுபவங்களோடு ஒருசிலவற்றில் ஒத்துப் போகிறது. அதைவிட சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அவர் உடலை விட்டுப் பிரிந்து இந்த பூமியையே சில மைல்கள் தொலைவில் கண்டதாகக் கூறி அண்டசராசரத்தில் பார்த்த அந்த வியத்தகு காட்சி எப்படி இருந்தது என்றும் எழுதியுள்ளார். அதற்குப் பின் பற்பல ஆண்டுகளுக்குப் பின் விண்வெளிக்குச் சென்று மனிதன் பார்த்த காட்சியும், கார்ல் ஜங்க் கண்ட காட்சியும் ஒத்துப் போனது தான் பெரிய ஆச்சரியம்.

இது போன்ற நிகழ்வுகள் விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களையும் கவர்ந்திருக்க வேண்டும். அவர்கள் இது போன்ற அனுபவங்கள் கற்பனையா இல்லை நிஜமா என்று அறிய விரும்பினார்கள். அதை ஆராய முற்பட்டார்கள். அதற்கு மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்த மனிதர்களின் அனுபவங்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மரணத்திற்குப் பிறகு என்ன என்ற கேள்விக்கு முழுவதுமாய் விரிவான விடை கிடைக்கா விட்டாலும் மரணத்திற்குப் பின் உடனடியாகச் சில நிமிடங்கள் என்ன நடக்கின்றன என்பதை விஞ்ஞானம் ஓரளவு கண்டு பிடித்திருக்கிறது.

இந்த ஆராய்ச்சிகள் தனிப்பட்ட அளவில் அங்கொன்றும், இங்கொன்றும் நடந்து கொண்டிருந்தாலும் மிகவும் பிரபலமானதும், மேலும் அதிக ஆராய்ச்சியாளர்களை ஈர்த்ததும் டாக்டர் ரேமண்ட் மூடி (Dr. Raymond Moody) என்பவர் 1975 ஆம் ஆண்டு எழுதிய வாழ்க்கைக்குப் பின் வாழ்க்கை (Life after Life) என்ற புத்தகம் வெளியான பின்பு தான். மரணத்தின் விளிம்பு வரை வந்து சில வினாடிகள் முதல் ஓரிரு நிமிடங்கள் வரை இதயத்துடிப்பும், மூச்சும் நின்று போய் பின் மறு உயிர் பெற்ற மனிதர்களை மருத்துவமனைகளின் ஆவணங்கள் மூலம் கண்டறிந்து பேட்டி எடுத்து அவற்றை மீண்டும் சிகிச்சை செய்த மருத்துவர்களின் கருத்துகளுடன் ஒப்பிட்டு ரேமண்ட் மூடி ஆழமான ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். மரணத்தை எட்டிப்பார்த்த 150 நபர்களை வைத்து பல ஆண்டுகள் தொடர்ச்சியாகச் செய்த ஆராய்ச்சிகளை தன் புத்தகத்தில் விரிவாக ரேமண்ட் மூடி எழுதியிருக்கிறார். மரண விளிம்பு அனுபவம் (NDE-Near Death Experience) என்ற சொற்றொடரை முதலில் உபயோகப்படுத்தியது ரேமண்ட் மூடி தான். அந்த தொடரே இன்று வரை இது குறித்து ஆராயும் ஆராய்ச்சியாளர்களால் பயன்படுத்தப்படுகிறது.

அவர் ஆராய்ச்சி செய்த அந்த 150 பேருமே பல தரப்பட்ட மனிதர்கள். ஆனால் அவர்கள் சொன்ன அனுபவங்களில் சில அனுபவங்கள் ஒரே மாதிரியாக இருந்தன. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த அந்த மனிதர்கள் சந்தித்த அனுபவங்களில் முக்கியமாக ஒன்பது அம்சங்கள் ஒன்றுபட்டதை அவர் தன் நூலில் வியப்புடன் கூறுகிறார். அவை என்ன தெரியுமா?

மேலும் பயணிப்போம்....

திராவிட வட்டிக்கடை திக வீரமணியின் வண்டவாளங்கள்...


திராவிட கபோதிகளும், அந்த கபோதிகளின் இயக்கங்களும் (தமிழ்) பொது மக்களிடம் நன்கொடை, கட்சி நிதி, மேடை ஏறி புரட்சி செய்ய 'புரட்சி ஃபீஸ்' என்ற பெயர்களில் எல்லாம் பணம் பறித்து, அதை தங்கள் சொந்த கணக்கில் வங்கிகளில் சேர்த்து, கோடிகள் பல ஆயிரம் குவிந்ததும், வாரீசாக பதினெட்டு வயது பருவ அழகிகளை மணந்தோ, மனைவியாக்கியோ, துணைவியாக்கியோ, இணைவியாக்கியோ சென்ற வரலாற்றின் தொடர்ச்சி இது..

ஈவெ ராமசாமி தமது காலத்தில் இப்படியாக வசூலித்து குவித்த பல கோடி ரூபாய் சொத்துக்கள் அசையும் வண்ணமும், அசையா வண்ணமும் தமிழ்நாடு முழுதும் பரவிக் கிடப்பதை அறிவோம்.

ஈவெராவுக்கு பின்னர் சொப்பன சுந்தரியின் கார் மற்றும் சொப்பன சுந்தரி சகிதம் 'மணியம்மையாக' வீரமணியை அடைந்தது. பாவம், ஈவெ ராம்சாமி 'அந்த டைவர்சன்' எடுக்காமலேயே நேரடியாக வீரமணியிடம் ஒப்படைத்து இருக்கலாம்.

இப்படியாக பேக்கரி டீலிங் மூலம் தன்னை அடைந்த சொத்தை  வீரமணி முறைகேடாக பயன்படுத்துகிறார் என்றெல்லாம் குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து வந்தது நினைவில் இருக்கலாம்.

முறைகேடாக தம்மை வந்து அடைந்த சொத்தை எப்படியெல்லாம் அனுபவிக்கிறார் வீரமணி என்பதை இங்கே ஆதாரத்துடன் காணலாம்.

வீரமணி 'குடும்ப குத்து விளக்கு' என்கிற பெயரில் ஒரு கந்து வட்டிக்கடையும், 'திராவிடன்' என்கிற பெயரில் ஒரு பைனான்சும், வேறு ஒரு திராவிடன் என்கிற பெயரில் சீட்டு நிறுவனமும் நடத்துகிறார். இவை 'பெரியார் திடலிலேயே' இயங்குகின்றன.

ஆனால் இவை பெரியார் அறக்கட்டளை போன்ற எந்த பொது ட்ரஸ்ட்டையும் சார்ந்தது அல்ல. இவை அனைத்தும் வீரமணி என்கிற தனி நபருக்கு சொந்தமானது.

மேலும் வீரமணி பெயரில் 'சூர்யா ட்ரேடிங்' எனும் பெயரில் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் ஒன்று அடையாரில் இயங்குகிறது.

வீரமணியின் குடும்பத்தார் பெயரில் மட்டும் ஆறு, ஏழு நிறுவனங்கள் இயங்குகின்றன.

இதன் பங்குதாரர்களாக மைலாப்பூர் ஸ்ரீ ராமன் ஐயர் துவங்கி, வடநாட்டு சேட்டுகளும், மிட்டல்களும் இருக்கிறார்கள்.

சில கம்பெனிகள் வீரமணியின் மனைவி மோகனா பெயரிலும், சில வீரமணியின் மருமகள் சுதா குமாரி பெயரிலும், சில வீரமணியின் மகன் அன்புராஜ் பெயரிலும் இயங்குகின்றன.

வீரமணியின் மகன் அன்புராஜின் பெயரில் மட்டும் நான்கு நிறுவனங்கள் பதிவாகி இருக்கின்றன, அவற்றில் மூன்று பெரியார் திடலில் இயங்குகிறது.

இவர்களுடைய நிறுவனங்களில் இயக்குனர் கம் பங்குதாரர்களாக இருக்கும் பிராமண, வடுக மற்றும் பனியாக்கள் பெயர்களில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள எண்ணற்ற பிற சகோதர (சிஸ்டர் கன்சர்ன்ஸ்) நிறுவனங்கள் இயங்குகின்றன. அதிலெல்லாம் வீரமணிக்கும் பங்கு இருக்கிறதா என்பது தெளிவாக தெரியவில்லை.

வீரமணியின் நேரடி பார்ட்னர்களில் பலர் 'பிள்ளைவாள்', வீர சைவ 'பண்டாரம்', அகர்வால் பனியாக்களான 'மிட்டல்' போன்ற சாதிப் பெயர்களை தங்கள் பெயர்களில் தாங்கி நிற்கிறார்கள்.

மேலும் இந்த நிறுவனங்களோடு ஏதோ ஒரு வகையில் (சிஸ்டர் கன்சர்ன்ஸ்) தொடர்புடைய பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பிற நிறுவனங்கள் 2007 க்கும் 2010க்கும் இடைப்பட்ட காலங்களில் தான் மத்திய கார்ப்பரேட் கம்பெனிகளின் சட்டத்தின் கீழ் பதிவாகி இருக்கின்றன.

இந்த காலத்தில் தான் ஈழம் வீழ்ந்தது என்பதும், ஈழம் வீழ்ந்த பின்னரும் திமுக-காங் கூட்டணிக்கு வீரமணி ஒட்டு சேகரித்ததையும் இங்கே பொருத்தி பார்க்க வேண்டும்.

வீரமணி குடும்பத்தாரின் பல நிறுவனங்களில் பங்குதாரராக இருக்கும் ராஜரத்தினம் சங்கரலிங்கம் பார்ப்பனிய நிறுவனமான ஸ்ரீராம் குருப்பிலும் முக்கியமான இயக்குனர்-பங்குதாரராக இருக்கிறார்.

இந்த ராஜரத்தினம் சங்கரலிங்கத்தின் பெயரில் மட்டும் பத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் (ஸ்ரீராம் குருப், விஷ்வபிரியா இந்தியா, மெப்கோ இண்டஸ்ட்ரீஸ், விஷ்வப்ப்ரியா பைனான்ஸ்  மற்றும் வீரமணி குடும்பத்தின் டிபிஐ மற்றும் விப்ஜியார் போன்ற) பதிவாகி இயங்குகின்றன.

இதே போல சந்தேகத்துக்குரிய மற்ற இயக்குனர்கள் கம் பங்குதாரர்கள் அனந்தகிருஷ்ணன், சிவஷங்கர், வெங்கடபதி போன்றோர். இவர்கள் ஒவ்வொருத்தரின் பெயரிலும் ஐந்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்குகின்றன.

வெளிப்படையாக (வெள்ளையாக) இயங்கும் வீரமணியின் நிறுவனங்களின் லட்சணம் இப்படியென்றால் கருப்பில் இயங்கும் வீரமணி குடும்பத்தாரின் நிறுவனங்கள் குறித்து ஊகிக்க தேவையில்லை.

இவை மட்டும் அல்லாது ஏழை பாழைகளின் வயிற்றில் அடிக்கும் சுயநிதி கல்லூரிகள், பெரியார் கெமிகல்ஸ், பெரியார் பிளாசா, பெரியார் பால் பண்ணை, பெரியார் கணினிக் கல்லூரி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி, பெரியார் ஆங்கிலக் கல்வி பயிலகம், பெரியார் மகளிர் பாலிடெக்னிக், மகளிர் தொழில் பயிலகம் என்று ஏழைகளிடம் பண மோசடி செய்யும் எண்ணற்ற தொழில்கள்.

குடும்ப குத்து விளக்கு, மாங்கல்யம், சாந்தி முகூர்த்தம் என்ற பெயர்களில் எல்லாம் கந்துவட்டி கடை நடத்தும் வீரமணிக்கும் முற்போக்குக்கும், பகுத்தறிவுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

இதை ஒத்த மற்றும் இதற்கும் மேலான விமர்சனங்களை அன்று வீரமணி மீது  சுமத்தி விட்டு, ஈவெகி  சம்பத் சாலையை விட்டு வெளியேறிய 'மற்ற மணிகள்' இன்று தமிழின எழுச்சி கண்டு, மிரண்டு, பதறி, பெரியார் திடல் நோக்கி பின்னங்கால் பிடரியில் அடிக்க பாய்ந்து செல்வது வேடிக்கை.

கீழே வரும் வாசகம் ஒரு முறை கி. வீரமணி, சன் தொலைக்காட்சி பேட்டியில் சொன்னது ''ஒரு அறக்கட்டளையின் பணம் என்பது பொதுப்பணம். கோடிகள் இருப்பது பற்றி யாருக்கும் மறுப்பு இல்லை. அந்தக் கோடியை வைத்துக் கொண்டு நாங்கள் யாரும் வட்டிக்கு விட்டு சம்பாதிப்பதில்லை. பொதுப்பணிகள் செய்கிறோம்.

பதிவு - தோழர் கிரிஷ்ணா தமிழ்ப்புலி.

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க...


பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பெரியோர் வாழ்த்துகின்றனரே.. அந்தப் பதினாறு எவை எவை என்று தெரிந்து கொண்டால் நலமாயிருக்கும் அல்லவா...

அதன் விளக்கம் பின்வருமாறு...

1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி)

2.குறையாத வயது (நீண்ட ஆயுள்)

3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்)

4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்)

5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை)

6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை)

7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை)

8.அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி)

9.தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத குழந்தைகள்)

10.தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்)

11.மாறாத வார்த்தை (வாய்மை)

12.தடைகள் வராத கொடை (இல்லையென்று சொல்லாத உதவி)

13.தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழக்கம்)

14.கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்)

15.உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு)

16.துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை)

இந்த பதினாறும் பெற்று வாழ்ந்தாலே பெருவாழ்வு வாழ முடியும் என்று நம் முன்னோர்கள் கூறினர்...

தமிழ்நாட்டை ஏன் தமிழனே ஆள வேண்டும்...


ஓர் உணர்வுள்ள தமிழன் தமிழ்நாட்டை ஆளாததால் உலக அதிசயங்களில் இடம் பெறாமலும் மராத்திய வந்தேரி அரங்காவலராகவும் உள்ள தமிழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில்..

இதை படிப்பதற்கே தலை சுற்றுகிறது ,
இது எப்படி சாத்தியமானது ?
கோயில் எப்படி கட்டப்பட்டது ? என்ற தகவல் உங்களுக்காக.

படிப்பதற்கு பெரியதாக உள்ளது என பாதியில் நிறுத்திவிட வேண்டாம்.. இதை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ளவேண்டும் .

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.

தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.

இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..

பெரிய கோயில் அளவுகோல்…

எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழமே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.

தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.

இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. சுமார்

1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு :

180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.

அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தர் என்று தெரிகிறது.

சாரங்களின் அமைப்பு :

கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் – ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் – சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.

இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.

இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் (நஇஅஊஊஞகஈ) அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் (யஉதபஐஇஅக டஞநப), நேர்ச்சட்டங்கள் (தமசசஉதந), குறுக்குச் சட்டங்கள் (ஆதஅஇஉந) அனைத்தும் முட்டுப் பொருத்துகள் (இஅதடஉசபதவ ஒஞஐசபந) மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள உதவின.

அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.

மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதது...

ஆரியம் - திராவிடம் - தலித்தியம் - கம்யூனிசம் அனைத்துமே தமிழர்களுக்கு எதிரானதே....


ஒரு தலித்துக்கு தெரிகிறது தான் தமிழர் இல்லை தாழ்த்தப்பட்ட தெலுங்கர் என்று..

ஆனால் தாழ்த்தப்பட்ட தமிழருக்கு தெரிவதில்லை தான் தலித் இல்லை தமிழர் என்று...