திராவிட கபோதிகளும், அந்த கபோதிகளின் இயக்கங்களும் (தமிழ்) பொது மக்களிடம் நன்கொடை, கட்சி நிதி, மேடை ஏறி புரட்சி செய்ய 'புரட்சி ஃபீஸ்' என்ற பெயர்களில் எல்லாம் பணம் பறித்து, அதை தங்கள் சொந்த கணக்கில் வங்கிகளில் சேர்த்து, கோடிகள் பல ஆயிரம் குவிந்ததும், வாரீசாக பதினெட்டு வயது பருவ அழகிகளை மணந்தோ, மனைவியாக்கியோ, துணைவியாக்கியோ, இணைவியாக்கியோ சென்ற வரலாற்றின் தொடர்ச்சி இது..
ஈவெ ராமசாமி தமது காலத்தில் இப்படியாக வசூலித்து குவித்த பல கோடி ரூபாய் சொத்துக்கள் அசையும் வண்ணமும், அசையா வண்ணமும் தமிழ்நாடு முழுதும் பரவிக் கிடப்பதை அறிவோம்.
ஈவெராவுக்கு பின்னர் சொப்பன சுந்தரியின் கார் மற்றும் சொப்பன சுந்தரி சகிதம் 'மணியம்மையாக' வீரமணியை அடைந்தது. பாவம், ஈவெ ராம்சாமி 'அந்த டைவர்சன்' எடுக்காமலேயே நேரடியாக வீரமணியிடம் ஒப்படைத்து இருக்கலாம்.
இப்படியாக பேக்கரி டீலிங் மூலம் தன்னை அடைந்த சொத்தை வீரமணி முறைகேடாக பயன்படுத்துகிறார் என்றெல்லாம் குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து வந்தது நினைவில் இருக்கலாம்.
முறைகேடாக தம்மை வந்து அடைந்த சொத்தை எப்படியெல்லாம் அனுபவிக்கிறார் வீரமணி என்பதை இங்கே ஆதாரத்துடன் காணலாம்.
வீரமணி 'குடும்ப குத்து விளக்கு' என்கிற பெயரில் ஒரு கந்து வட்டிக்கடையும், 'திராவிடன்' என்கிற பெயரில் ஒரு பைனான்சும், வேறு ஒரு திராவிடன் என்கிற பெயரில் சீட்டு நிறுவனமும் நடத்துகிறார். இவை 'பெரியார் திடலிலேயே' இயங்குகின்றன.
ஆனால் இவை பெரியார் அறக்கட்டளை போன்ற எந்த பொது ட்ரஸ்ட்டையும் சார்ந்தது அல்ல. இவை அனைத்தும் வீரமணி என்கிற தனி நபருக்கு சொந்தமானது.
மேலும் வீரமணி பெயரில் 'சூர்யா ட்ரேடிங்' எனும் பெயரில் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் ஒன்று அடையாரில் இயங்குகிறது.
வீரமணியின் குடும்பத்தார் பெயரில் மட்டும் ஆறு, ஏழு நிறுவனங்கள் இயங்குகின்றன.
இதன் பங்குதாரர்களாக மைலாப்பூர் ஸ்ரீ ராமன் ஐயர் துவங்கி, வடநாட்டு சேட்டுகளும், மிட்டல்களும் இருக்கிறார்கள்.
சில கம்பெனிகள் வீரமணியின் மனைவி மோகனா பெயரிலும், சில வீரமணியின் மருமகள் சுதா குமாரி பெயரிலும், சில வீரமணியின் மகன் அன்புராஜ் பெயரிலும் இயங்குகின்றன.
வீரமணியின் மகன் அன்புராஜின் பெயரில் மட்டும் நான்கு நிறுவனங்கள் பதிவாகி இருக்கின்றன, அவற்றில் மூன்று பெரியார் திடலில் இயங்குகிறது.
இவர்களுடைய நிறுவனங்களில் இயக்குனர் கம் பங்குதாரர்களாக இருக்கும் பிராமண, வடுக மற்றும் பனியாக்கள் பெயர்களில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள எண்ணற்ற பிற சகோதர (சிஸ்டர் கன்சர்ன்ஸ்) நிறுவனங்கள் இயங்குகின்றன. அதிலெல்லாம் வீரமணிக்கும் பங்கு இருக்கிறதா என்பது தெளிவாக தெரியவில்லை.
வீரமணியின் நேரடி பார்ட்னர்களில் பலர் 'பிள்ளைவாள்', வீர சைவ 'பண்டாரம்', அகர்வால் பனியாக்களான 'மிட்டல்' போன்ற சாதிப் பெயர்களை தங்கள் பெயர்களில் தாங்கி நிற்கிறார்கள்.
மேலும் இந்த நிறுவனங்களோடு ஏதோ ஒரு வகையில் (சிஸ்டர் கன்சர்ன்ஸ்) தொடர்புடைய பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பிற நிறுவனங்கள் 2007 க்கும் 2010க்கும் இடைப்பட்ட காலங்களில் தான் மத்திய கார்ப்பரேட் கம்பெனிகளின் சட்டத்தின் கீழ் பதிவாகி இருக்கின்றன.
இந்த காலத்தில் தான் ஈழம் வீழ்ந்தது என்பதும், ஈழம் வீழ்ந்த பின்னரும் திமுக-காங் கூட்டணிக்கு வீரமணி ஒட்டு சேகரித்ததையும் இங்கே பொருத்தி பார்க்க வேண்டும்.
வீரமணி குடும்பத்தாரின் பல நிறுவனங்களில் பங்குதாரராக இருக்கும் ராஜரத்தினம் சங்கரலிங்கம் பார்ப்பனிய நிறுவனமான ஸ்ரீராம் குருப்பிலும் முக்கியமான இயக்குனர்-பங்குதாரராக இருக்கிறார்.
இந்த ராஜரத்தினம் சங்கரலிங்கத்தின் பெயரில் மட்டும் பத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் (ஸ்ரீராம் குருப், விஷ்வபிரியா இந்தியா, மெப்கோ இண்டஸ்ட்ரீஸ், விஷ்வப்ப்ரியா பைனான்ஸ் மற்றும் வீரமணி குடும்பத்தின் டிபிஐ மற்றும் விப்ஜியார் போன்ற) பதிவாகி இயங்குகின்றன.
இதே போல சந்தேகத்துக்குரிய மற்ற இயக்குனர்கள் கம் பங்குதாரர்கள் அனந்தகிருஷ்ணன், சிவஷங்கர், வெங்கடபதி போன்றோர். இவர்கள் ஒவ்வொருத்தரின் பெயரிலும் ஐந்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்குகின்றன.
வெளிப்படையாக (வெள்ளையாக) இயங்கும் வீரமணியின் நிறுவனங்களின் லட்சணம் இப்படியென்றால் கருப்பில் இயங்கும் வீரமணி குடும்பத்தாரின் நிறுவனங்கள் குறித்து ஊகிக்க தேவையில்லை.
இவை மட்டும் அல்லாது ஏழை பாழைகளின் வயிற்றில் அடிக்கும் சுயநிதி கல்லூரிகள், பெரியார் கெமிகல்ஸ், பெரியார் பிளாசா, பெரியார் பால் பண்ணை, பெரியார் கணினிக் கல்லூரி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி, பெரியார் ஆங்கிலக் கல்வி பயிலகம், பெரியார் மகளிர் பாலிடெக்னிக், மகளிர் தொழில் பயிலகம் என்று ஏழைகளிடம் பண மோசடி செய்யும் எண்ணற்ற தொழில்கள்.
குடும்ப குத்து விளக்கு, மாங்கல்யம், சாந்தி முகூர்த்தம் என்ற பெயர்களில் எல்லாம் கந்துவட்டி கடை நடத்தும் வீரமணிக்கும் முற்போக்குக்கும், பகுத்தறிவுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?
இதை ஒத்த மற்றும் இதற்கும் மேலான விமர்சனங்களை அன்று வீரமணி மீது சுமத்தி விட்டு, ஈவெகி சம்பத் சாலையை விட்டு வெளியேறிய 'மற்ற மணிகள்' இன்று தமிழின எழுச்சி கண்டு, மிரண்டு, பதறி, பெரியார் திடல் நோக்கி பின்னங்கால் பிடரியில் அடிக்க பாய்ந்து செல்வது வேடிக்கை.
கீழே வரும் வாசகம் ஒரு முறை கி. வீரமணி, சன் தொலைக்காட்சி பேட்டியில் சொன்னது ''ஒரு அறக்கட்டளையின் பணம் என்பது பொதுப்பணம். கோடிகள் இருப்பது பற்றி யாருக்கும் மறுப்பு இல்லை. அந்தக் கோடியை வைத்துக் கொண்டு நாங்கள் யாரும் வட்டிக்கு விட்டு சம்பாதிப்பதில்லை. பொதுப்பணிகள் செய்கிறோம்.
பதிவு - தோழர் கிரிஷ்ணா தமிழ்ப்புலி.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.