27/04/2017

வடகொரிய அதிபர் பைத்தியக்காரனாம்.. போரிடுவது நோக்கம் இல்லையாம்.. அந்தர் பல்டி அமெரிக்கா...


உலகநாடுகளுக்கு ஆயுதங்களை சப்ளை செய்யும் தொழிலை செய்து வரும் நாடு அமெரிக்கா, அமெரிக்காவில் தயார் செய்யும், ஆயுதங்கள் நல்ல முறையில் விற்பனை ஆக வேண்டும் என்றால், பல நாடுகளுக்கு இடையே பிரச்னை வெடிக்க வேணடும்.

முடிந்த அளவு பிரச்னையை தூண்டிவிட்டு, பிரச்னைக்குரிய நாடுகளில் தனது ஆயுதங்களை விற்பனை செய்துவிடும்.

அப்படி இரு நாடுகளுக்கும் ஆயுதம் விற்பனை செய்யும்போது, எந்த ஒரு நாடு அமெரிக்காவிடம், ஆயுதங்களை வாங்குவதை நிறுத்தி தானே தயார் செய்து, தனது ராணுவ பலத்தை கூட்டுகிறதோ. அந்த நாடு அமெரிக்காவின் எதிரி நாடாக கருதப்படும்.

பின்ன அந்த நாடு அணு ஆயுதங்களை தயாரிக்கிறது. இது உலகுக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று பேச ஆரம்பிக்கும். எந்த ஒருநாடும் தானாகவே அணு ஆயுதங்களையும் தயாரிக்கக் கூடாது என்பதுதான் அமெரிக்காவின் விருப்பமாம்.

கொரியா தீப கற்பத்தில் வட கொரிய, தென் கொரிய இரண்டு, பிரச்னைக்குரிய நாடுகள்.

இதில் தென் கொரியாவிற்கு ஆயுதம் விற்பனை செய்வது அமெரிக்காவாம். அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து ராணுவ பயிற்சியல் ஈடுபட்டு வருகிறதாம்.

ஆனால் சீனாவுடன் நட்பில் இருக்கும் வட கொரியா, தனது நாட்டு வல்லுனர்களைக் கொண்டு, தானே அணு ஆயுதங்களை தயார் செய்து வருகிறது.

இது உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறதாம். இதனால்தான் அமெரிக்கா போர்க்கப்பலை தென் கொரியாவிற்கு அனுப்பியது. அந்த கப்பல் தென் கொரியாவிற்கும் வந்து சேர்ந்துவிட்டது.

இந்த நிலையில் அமெரிக்க தூதரக அதிகாரி நிக்கி ஹேலி கூறியிருப்பதாவது..

அணு ஆயுத சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அச்சுறுத்திவரும் வடகொரியா, அணு ஆயுத சோதனைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் நோக்கம். போரிடுவது என்பது அமெரிக்காவின் நோக்கம் இல்லை.

கடந்த 16ம் தேதி வடகொரியா நடத்திய அணுஆயுத சோதனையை ஐ.நா கடுமையாக  கண்டித்துள்ளது.

அணு ஆயுத சோதனை நடத்தி உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை கொடுத்து வரும் வட கொரியா, தாங்கள் மேற்கொள்ளும் சோதனையை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கம்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங்கின் அணு ஆயுத சோதனைகளை நடத்தி விட்டால், உலக நாடுகள் அச்சப்படும் என்று நம்புகிறார்.

அதிபராக இருக்கும் அவர் தற்போது மன நலம் பாதிக்கப்பட்டவராக மாறிவிட்டார் என்று அமெரிக்க தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.