20/04/2017

கண்ணதாசன் ஆவிகளைப் பற்றித் தனது அனுபவங்களைக் கூறுகிறார் ...


இறந்து போனவர்ளுடைய ஆவிகள் தங்கள் குடும்பத்தினரைக் கண்காணிக்கின்றன என்பதற்கு, மறுக்க முடியாத ஆதாரங்கள் கிடைக்கின்றன.

ஆவி உலகில் உலவுகிற சிலர், தங்களுக்குப் பிரயமானவர்களின் உடலில் புகுந்து கொண்டு, அவர்களையே மீடியமாக வைத்து, மறவர்களோடு பேசுகிறார்கள் என்பதும் உண்மை.

அண்மையில் தினமணி கதிர் பத்திரிகையில் காங்கிரஸ் பிரமுகர் திரு. பி.ஜி. கருத்திமன் அவர்கள், இதுபற்றி இரண்டொரு கட்டுரைகள் எழுதியிருந்தார்கள்.

இறந்து போனவர்களுடைய ஆவி தங்களுக்குப் பிரியமானவர்கள் உடலில் புகந்து பேசுவதும் உண்டு. வேறு உடல்களை மீடியமாக்க்கொண்டு பேசுவதும் உண்டு.

எனக்கே இதில் அனுபவம் உண்டு.

1941 - ஆம் ஆண்டு என் உடன் பிறந்த நாலாவது சகோதரி இறந்து போனார்.

அவருக்கு இரண்டு பெண்களும், ஒரு பையனும் உண்டு.

அந்தப் பெண்களில் மூத்த பெண்மீது, என் சகோதரியின் ஆவி வந்து பேசுவது உண்டு.

ஏதாவது முக்கியமான பிரச்சினைகளைப் பற்றியப் பேசிக் கொண்டிருக்கும் போது என் சகோதரியின் ஆவி தன் மகள் உடம்பில் வந்து பேசும்.

அந்தப் பெண்ணுக்கு நான் மாமன்.

சாதாரண நேரங்களில் ‘மாமா’ என்றழைக்கின்ற அந்தப் பெண், ஆவி வந்து அழைக்கும்போது, ‘தம்பி’ என்றழைக்கும்.

மற்ற உறவினரையும், என் சகோதரி எப்படி அழைப்பாரோ, அப்படியே அழைக்கும்.

மேலும், குரலும் என் சகோதரியின் குரலாகவே இருக்கும்.

இதைநான் பலமுறை கண்டிருக்கிறேன்.

ஆவி வந்து சொன்ன விஷயங்களெல்லாம் நடந்திருக்கின்றன.

இறந்து போனவர்களுக்குப் பிரியமான பதார்த்தங்களை செய்து நாம் படையல் நடத்துகிறோம் அல்லவா? அந்தப் பதார்த்தங்களை ஆவிகள் உண்ணுகின்றன என்பது ஐதீகம்.

தர்க்கத்திற்கு இது நிற்க முடியாது. என்று வாதிடுவோரும் உண்டு.

ஆனால் இறந்து போனவர்களுடைய ஆவி பற்றிய பல சம்பங்களைத் தம் வாழ்யாளிலேயே கண்டிருக்கிறார் மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள்.

அவர் கூறியுள்ள சில அனுபவங்களை அப்படியே இங்கு எடுத்துக்கொடுப்பது வாசகர்களைச் சிந்திக்க வைக்கும்.

அவர் சொல்லியுள்ள பல விஷயங்களில் சிலவற்றை மட்டுமே நான் இங்கே தருகிறேன்.

இறந்தவர்கள் மீடியமாக இருப்பவர்களுக்குத் தெரியாத பாஷையில் அறிவித்தல்:

தூத்துக்குடியில் வருமான வரி ஆபீசராக இருந்த ஓர் இஸ்லாமியர், இறந்தவர்களோடு பேசுவதன் உண்மையை அறிய வேண்டும் என்று, எமது தம்பியார் வீட்டிற்கு வந்து இருந்தார்.

அவர் தாமும் பேசிப் பாக்க வேண்டும் ஆனால் தமிழைத் தாய் பாஷையாக்க் கொண்ட மூடியம் மூலம், அந்த மீடியத்திற்குக் கொஞ்சமும் பழக்கமில்லாத பாஷையாகவும் தமது தாய் பாஷயாகவும் இருக்கும் உருது பாஷையில் கேள்விக்கேட்டு பதிலும் உருது பாஷையில் வந்தால்தான், அது மீடியத்தில் ஏற்பட்ட பதில் அல்ல, இறந்தவருடைய வாக்கே என்று உறுதியாக் கூற முடியுமென்று சொன்னார்.

தம்பியார் யாரும் இவ்வாறு இதுவரை யோசித்துப் பார்க்கவில்லை. ஆபிஸர் சொல்வது சரியான சோதனையோ சோதித்துப் பார்ப்போமே என்றுபார்த்தார்.

உருது ஒரு வார்த்தையும் தெரியாத பிராமணச் சிறுவன் மீடியாமாக இருக்க, அவன் மூலம் உருது பாஷையில் பதில் வரவே ஆபீசரும்  மற்றவர்களும் திகைத்துப் போனார்கள். மேற்கொண்டு பேச வேண்டும் என்று ஆபீசரும்  விரும்பவே ஆவி உலகத்திலிருந்து அவருடைய கொழுந்தியாள், ‘இப்பொழுது மேற்கொண்டு பேச வேண்டாம்; இங்கு பேசுகின்ற முறையிலேயே வீட்டில் வைத்துப் பேசுங்கள்; வீட்டில் இருக்கும் மகள் மீடியமாக இருக்கிறாள்’ என்று  அறிவித்து விட்டாள்.

அதன்படி அவர்கள்  வீட்டில் வைத்துப் பேசவும், அதன் உதவியைப் பிறருக்கு எடுத்துச் சொல்லவும் ஆரம்பித்து விட்டார்.

ஆதலால்  நல்ல சக்தி வாய்ந்த மீடியமாக இருந்தால், மீடியத்திற்கு தெரியாத பாஷைகளிலும் பேச்சு நிகழ்த்தலாமென்பதும், அதில் மீடியத்தினுடைய அறிவின் விளக்கமோ மீடியம் கள்ளத்தனமாக வேண்டுமென்ற தன்னுடைய கருத்தை போலித்தனமோ, ஓர் அணுவளவும் முடியாதென்பதும் பெறப்படுகின்றதல்லவா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.