10/05/2017

கஞ்சா ஒரு பார்வை...


கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்..

சமீபத்தில் அமெரிக்காவில் கஞ்சாவை மருத்துவத்துறையில் உபயோகப்படுத்தலாமா என்று ஒரு சர்ச்சை எழுந்து உள்ளது.

பாரக் ஒபாமா இதுபற்றி  பேசியுள்ளார்.. அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு சட்டமாக உள்ளது.. சில மாநிலங்களில் மருந்தாக இதனை உபயோகிக்கிறார்கள். சில மாநிலங்களில் தடை செய்யப்பட்டு உள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தில் $14 பில்லியனுக்கு ஆண்டுக்கு கஞ்சா வர்த்தகம் நடக்கிறது.

கஞ்சா உபயோகத்துக்கு தடை நீக்கி வர்த்தக ரீதியாக மருத்துவத்தில் உபயோகிக்க அனுமதியளிப்பதன் மூலம் அரசுக்கு வரியாக மிகப்பெரும் தொகை கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

அமெரிக்காவின் கடந்த மூன்று அதிபர்களும் தங்கள் இளமைக் காலத்தில் கஞ்சா உபயோகித்தவர்கள் தான்.. ஒபாமா கொக்கையின் என்னும் போதைப் பொருளும் உபயோகித்தவராம்..

அமெரிக்காவில் இது சகஜம்தான் என்கிறீர்களா?

கஞ்சா வியாபாரத்தை முறைப்படுத்தி உரிய வரி விதித்து மருத்துவத்துறைக்கு அமெரிக்கா முழுமைக்கும் உபயோகிக்கலாம் என்று சட்டம் கொண்டு வந்தால் அமெரிக்கா பொருளாதாரச் சரிவிலிருந்து மீளும் என்பது ஒரு சாராரின் கருத்து.

இதனைப்பற்றி பல கருத்துக்கள், கண்டனங்கள் செய்திகளாக வருகின்றன. எது எப்படி இருந்தாலும் மருத்துவத்துறையில் கஞ்சாவின் பயன் என்னவென்று பார்ப்போம்.

250க்கும் மேற்ப்பட்ட வியாதிகளுக்கு கஞ்சாவை மருந்தாக கொடுக்கலாம்..

அவற்றில் முக்கியமாக...

மூட்டுவலி - வலியைக் குறைக்க.

ஆஸ்துமா - நுறையீரல் விரிவடைய செய்ய.

மன சோர்வு - மூடு ,உற்சாகம் ஏற்பட.

க்ளாக்கோமா,கண் நீர் அழுத்த நோய் -கண்ணின் அழுத்தம் குறைக்க.

வலி - வலி நிவாரணி.

சில அனுமதிக்கப்பட்ட கஞ்சாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் கீழே...

1.நாபிலோன் - புற்றுநோய் மருந்துகளால் ஏற்படும் குமட்டல்.

2.மாரினால் - அதே குமட்டல், எயிட்ஸில் உடல் தசை குறைவைத்தடுக்க.

3.சாடிவெக்ஸ் - மல்டிபில் ஸ்கெலொரோஸிஸ் என்ற நரம்பு நோயில், புற்றுநோயில் ஏற்படும் வலி.

இவ்வளவு மருத்துவ குணமிருந்தாலும் கஞ்சா போதை வஸ்துவாக தவறாகப்பயன் படுத்தப்படுகிறது.

அதனாலேயே பல நாடுகளில் கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

கஞ்சாவால் ஏற்படும் விளைவுகள்...

உற்சாகம், புத்திசாலியாக நினைத்துக் கொள்ளுதல், தாழ்வு மனப்பான்மையிலிருந்து மாற்றம், கலகல்ப்பாக இருத்தல் போன்றவை இருந்தாலும்..

கவனமின்மை, சுயநினைவு இழத்தல், மாயத்தோற்றங்கள், நெஞ்சுவலி, ஞாபக மறதி, நடுக்கம், போன்றவை ஏற்படும்.

நீண்ட தூக்கமும் , அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் மூச்சு விடசிரமம், இறப்பு ஆகியவை நேரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.