15/06/2017

பாஜக மோடியும் தமிழின அழிப்பும்...


கதறி கண்ணீர்விடும் கதிராமங்கலம், ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் நாளை இது தான் நிலை…

நேற்று இடிந்தகரை, கூடங்குளம்.
இன்று நெடுவாசல்,கதிராமங்கலம்
நாளை ஒட்டுமொத்த தமிழ்நாடா..?

சொந்த ஊரை விட்டு வெளியேறி பக்கத்து ஊரின் தென்னந்தோப்பில் வசிக்கும் நிலையில் சொந்த நாட்டில் அகதிகளான தஞ்சை மாவட்டம் ,திருவிடைமருதூர் வட்டம் கதிராமங்கலம் மக்கள்..
                                                                                                                                                          பன்னாட்டு கம்பனிகள் காலுன்ற அரசு மக்கள் நிலங்களை கொள்ளை அடிப்பதா? எம் தமிழினம் கண்முன்னே அழிந்து சாவதா? அதை ஒட்டு மொத்த தமிழகமும் பார்த்து கொண்டு இருக்குமா?

இது குறித்து வழக்கறிஞரும் தமிழ்த்தேச மக்கள் கட்சி தலைவருமான தோழர் புகழேந்தி பாண்டியன் அவர்கள் கூறுகையில்...

காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சித்து வரும் வேளையில் அதை எதிர்த்த மக்கள் போராட்டங்கள் அத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கு பேரெழுச்சிப் போராட்டங்களாக நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் போராட்டம் அதற்கு சிறந்த உதாரணம்.

இந்நிலையில் மக்கள் போராட்டத்தை ஒடுக்கி அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்திய, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

அதன் அடிப்படையில் மயிலாடுதுறை அடுத்த கதிராமங்களம் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்த ONGC நிறுவனம் முயற்சித்தபோது அதை எதிர்த்து மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

போராட்டக்காரர்களை கைது செய்த காவல்துறை போராட்டத்தின் முன்னணி சக்திகளான பேரா .செயராமன் உட்பட 11பேர் மீது பிணையில் வெளிவர முடியாத வழக்குகள் போட்டு சிறையிலடைத்துள்ளது.

இதன் அடுத்த கட்டமாக கதிராமங்களத்தில் ஆயிரக்கணக்கான காவலர்களைக் குவித்து 144 தடை உத்தரவும் போடப்பட்டு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான வேலைகளை இந்திய, தமிழக அரசுகள் அப்பகுதியில் செயல்படுத்துகின்றனர்.

கதிராமங்களம் கிராமத்தில் 15000 க்கும் மேற்பட்ட மக்கள் 144 தடை உத்தரவால் ஊரை விட்டு வெளியேற முடியாமலும் அண்டை கிராம மக்கள் அப்பகுதிக்குள் செல் முடியாமலும் மீறி செல்பவர்களை கைது செய்தும் காவல்துறை அராசகம் செய்கிறது.

கதிராமங்களத்தில் மக்களை ஒடுக்கி ஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இதே நடைமுறையை டெல்டா பகுதி முழுக்க செயல்படுத்த அரசும் காவல்துறையும் Ongc நிறுவனமும் கடுமையாக முயல்கின்றன.

அதற்காக கதிராமங்களததில் உயிர்பலி கொடுக்கவும் அரசு தயங்காது என்ற அபாயக்குரல் அப்பகுதி மக்களிடமிருந்து, தமிழக மக்களுக்கு கோரிக்கை வந்த வண்ணம் உள்ளது.

தமிழக மக்களே அணிதிரள்வோம்.. தமிழக நிலங்களைக் காப்போம்..

இந்திய, தமிழக அரசுகளே...

கதிராமங்களத்தில் போடப்பட்ட 144 தடை உத்தரவை உடனே திரும்பப் பெறு..

மக்களை ஒடுக்கும் காவல்துறையை கதிராமங்களத்திலிருந்து உடனடியாக வெளியேற்று..

கதிராமங்களத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்தாதே..

கதிராமங்களத்திற்காக போராடியதற்காக சிறையில் அடைக்கப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்..

என்ற கோரிக்கைகளோடு தமிழக மக்கள் கதிராமங்களத்தை காக்க ஓரணியில் திரள்வோம் என்கிறார்...

பதிவு - கலியுக பாரதி

குறிப்பு : தமிழர்களை அழிப்பதற்காக இந்திய மற்றும் தமிழக அரசுகள் இனைந்து மக்களை அடித்து உடைத்து திட்டத்தை திணிக்கிறார்கள்.. மேலும் தமிழகத்தை அழிப்பதற்காக அனைத்து திட்டமும் மக்களின் எதிர்ப்பை மீறி திணிப்பதால்.. இந்தியாவிடம் இருந்து விடுதலை வேண்டும் என்று ஐ.நா மன்றம் மற்றும் காமல்வெல்த் மாநாட்டில் அவசர வழக்காக பதிவு செய்யுங்கள்...

மேலும் அவரவர் வாழும் நாடுகளிலும் இதை போலவே அந்த நாட்டின் அரசாங்கத்தில் பதிவு செய்யுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.