15/06/2017

சேகுவாரா...


ஜூன் 14 ஒரு சரித்திரத்தின் பிறந்தநாள்.

அது சராசரி குழந்தையின் அழுகை -
சத்தம் அல்ல. ஒரு புரட்சியாளனின்
வீர முழக்கம்.

செல்வந்த குடும்பத்தில் பிறந்தும்
எளிமையாக வாழ்ந்து.
சே என செல்லமாக அழைக்கப்பட்ட
மகத்தான புரட்சியாளனே..

ஒடுக்கப்பட்ட மக்கள் எல்லாம்
உன் மக்கள் என்றெண்ணி
அவர்களுக்காக ஓயாமல்
போராடிய உத்தமனே..

ஆஸ்துமா நோய் உன்னை
ஆட்கொண்ட போதும் -
அடர்ந்த காட்டுக்குள் பதுங்கி
பட்டினியோடு யுத்தம் செய்த
புரட்சியாளனே..

அக தூய்மை போதுமென்று
புறத்தூய்மை கவனிக்காது
பன்றி என்றழைக்கப்பட்ட
தூயவனே..

மண்டியிட்டு வாழ்வதற்கு
மரணமே மேல் என்று
நெஞ்சுயர்த்தி மரணத்தை
வரவேற்ற மாவீரனே..

காலில் குண்டடி பட்டபோதும் - உன்னை
சிறைவைத்திருந்த பள்ளிக்கூடத்தின்
பரிதாப நிலையை கண்டு
உள்ளம் துடித்த நல்லவனே..

நிற்க வைத்து சுடு என்று
நீ சொல்ல - மறுத்தவனை
பார்த்து கோழையே நீ சுடுவது
சே வை அல்ல ஒரு சாதாரண
மனிதனை என்று மரணத்தின்
விளிம்பிலும் செருக்குடன்
கர்ஜித்த மாவேரனே..

எந்த நாட்டிலோ பிறந்து
எந்த நாட்டு மக்களுக்காகவோ போராடி
எந்த நாட்டு மண்ணிலோ உயிர்விட்ட
சுயநலமற்ற சுத்தமான வீரனே..

மரணம் உன் உடலுக்கு தானே ஒழிய
எண்ணங்களுக்கு இல்லை.

தோட்டாக்கள் தொடர்ந்து சீறும் என்ற
உன் வீர முழக்கம் ஒவ்வொரு புரட்சியாளனின் மனதிலும் இன்றும் ஒளித்துக்கொண்டு தான் இருக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.