16/06/2017

இலுமினாட்டி - அமெரிக்காவின் எல்லா அதிபர்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களா ?


தலைப்பை படித்தவுடன் அதிர்ச்சியா இருக்குல்ல . எனக்கும் இதை பற்றி தெரிந்ததும் அப்படி தான் இருந்தது.

அமெரிக்க அதிபர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள்.

இதை வெளிவுலகுக்கு சொல்லியது யார் என தெரிந்தாலும் அதிர்ச்சி ஆவிங்க.

ஒபாமா , முந்தைய அமெரிக்க அதிபர் மற்ற எல்லா அதிபர்களுக்கும் சொந்தக்காரர்கள். ஆனால் ஒருவரைத் தவிர எனக்கூறியது, 12 வயது பெண் குழந்தை ; பெயர் Anne d'Avignon ; இவள் கலிபோர்னியாவை சேர்ந்தவள், தனது தாத்தாவின் உதவியோடு இதை செய்திருக்கிறாள்.


David Icke என்பவரும் இதைப்பற்றி ஏற்கனவே கூறியுள்ளார்.

அமெரிக்காவில் இதுவரை அதிபராக இருந்த 44 பேர்களில் 43 பேர்கள்  இங்கிலாந்து அரசர் ஜாண் -னின் வழிவந்தவர்கள்.

Martin Van Buren என்னும் எட்டாவது அதிபர் மட்டும் இந்த பட்டியலில் இல்லை; ஆனால் இவரும் அரச குடும்பத்தின் வாரிசு தான்.

அதோடு இங்கிலாந்தின் அரச குடும்பங்கள், ரோம அரசின் வாரிசுகள் ; இந்த ரோம அரசர்கள் எகிப்து அரசர்களின் வாரிசுகள்; இப்படி காலம் காலமாக ஆளுபவர்களே தற்பொழுது மக்கள் ஆட்சி என சொல்லி கொண்டு தாங்களே ஆண்டு கொண்டு இருக்கிறார்கள்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் கிலாரி கிளிண்டன், டொனால்ட் ட்ரம்ப் இருவரும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார்கள்..

மேடைகளில் ஒருவரை ஒருவர் கண்டபடி விமர்சித்துக் கொண்டார்கள்; ஆனால் அவர்கள் இருவருமே உறவினர்கள் அது அவர்களுக்கும் தெரியும்; அவர்கள் மக்களை முட்டாள் ஆக்க நடித்தார்கள்..

இன்னும் ஒன்று என்னவென்றால் ஏற்கனவே தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என முடிவு செய்து விட்டு தான் தேர்தலையே நடத்தினார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.