03/07/2017

தமிழர் வரலாறு - 3...


இவர்களது தொல்லை பொறுக்க முடியாமலே வட இந்தியாவில் வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் மெது மெதுவாகத் தெற்கு நோக்கி நகரத் தொடங்கினர். தமிழ் மக்களைத் துரத்தி விட்டு அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் வந்து குடியேறினர். தம்மை ஆரியர் எனக்கூறி சிங்களவரும் இதனைத்தான் இங்கு செய்கின்றனர். இந்த அநாகரீகமான மக்களே ஆரியர்.

இத்தகைய ஆரிய வம்சத்தைச் சார்ந்தவன்தான் சிங்கபாகு ஆவான். அவனின் மைந்தனே விசயன் ஆவான்.விசயனின் சந்ததியினரே சிங்களவர்கள். எனவே சிங்களவரும் ஆரியர்களே. தமிழர்  இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த வகையிலேதான் இலங்கையில் வாழ்கின்ற ஆரியர்களாகிய சிங்களவர்களுக்கும்  தமிழர்களுக்கும் ஒத்துப் போவதில்லை என்பது புலனாகின்றது.

சிங்கபாகுவின் மைந்தனாகிய விசயன் இனவரசனாக இருந்த பொழுது அவனுக்கு எழுநூறு பேர் தோழர்கள் இருந்தார்களாம். விசயன் இழவரசனாக இருந்தமையால் அவனுக்கு எல்லா வசதிகளும் கிடைத்தன. அதனாலே அவனுக்கு எழுநூறு பேர் தோழராயினர். இந்த விசயனும் இந்த தோழர்களும் நினைத்தவற்றையேல்லாம் செய்தார்கள். நாகரீக சமுதாயத்திற்கு ஒவ்வாத காரியங்களை எல்லாம் இவர்கள் மிகமிக விருப்பமாகச் செய்தார்கள்.

கண்டதே காட்சி கொண்டதே கோலம் என ஆள்வாரிலி மாடுகளாகத் திரிந்தார்கள். தட்டிக் கேட்க யாரும் இல்லை. தந்தை சிங்கபாகுதான் தட்டி கேட்க வேண்டியவன். அவனாலும் தட்டிக் கேட்க முடியவில்லை. அவன் அந்த நாட்டின் அரசனாக இருந்தமையினால் அந்த நாட்டின் மக்களின் நன்மைக்காகத் தன் மகனேன்றும் பராது அவனையும் அவனது தோழர்கள் எழுநூறு பேரையும் நாடுகடத்த விரும்பினான்.

அவர்கள் அனைவரையும் ஒரு பாய் கப்பலில் ஏற்றி வங்கக் கடலில் அலையவிட்டான். அக்கப்பல் காற்றினால் அள்ளுண்டு அவர்களைக் கொணடு வந்து நமது ஈழத்திருநாட்டில் மாந்தை நகரில் ஒதுக்கிவிட்டது.

வந்தாரை வரவேற்று உபசரிக்கும் தமிழர்களின் பண்பாட்டுக்கமைய வந்தாரை வாழவைத்தாள் ஒருத்தி. அவள்தான் இலங்கையில் அந்நாள் அரசி குவேனி என்பாள். அவள் ஒரு தமிழ் அரசி, அவள் வந்தவர்களுக்கு வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்தாள். விசயனின் அழகில் மயங்கி தன்னையே கொடுத்து விட்டாள்

அத்தோடு இலங்கையில் தமிழர்க்கு இருந்த இறைமையையும் கூடவே தரைவார்த்துக் கொடுத்து விட்டாள். இத் தொடர்பினால் விசயன் இலங்கையின் இலங்கையின் ஆட்சியுரிமையை இலகுவில் பெற்றுக் கொண்டுவிட்டான். ஆட்சியுரிமையை தந்திரமாக கைப்பற்றிக் கொண்ட விசயன் தன் காரியம் முடிந்ததும், தனது அதிகாரதுக்கு உதவிய மனைவி குவேனியையும் பிள்ளைகளையும் அடித்து துரத்திவிட்டான்.

குவேனியைத் துரத்திய பின் இவனும் இவனது தோழர்கள் ஏழுநூறு பேரும் பாண்டிய நாட்டிலுள்ள நாயக்க வம்சத்தைச் சேர்ந்தவர்களும் அழகுடையவர் ஆகிய தமிழ்ப்பெண்களை வரவழைத்துத் திரமணம் செய்த கொண்டனர். இவர்களது சந்ததியினரே இன்று இலங்கையில் வாழ்கின்ற சிங்களவர் ஆவர்.

இம்மட்டில் இவர்கள் நின்று விட வில்லை. அன்று அதிகாரத்தைத் தம்வசம் வைத்திருந்த விசயனும் அவனது தோழர்களினது சந்ததியினரும் ஏற்கனவே இங்கு வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களோடு திருமணம் செய்து கலந்து கொண்டனர்.

இவர்களது சந்ததியாரும் சிங்களவராயினர். இவ்வகையிலும் இலங்கையில் தமிழர் சிறுபான்மையினராகப்பட்டனர். இவ்வாறு தமது தனித்துவத்தையும் பண்பாட்டையும் கைவிட்டுச் சிங்களவர்களாக மாறிய தமிழர்களே தமது தனித்துவத்தையும் கலாச்சாரத்தையும் விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து வருகின்ற உண்மையான தமிழர்களுக்கு எதிராகத் கிளம்பி இலங்கை சிங்களவருக்கு மாத்திரமே உரியதென்று விதண்டாவாதம் பேசுகின்றனர். கூப்பாடு போடுகின்றனர். எஞ்சிய தமிழர்களையும் சிங்களவர் ஆக்க முனைகின்றனர்.

இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.