03/07/2017

தமிழர் வரலாறு - 5...


தமிழ் கூறும் நல்லுலகம்...

மனித இனம் முதன் முதலாக தோன்றிய இடம் குமரிக் கண்டம் என்று அறியக்கிடக்கின்றது. இந்தக் குமரிக் கண்டத்தில் வாழ்ந்த மக்கள் பேசிய மொழி தமிழ் என்றும் அவர்களிடமிருந்தே எனைய இனத்தவர்கள் சீர்திருத்ததைக் கற்றுக் கொண்டனர் என்றும் கூறுவர்.

அக்காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தார்கள் என்றும் அவற்றில் அவர்கள் வல்லவர்களாக இருந்தார்கள் என்றும் சொல்லப்படுகின்றது. அவையாவன.

வீடு கட்டுதல், கோயில் கட்டுதல், சிற்ப வேலை செய்தல், குளம் வெட்டுதல், நூல் நூற்றல், சிலை செய்தல், குடைசெய்தல், கோயில் த்தேர், போர்த்தேர், வாயுத்தேர்;, அக்கினித்தேர், ஆகாயவிமானம், கப்பல், முதலியன செய்தல், ஆகாயமார்க்கமாகச் செல்லுதல், பாடசாலை, வைத்தியசாலை தமிழ்ச்சங்கம் முதலியன அமைத்தல், இலக்கியம், இலக்கணம், வானசாத்திரம், நீதி சாத்திரம், தொலைவிலுணர்தல், கடவுள் வணக்கம், தவம், கற்பு, விரதம், வியாபாரம், பஞ்சாயம், நீதிமன்றம், குடியாரசாட்சி, தெரிவுச்சீட்டு, கணிதம், சோதிடம், கூடுவிட்டுக் கூடுபாய்தல், ஒரு மனிதன் போல் தேகம் எடுத்தல், ஆகாய யுத்தம், கடல் யுத்தம் முதவியவற்றை நன்றாக அறிந்திருதார்கள்.

தமிழ் மொழியில் மிகவும் சிறந்த இலக்கிய நூல்களும் இலக்கண நூல்களும் கணித நூல்களும், தமிழ் வேதங்களும் தமிழ் சரித்திர நூல்களும் இன்னும் பல சிறந்த நூல்களும் ஆரம்பத்திலேயே இருந்தன.

பாண்டிநாடு சோழநாடு, சேரநாடு முதலிய தமிழ் நாடுகளில் உள்ள தமிழர் முற்காலத்தில் இலங்கையில் பிறந்து வாழ்ந்தபடியால் இலங்கை அந்த நாடுகளின் தமிழருக்குச் சொந்தம். இலங்கை மலைவளமுடைய நாடாக இருந்தமையால் போதிய மழை பொழிந்து பல ஆறுகள் பாய்கின்ற ஆற்று வளமுடையதாக விளங்கியமையால் செழிப்பான தேசமாக விளங்கியது. பெருமளவு நெல் விளைவிக்கப்பட்டது.

அத்துடன் பொன், முத்து இரத்தினம், சங்கு ஆகியவையும் அதிகம் காணப்பட்டன. இவ்வாறு சிறப்பாக விளங்கிய இலங்கையில் முற்காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் மிகவும் செல்வந்தராயிருந்தனர். இதனால் ஏனைய நாடுகளில் வாழ்ந்த தமிழர்கள் இலங்கையில்; வசிக்க மிகவிரும்பினார்கள்.

இடவசதியற்ற பொழுதெல்லாம் அவர்கள் இலங்கையில் வந்து குடியேறிக் கொண்டே வந்தார்கள். இலங்கைத் தமிழர் பாண்டியநாடு முதலிய மற்றைய தமிழ் நாடுகளின் தமிழரோடும் அதிபூர்வ காலந்தொடங்கி இன்றுவரைக்கும் ஆலயதரிசனம், தீர்த்தமாடுதல், கல்வி பிறப்பு இறப்புச் சம்பந்தமான கொண்டாட்டங்கள், திருவிழா, கல்யாணம் மற்றுவிவாகம் முகலிய வைபவங்களைக் கொண்டாடிக் கொண்டும், போக்குவரவு பண்ணிக் கொண்டும் வருகிறார்கள்.

பாண்டியநாடு முதலிய தமிழ்த் தேசங்களின் தமிழர்கள் திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம், நகுலேஸ்வரம், கதிர்காமம் முன்னேசுவரம் முதலிய சைவாலயங்களைத் தரிசிப்பதற்கும் தீர்த்தமாடுவதற்கும் விவாகத்திற்கும் இலங்கைக்குப் போக்குவரவு செய்து கொண்டேயிருக்கின்றார்கள்.

சுரரை ஆண்ட அரசன் சுரேந்திரன். அசுரரை ஆண்ட அரசன் அசுரேந்திரன். இதனால் சயம்பனுக்கு அசுரேந்திரன் என்னும் வேறொரு பெரும் இடப்பட்டது. தமிழரசனாகிய இச்சயம்பன் இலங்கையை முப்பத்து மூன்று வருடங்களாக ஆண்டிருந்தான். சயம்பனுக்குப் பின்பு அவனுடைய மருமகனாகிய யாளிமுகன் என்னும் தமிழன் அரசனாகி பத்து வருடங்கள் ஆட்சி புரிந்து இறந்தான்.

இவனுக்கு பின்பு பல தமிழரசர்கள் நெடுங்காலமாக இலங்கையை ஆண்டனர். இவர்களது ஆட்சிக் காலத்தில் திரிகோணமலை, இலங்காபுரம், சிங்கன்நகர், பணிபுரம், திருகோயில், முருகன்துறை கலியாணி முதலிய நகரங்கள் தலைநகரங்களாக விளங்கின.

யாளிமுகனுக்குப்பின் ஏதி என்னும் தமிழரசன் முருகபுரத்தைத் தலைநகராக்கி அங்கிருந்து இலங்கை முழுவதையும் ஆண்டான். முருகபுரம் என்னும் நகரில் முருகன் என்னும் தமிழ்ச்சேனாததிபதியின் வீரர்களில் ஒருவனாகிய விசயன் என்பவன் மாணிக்கங்கையில் முருகேசுவரம் என்னும் முருகனாலயத்தைக் கட்டுவித்தான். முருகேசுரத்துக்கு, கதிர்காமம், கதிர்வேலன்மலை, கார்த்திகேயபுரம், ஏமகூடம், மாணிக்கநகர். கந்தவேள்கோயில் என்னும் மறுபெயர்களும் உண்டு.

பயை என்னும் தமிழரசகுமாரத்தியை ஏதி விவாகஞ் செய்து வித்துக்கேசன் என்னும் புத்திரனைப் பெற்றான். இவன் இருபத்தெட்டு வருடங்கள் ஆட்சி புரிந்தான். வித்துகேசன் சிவனோளிபாதத்தைத் தலைநகராக்கி, நாகதீவு முழுவதையும் ஆண்டான். முருகன் என்னும் சேனைத்தலைவன் காங்கேசன்துறையில் ஒரு சிவன்கோவிலைக் கட்டுவித்தான்.

வித்துசேசன் இருபத்தொன்பது வருடங்களும், மூன்று மாதங்களும் இலங்கையை ஆண்டான். இவனுக்குப் பின் இவனது மகன் சுகேசன் என்பவன் மணிபுரம் என்னும் கதிரவன் மலையைத் தலைநகராக்கி இலங்கையை ஆட்சி புரிந்தான்.

ஆதிகாலத்தில் மயனால் கட்டப்பட்ட திருக்கேதீசுவரம், முனீசுவரம், நகுலேசுவரம் என்னும் சிவாலயங்களை இவன் பழுது பார்த்து அவற்றுக்கு அநேக நகைகளையும்; நிலங்களையும், கொடுத்தான். மாந்தை நகருக்கு அருகில் உள்ள பாலாவியாற்றங்கரையில் திருக்கேதீசுவரம் மாயவன் ஆற்றுக்குச் சமீபத்தில் முனீசுவரம், காங்கேசனுக்கு அண்மையில் நகுலேசுவரம் ஆகிய சிவாலயங்கள் கட்டப்பட்டன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.