03/07/2017

தமிழர் வரலாறு - 6...


இலங்கையில் தமிழ் மன்னர்களின் ஆட்சி...

சுகேசனின் ஆட்சி...

சுகேசன் தெய்வதி என்னும் அரச குமாரியை விவாகஞ் செய்து மாலியவான், மாலி என்னும் புத்திரர்களைப் பெற்றான். சுகேசனின் ஆட்சி மிகவும் மெச்சத்தக்தாக அமைந்திருந்தது. இவன் கிராமங்கள் தோறும் ஆலயங்களை அமைப்பித்தான். பல வீதிகளைப் புதிதாக உருவாக்கினான். பழைய வீதிகளைப் புதிப்பித்தான், காடுகளை அழித்து நாடுகளாக்கினான். விவசாயத்தை விருத்தியடையச் செய்தான்.

குளங்கள், கால்வாய்கள் பல வெட்டியும் புதுப்பித்தும் பயிர்ச் செய்கைக்கு உதவியளித்தான். நூல் நூற்றல், ஆடை நெய்தல் ஆகிய கைத்தொழில்களையும் விருத்தி பண்ணினான். வைத்தியரையும் வைத்திய நூல்களையும் ஆதரித்ததோடு பல வைத்தியசாலைகளிலும் நிறுவினான். பல பாடசாலைகளை அமைத்தான். பல தமிழ்ச்சங்கங்களையும் உருவாக்கினான்.

இவன் காலத்தில் தமிழ் மொழியில் எல்லாத் துறைகளிலும் நல்ல நல்ல நூல்கள் எழுந்தன. நீதி பரிபாலனமும் செவ்விதாய் அமைந்திருந்தது. சுகேசன் நாற்பத்தொரு வருடங்களும் ஏழுநாட்களும் ஆட்சி புரிந்த பின் தனது மூத்த புத்திரனாகிய மாலியவானை இலங்கைக்கு அரசனாக்கி, காட்டுக்கு சென்றான்.

மாலியவான் ஆட்சி...

தமிழ் அரசனாகிய மாலியவான் நாகதீவுக்கு அரசனாகி இலங்காபுரம் என்னும் நகரத்தை அழகாக கட்டுவித்து, அதைத் தலைநகராக்கி அங்கிருந்து இலங்கை என்னும் நாகதீவை ஆண்டான். இவன் கட்டுவித்த அரண்மனைகளும் மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் விலையுர்ந்த இரத்தினக் கற்களாலும் தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டன.

இவனது முடியின் மீது பத்துக் கிரீடங்கள் அமைந்திருந்தன. இவனுடைய சிங்காசனமும் வாளும் முடியும் செங்கோலும் கட்டிலும் நவரத்தினங்களாலும் முத்துகளாலும் தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டு விளங்கின. அக்காலத் தமிழர்களில் பலர் எல்லா வசதிகளும் ஒருங்கே அமைந்த பல அடுக்கு மாளிகைகளில் வாழ்ந்தனர்.

இவனது முடியை அலங்கரித்துக் கொண்டிருந்த பத்து கிரீடங்களும் பத்து நாடுகளுக்கு இவன் அதிபதி என்பதை எடுத்து காட்டுகின்றன. இவன் இருபத்தொரு வருடங்கள் இலங்கையை மகோன்னதமாக ஆட்சி புரிந்து வந்தான். மாலியவான் இறந்த பின்பு அவனுடைய தம்பியாகிய சுமாலி என்பவன் ஆட்சி புரிந்தான்.

இவன் மாந்தையிலிருந்தும் இலங்காபுரத்தில் இருந்தும் அரசான்டான். சுமாலி கேதுமதியை மணந்து ஒரு மகளைப் பெற்றேடுத்தான். அவளின் பெயர் கைகேசி என்பதாகும். சூரியப் பிரகாசம் என்னும் ஆகாய விமானத்தை அவன் வைத்திருந்தான்.

சுமாலியின் ஆட்சி முன்னையவர்களது ஆட்சி போன்று அத்துனை சிறப்பாக அமையாமையால் அவனால் ஐந்தரை வருடங்களும் முன்றரை மாதங்களுமே ஆட்சி புரிய முடிந்தது. மக்கள் கிளர்ச்சி செய்து அவனை சிங்காசனத்தில் இருந்து நீக்கி விட்டனர். இவனது ஆட்சியில் வெறுப்படைந்த தமிழ்மக்கள் பாண்டி நாடு, சேரநாடு, சோழ நாடு முதலிய தமிழ் நாடுகளில் சென்று குடியேறினர்.

சுமாலிக்குப்பின் அரசாட்சிக்குரிய கைகேசி சிறு குழந்தையாய் இருந்த படியால் இலங்கையை ஆழ அரசனில்லாதிருந்தது. இதனால் வச்சிரவாகு என்பவன் தனக்கும் இயக்கப் பெண்ணாகிய தேவகன்னி என்பவளுக்கு பிறந்த புத்திரனாகிய வைச்சிரவணானை இலங்கைக்கு அரசனாக்கினான். வச்சிரவாணனுக்கு குபேரன் என்னும் மறு பெயரும் உண்டு.

குபேரன் ஆட்சி...

குபேரன் அரசானான பின்பு அவனது தாய் வழியைச் சேர்ந்த பல இயக்க குடிகள் இலங்கையில் வந்து குடியேறினார்கள். இவர்களும் தமிழர்களே. நாகரிகத்திலும் கல்வியிலும் இயக்கர் என்னும் தமிழர் மிகவுஞ் சிறந்தவர்களாய் இருந்தார்கள். இயக்கரும் தமிழரும் பேசிய மொழி தமிழேயாகும்.

பண்டைக்காலத்தில் வரன் என்பவன் புலத்தியவனைப் பெற்றான். புலத்தியன் குணவதியை மணந்து வச்சிரவாகுவைப் பெற்றான். இந்த வச்சிரவாகு குபேரனுடைய தந்தையவான். இந்தக் குபேரன் இலங்கையை நீதியாக ஆண்டான். இவன் புட்பக விமானம் என்னும் ஆகாய ஊர்தியை வைத்திருந்தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.