05/07/2017

வானதி அவர்களின் சமயோஜித புளுகும், ஆதாரபூர்வமான உண்மைகளும்...


தனக்கும், தனது கணவருக்கும் Zylog நிறுவனத்துடன் எந்த தொடர்பும் இல்லை என வானதி சீனிவாசன் கூறுவதையும், தனது கணவர் Zylog நிறுவனத்திற்கு செய்த ஊழியத்திற்காக 20000 ஷேர்கள் இலவசமாக (கூலி) வழங்கப்பட்டன என வானதி கூறியுள்ளது ஒரு அப்பட்டமான பொய் என்பதோடு வானதி குடும்பத்தார் Zylog ஊழலில் ஊறித் திளைத்தது குறித்த அலசல் இதோ.

21.5.2017 அன்று தனது முகநூல் பக்கத்தில் மக்களிடமும், தன்னை இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவிகளை ஏமாற்றும் நோக்கில்தான் ஒரு அறிவு சிகாமணி என முன்னிறுத்துவதாக எண்ணி தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட வானதி அவர்களின் கீழே தரப்பட்டுள்ள விளக்கம் மற்றும் கூற்றுப்படியே இதை அலசி ஆராய்வோமா?.

1.      முதலில் SEBI யில் செய்யப்பட்ட பதிவின் படி  Zylog கம்பெனி ஷேர்கள் 10 ரூபாய் முக மதிப்பு கொண்டவை.  10 ரூபாய் பங்கை 5 ரூபாய் மதிப்பு என கூறியதில் வானதியின் முதல் பொய் வழக்கம் போல் துவங்குகிறது.

2.      பொதுச் சந்தையில் பங்கு வர்த்தகத்திற்கு வரும் நிறுவனம் தங்களுக்கு ஆலோசனை வழங்கும் நபருக்கெல்லாம் தான் தோன்றித்தனமாக 20000 ஷேர்களை கூலியாக தர முடியாது. SEBI மற்றும் கம்பெனி சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே தரமுடியும். ஆக எப்படி வானதியின் கணவருக்கு Zylog கம்பெனி கூலியாக 20000  க்ஷேர்களை தந்தார்கள்?? அவ்வாறு ஒதுக்கியதில் சட்ட முரண்கள் உள்ளதா என்பதை வானதி விளக்க வேண்டும்.  

3.    2007 வருடம்  ஜுலை 20ம் தேதி இந்த பங்குகளை விற்க Public Issue பதிவை துவக்கப்பட்டது. அது ஜுலை 25ம் தேதி வரை நடந்தது.  ₹ 10 பங்கின் விலை ₹ 330 முதல் ₹350 என Price band நிர்ணயிக்கப்பட்டது. இந்த பங்கு வெளியீடு சுமார் 5 மடங்கு பங்கு மூலதனத்தை பெற்றது. ஆதலால் ஒரு பங்கின் விலை Higher price band என முடிவு செய்யப்பட்டு ₹ 350 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு  விண்ணப்பித்தோருக்கு  வழங்கப்பட்டது. அப்படி என்றால் வானதியின் கணவருக்கு  20000 பங்குகளை  70 லட்சம் ரூபாய்க்கே ஒதுக்கி இருக்க முடியும். தனது கணவர் செய்த சேவைக்கு 70 லட்சம் மதிப்புள்ள பங்குகளை தர  Zylog நிறுவனத்திற்கு கம்பெனிகள் சட்டப்படி உரிமை இல்லை என்பதால் ₹ 70 லட்சம் கொடுத்தே  பங்குகள் வாங்கப்பட்டன என்பது உறுதியாகிறது.

4.      ஒரு Public limited company தங்களது மனதிற்கு தோன்றியது போல பங்குகளை, அதுவும் 70 லட்சம் வரை மதிப்புள்ள பங்குகளை இலவசமாக, சேவையை பாராட்டி அளித்தார்கள் என கூறுவது வானதி அவர்கள் அவிழ்த்து விட்ட பொய் மூட்டைகள் என்பது உறுதியாகிறது.

5.      அந்த பங்குகள் ஆகஸ்ட்17ம் தேதி முதல் முறையாக பங்கு சந்தைகளில் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது. அப்போது அதன் விலை 525 ரூபாயில் துவங்கி, 557 ரூபாய் வரை செல்கிறது. ஒருவேளை அது அவ்வாறு வழங்கப்பட்டு இருந்தால் முதலீடு செய்தவர்களை மோசடி செய்த ஷேர்களை இலவசமாகவோ கூலியாகவோ தந்தவர்கள் மீதும், பெற்றவர்கள் மீதும் வழக்காக யாரும் பதியலாம் என்பதையும் அறிவீர்கள்தானே!?.

6.      ஆக  Zylog நிறுவனத்தால் இலவசமாக வழங்க முடியாது என்றால், அதை பணம் கொடுத்து மட்டுமே வாங்க முடியும். அப்படியென்றால் 70 லட்சங்கள் கொடுத்து வாங்க வேண்டும். வானதியின்  கணவரின் அந்த வருடத்திய Financial year வருமான வரி கணக்கில் அந்த ஆண்டுகளில் காட்டிய தொகைக்கும், இதற்கும் சம்பந்தம் உண்டா என்பதையும் ஆராய வேண்டிய கடமை உள்ளது.

7.      ஒருவேளை இப்படி வந்த வருமானத்தை கணக்கில் காட்டாமல் மத்திய அரசின் வருமான வரித்துறையை மோசடி செய்திருந்தால்  ASG சு.சீனிவாசன் அவர்களின் இச்செயல் சட்டவிரோதமானதுதானே என சாமான்ய மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். கணக்கில் வாராத சொத்தை வைத்திருந்த வழக்கில் இத்தகைய குற்றம் செய்த குற்றவாளிகளை நியாயப்படி கைது செய்யலாமே ?.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை வாங்கியதில் வருமான வரித் துறையை ஏமாற்றியதற்கு வழக்கு தொடுத்துள்ள வருமான வரித் துறை வானதியின் கணவர் செய்த இந்த சட்ட விரோத செயலுக்கு ஏன்  நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் கேட்க மாட்டார்களா?.பிரதமர் மோடி அவர்களின் ஆட்சியில் அனைவருக்கும் ஒரே சட்டம்தான்.

என்ன செய்ய எல்லாம் தலையெழுத்து Public issue க்கும் Public limited company க்கும் வித்தியாசம் தெரியாத வானதி அவர்களை Madras Fertilisers limited கம்பெனியின் Non official டைரக்டராக நியமித்தது மிகுந்த ஆச்சரியமாகவே உள்ளது. ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கும் அந்த கம்பெனியை கம்பெனி சட்டம் குறித்த அடிப்படை அறிவு இல்லாத ஒரு நபர் எப்படி தூக்கி நிறுத்த முடியும் என்பது காலக் கொடுமைதானே!!.

Madras Fertilisers ltd கம்பெனி வெளங்கீருமா? என்பதை காலம்தான் இனி உணர்த்தும்.

நான் குற்றம் சுமத்துவதாக சொல்லி கோபம் கொள்வதை விட்டு விட்டு இவர் இப்படி சொல்கிறார் என் அருமை கட்சிக் காரர்களே!. இந்தாருங்கள் இவர் கேட்கும் ஆதாரம் இதோ என தூக்கி வீசி விட்டீர்கள் என்றால் இம்மி அளவுக்கும் என்னால் வாய்  திறக்கதான் இயலுமா?.

சிறு ஷேர் கேள்விக்கே எனக்கு பதில் சொல்ல இயலாவிடில் Zylog நிறுவனத்தின் 1000 கோடி ஊழலுக்கு தங்கள் சகோதரர் சிவகுமார் கந்தசாமி நம் பாரதப் பிரதமருக்கு எப்படிதான் பதில் கூற இயலும்?.

பல பேர் Zylog பற்றி சொல்லுங்கள் என்பதால் இதை பதிவிடுகிறேன்.
மேலும் ஒவ்வொன்றும் முக்கிய ஆதாரங்கள் சம்மந்தப்பட்டது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 செக்‌ஷன் 125 இன் படி திருமதி.வானதி சீனிவாசனாகிய நீங்கள் குற்றம் இழைத்தது 100% ஊர்ஜிதம் ஆகிறது.

மத்திய பிரதேசத்தில் இது போன்ற தவறான கணக்கில் பாஜக எம்எல்ஏ ஒருவர் மூன்று ஆண்டுகள் தேர்தலில் நிற்க கூடாது என சமீபத்தில் அறிவிக்கப்பட்டதை அறிவீர்கள்.

ஊர் வாயை மூடதான் இயலுமா?.
நெற்றிக் கண்ணை திறக்கும் நம் பிரதமரைதான் இனி ஏமாற்றவும் இயலுமா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.