18/07/2017

பிற்போக்குத்தனமான பாஜக அரசின் அடுத்த புறம்போக்குத்தனம் மத்திய பிரதேசத்தில் ஆரம்பம்...


அரசு மருத்துவமனைகளில்,  நோயாளிகளின் ஜாதகங்களை ஆராய்ந்து மருத்துவர்களுக்கு உதவி புரிய ஜோஸ்யக்காரர்களும் நியமிக்கப்படுவார்கள்.

இந்த நோயாளிக்கு  இந்த நோய் ஏன் வந்தது, என்ன பாவம் செய்தார் ? அந்தப் பாவம் முன் ஜென்மத்தில் செய்யப்பட்டதா, இப்பிறப்பில் செய்யப்பட்டதா ? இதற்கு மருத்துவம் அல்லாத பரிகாரம் ஏதேனும் இருக்கிறதா ? இல்லை மருத்துவம் தான் செய்ய வேண்டுமா ? இந்த பாவத்துக்கு இவர்  இனியும் வாழ வேண்டுமா, இல்லை கைவிடப்பட வேண்டுமா ? இவருக்கு என்ன மருத்துவம் செய்ய வேண்டும் ? சிகிச்சைக்கான நல்ல நேரம் எது ?அறுவை சிகிச்சைக்கான நல்ல நேரம் எது ? அறுவை சிகிச்சை வெற்றி குறித்து நோயாளியின் கிரக நிலைகள் என்ன சொல்லுகின்றன ? மருத்துவத்துக்கு அப்பாற்பட்டு பூஜைகள், மந்திரங்கள், யாகங்கள் செய்யப்பட வேண்டுமா ? என்றெல்லாம் இந்த ஜோஸ்யக்காரர்கள் நோயாளிகளுக்கு ஆலோசனை கொடுப்பார்கள் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்து இருக்கிறார்.

இதிலிருந்து, மத்திய மோடி அரசு, வளர்ச்சி வளர்ச்சி என்று பேசிக்கொண்டு எந்த அளவுக்கு  பிற்போக்குத்தனமான செய்லகளை மக்களிடம் புகுத்தி வருகிறது என்று அறிந்து கொள்ளலாம். மோடி  ஒரு பேத்தனமான ஆள் என்பதை இனியேனும் உணருங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.