19/08/2017

இந்த பேரூந்து ஒன்றுக்கும் உதவாது என 18 வருடங்களுக்கு முன்பு அரசால் ஏலம் விடப்பட்ட அரசு பேரூந்து (பதிவு என் காண்க TN 72 N 0273)...


அந்த பேரூந்தை ஏலம் எடுத்த நெல்லை தனியார் போக்குவரத்து கம்பனியான DSR பேரூந்தை மறு கட்டமைத்து இரண்டு டிவிகளுடன் ஒலி ஒளி அமைத்து புதிய பேரூந்தாக மாற்றியமைத்தனர்.

இப்போதும் இந்த பேரூந்து நெல்லையில் இருந்து வீரவநல்லூருக்கு ஓடிக்கொண்டு இருக்கிறது அதுவும் நல்ல லாபத்துடன் இந்த பேரூந்தில் பயணம் செய்த அந்த காலத்து கல்லூரி மாணவர்களின் வாரிசுகள் இன்று அதே பேரூந்தில் கல்லூரி சென்று வருகின்றனர் வீரவநல்லூர் மக்களுக்கு தங்களின் குடும்ப உருப்பினராக இன்றுவரை கம்பீரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. காரணம் சிறந்த நிர்வாகம் பயணிகள் எந்த இடத்தில் கை காட்டினாலும் நிறுத்தி ஏற்றிக்கொள்வார்கள் எந்த இடத்தில் இறங்க வேண்டும் என்றாலும் இன்முகத்துடன் இறக்கி விடுவார்கள்...

ஆனால் எங்கள் ஊருக்கு வரும் அரசு பேரூந்துகளும் சரி ஊருக்கு உள்ளே வர அனுமதி இருந்தும் வராமல் புறவழிச்சாலை வழிகாக செல்லும் அரசு பேரூந்துகளும்   இங்கே நிற்காது அங்கே நிற்காது என சட்டம் பேசி போக்குவரத்து கழகத்தை நஷ்டத்தில் இயக்கும் அதிகாரிகளும் , ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களும் அரசு போக்கவரத்து கழகத்தை எப்படி லாபத்தில் இயக்குவது என DSR கம்பனியில் ஒரு மாதம் சிறப்பு வகுப்புக்கு செல்லலாம்...

அதிலும் சில அரசு பேரூந்துகள் புறவழிச்சாலை வழியாக வேகமாக சென்று வீரவநல்லூர் மக்களை புறக்கனித்துவிட்டு வேறு யாருடய லாபத்திற்காக செயல்படுகிறர்கள் என இன்று வரை புதிராகவே உள்ளது.

ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது அரசு பேரூந்து நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் விரைவில் அரசு போக்குவரத்துகழகத்தை நஷ்டத்தை கணக்கு காட்டி தனியாருக்கு தாரைவார்க்க தீவிரமாக செயல்படுகிறீர்கள் என்று.

தீதும் நன்றும் பிறர் தர வார...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.