15/08/2017

மாதந்தோறும் 200 விபத்துகள் குரைக்க வழிகேட்டால் தனியார்க்கு தாரைவார்க்க துடிக்கிறது, நட்ட கணக்கு காட்டி உழைக்கும் மக்கள் உழைப்பை சுரண்டி, வயிற்றில் அடிக்கும் போக்குவரத்து கழகம்...


சுரண்டல் அரசு கட்டமைப்பை துக்கி எரியாது தீர்வு இல்லை தோழர்களே.. மாதந்தோறும் 200 விபத்துகள்..

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஆண்டுதோறும் 20 சதவீத பேருந்துகளை நீக்கி புதிய பேருந்துகளை சேர்க்க வேண்டும். ஆனால், கடந்த 2001-ல் இருந்து மிக சொற்பமான பழைய பேருந்துகள் மட்டுமே நீக்கப்படுகின்றன. புதிய பேருந்துகளை வாங்காமல் காலம் தாழ்த்துவதால், பேருந்துகள் சேதமடைகின்றன. மழைகாலத்தில் பேருந்துகளின் மேற்கூரை வழியாக மழைநீர் உள்ளே கொட்டுகிறது. காலாவதிப் பேருந்துகள் இயக்கப்படுவதாலும், உதிரி பாகங்கள் முறையாக மாற்றப்படாததாலும், அரசுப் பேருந்துகள் விபத்துகளில் சிக்குவதும் அதிகரித்து வருகிறது.

5 ஆண்டுகளுக்கு முன்பு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மாதந்தோறும் சராசரியாக 50 விபத்துகள் நடக்கும். தற்போது இது 200 ஆக அதிகரித்துதுள்ளது. குறிப்பாக, கடந்த 7 மாதங்களில் மட்டும் தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளால் சுமார் 1,300 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில், 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தைக் குறைக்க வழி.. சாலை விபத்துகளைக் குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சென்னை ஐஐடி பேராசிரியர் கீதகிருஷ்ணன் ‘தி இந்து’விடம் கூறியதாவது...

சென்னை போன்ற பெருநகரங்களில் பேருந்து ஓட்டுவது சவாலானது, கடினமானது. ஓட்டுநர்களுக்கு கூடுதல் பணி இருக்கக் கூடாது. பேருந்துகளை இயக்க அவர்களுக்குப் போதிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். அப்போதுதான் அவர்களது மனநிலை நன்றாக இருக்கும். மேலும், காலாவதி பேருந்துகளை இயக்கவே கூடாது.

ஓட்டுநர்கள் கண் சிமிட்டினாலேயே அலாரம் அடிக்கும் தொழில்நுட்ப வசதியை செயல்படுத்தலாம். ஓட்டுநர்களின் பணிச்சுமையைக் குறைக்க, மாற்று ஓட்டுநர்களை பணியில் அமர்த்தலாம். இதற்கான ஆய்வுகள் கோரக்பூர் ஐஐடியில் நடந்து வருகிறது என்றார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.