28/08/2017

இதயம் - சமஸ்கிருதம் இரவல் வாங்கிய தமிழ்ச் சொல்...


சில சமஸ்கிருதவாதிகள் இதயம் என்ற முக்கியமான அங்கத்துக்கே தமிழில் சொல் கிடையாது.  ஹிர்தயம் என்ற சமக்கிருதச் சொல்லைத் தான் தமிழ் இரவல் வாங்கியுள்ளது என்கிறார்கள்.

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.

(திருமந்திரம் : யாக்கை நிலையாமை : பாடல்148).

இப்பதான் வந்தாரு, நல்லா சாப்பிட்டு விட்டு  எல்லாத்துக்கிட்டேயும் நல்லா பேசிக்கிட்டிருந்தாரு, இலேசா நெஞ்சை வலிக்குதுன்னாரு - படுத்தாரு அப்படியே போய்ட்டாரு" என்று நாம் அடிக்கடி கேள்விப்படுகிற நிகழ்வைச் சொல்கிற பாடல் இது.

இதில் இடப்பக்கமே இறைநொந்தது என்ற சொற்கள் கவனிக்கப்பட வேண்டியவை.

இறைவன் எல்லா உயிர்களிலும் இருக்கிறான்.  இறைவனே உயிர்களின் இயக்கம். அந்த இயக்கம்  நடைபெறுவது இறையத்தில். அந்த இறையம் நின்றால் அதாவது இறைவன் வெளியேறினால் அது வெறும் உடலாகி விடுகிறது.

இறைவன் எங்கு குடியிருக்கிறான் என்றால்  எல்லோரும் நெஞ்சில் குடியிருக்கிறான்  என்று தான் சொல்வார்கள்.

இன்னொரு பொருளும் இதற்கு ஏதுவாகவே இருக்கிறது. இறைத்தல் என்றால் நீரை அள்ளி அல்லது முகந்து இறைப்பது/வீசுவது.

இறை என்ற கருவி செய்யும் வேலையும் அதே. குருதியை இழுத்து/அள்ளி பல இடங்களுக்கும் தள்ளி/வீசி விடுவதே அதன் தொழில்.

ஆகவே, இறை யோடு, அம் விகுதி சேர்ந்து  இறையம் ஆகிறது.

இறை + அம் = இறையம் > இதயம்
இறை என்றால் முக்கியமான, உயர்ந்த என்ற பொருள்களும் உண்டு.

உடலுறுப்புகளில் இறை என்பது ஒரு அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த உயர்ந்த உறுப்பு.

ஆகவே திருமூலர் சொல்லே மிகச் சரியாக இருக்கிறது. இதயம் என்பது நமது சொல்.  

இதன் மருவலை நீக்கி இறையம் என்று புழங்க வேண்டும்.  

வடமொழிக்கு தமிழ் தந்த கொடைகளில் இதுவும் ஒன்று...

சமஸ்கிருதம் தமிழிலிருந்து எவ்வளவோ சொற்களை இரவல் வாங்கியுள்ளது, ஆனால் அதை மறுப்பவர்கள் எவருமே எப்படி அந்தச் சொற்கள் சமஸ்கிருதத்தில் உருவாகின என்பதைக் காட்டும் சமஸ்கிருத வேர்ச்சொற்களைக் காட்டுவதேயில்லை.

தமிழ் பேசும் உலகில் தமிழைத் தாழ்த்தி, சமஸ்கிருதத்தை உயர்த்தி அதைப்பற்றிப் பீற்றிக் கொள்பவர்களில் பெரும்பாலானோர் (எல்லோரும் என்று கூடக் கூறலாம்) பார்ப்பனர்கள் தான் என்பது தமிழர்கள் அனைவரும் அறிந்த விடயமே.

சும்மா பரம்பரை பரம்பரையாக வயிற்றுப் பிழைப்புக்காக, ஒரு சில மந்திரங்களை அவற்றின் பொருள் தெரியாமலே,  பாடமாக்கி காலத்தையோட்டிய காரணத்துக்காக, சமக்கிருதத்துக்கும் 'அவாளுக்கும்' ஏதோ ‘Special’ தொடர்பு இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள் என்பது தான் வேடிக்கை.

அதிலும் வேடிக்கை என்னவென்றால் முழு உழுந்துக்கு எண்ணெய் தடவின மாதிரி கரு கருவென்றிருக்கிற தமிழ்நாட்டுச் சூத்திர திராவிடப் பார்ப்பனர்கள் கூட ஏதோ இப்ப தான்  ஈரானிலிருந்து ஹைபர் கணவாய்க்கூடாக வந்த ஒறிஜினல் ஆரியன் மாதிரி சமக்கிருதத்தின் மீது அவ்வளவு பற்றும், பாசமும் காட்டுவது தான்.

சமக்கிருதத்தின் மீது இவ்வளவு பற்றுக் கொண்டுள்ள இவர்களுக்கு பரம்பரை, பரம்பரையாக இவர்களுக்குச் சோறு போட்ட தமிழின் மீது பற்றில்லாமல் போனது ஏனென்று தான் புரிந்து கொள்ள முடியவில்லை.

இதற்கு அவர்களின் மேட்டிமை நினைப்பும்  காரணமாகும், ஏனென்றால் தமிழை விட சமஸ்கிருதம் உயர்ந்தது என்று பீற்றிக் கொண்டால் அல்லது ‘நிரூபித்தால்’ அல்லது அப்படி வாதாடினால், தமிழை இழிவுபடுத்தினால், தமிழை மட்டுமல்ல தமிழர்களையும் அடக்கிவிட்டதாக நினைத்துக் கொள்கிறார்கள் போலிருக்கிறது. இவர்களின் நினைப்பை பெரும்பாலான தமிழர்கள் அதிலும் சைவத் தமிழர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.

அதிலும் சிலர் “சமஸ்கிரிதம் என்னும் மொழியில் எல்லா விதமான நூல்களும் உண்டு” என்றும் பீற்றிக் கொள்கிறார்.

இக்காலத்தில் என்ன காரணத்தால் ஆங்கிலத்தில் எல்லா நூல்களும் இருக்கின்றனவோ அதே காரணத்தால் தான் சமக்கிருத்திலும் எல்லா நூல்களும் இருக்கின்றனவே தவிர சமக்கிருதம் அறிந்தவர்கள் (பேச்ச ுமொழியல்ல) அல்லது இக்காலத் தமிழ்ப் பார்ப்பனர்களின் முன்னோர்கள் எல்லோருமே அறிஞர்கள் என்று கருத்தல்ல.

அக்காலத்தில் ஐரோப்பாவில் எவ்வாறு  சட்டம், மருத்துவம், விஞ்ஞானம்,  தெய்வீகவியல், கல்வெட்டுகள்  போன்ற அறிவியல் சம்பந்தமான எல்லா  விடயங்களுக்கும் லத்தீன் மொழி, அறிஞர்களால் எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் பயன்படுத்தப் பட்டதோ. அதே காரணத்துக்காகத் தான் சமஸ்கிருதமும்  இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் மட்டுமன்றி, தமிழரசர்கள் படையெடுத்த நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டது.

இன்று அமெரிக்க, ஐரோப்பிய, இந்திய, சீன,பன்னாட்டு விஞ்ஞானிகளும் கூட தமது ஆராய்ச்சிகளை ஆங்கிலத்தில் தான் செய்கிறார்கள். அதைக் காரணம் காட்டி  இன்னும் ஆயிரம் வருடங்களின் பின்னால் ஒரு அரைவேக்காடு, சீன மொழியை விட ஆங்கிலம் உயர்ந்தது ஏனென்றால் ஆங்கில மொழியில் எல்லா நூல்களும் உண்டென்றால், அது எவ்வளவு முட்டாள் தனமானதோ அது போன்றது தான் சமஸ்கிருதவாதிகளின் “சமஸ்கிருதத்தில் எல்லா விதமான நூல்களும் உண்டு" என்ற வாதமும்.

உண்மையில் சமஸ்கிருதத்தில் உள்ள நூல்களை இயற்றியவர்கள் எல்லாம் பிராமணர்கள் அல்ல. வால்மீகியோ அல்லது வியாசர் கூட பிராமணரல்ல.

சமக்கிருத்திலுள்ள பல நூல்கள் பிராகிருதம், தமிழ், மகதி போன்ற இந்தியாவின் பழமையான மொழிகளிலிருந்தும், கல்வியிலும், ஆராய்ச்சியிலும் சிறந்து விளங்கிய பெளத்தர்களிடமிருந்தும் இரவல் வாங்கியும், திருடியும் மொழி பெயர்க்கப்பட்டவை என்கிறது Plagiarism by Sanskrit Authors என்ற கட்டுரை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.