28/08/2017

விக்கிலீக்ஸ் இன்றைக்குச் சொன்ன அதிர்ச்சி தகவல் இது... நமது ஆதார் அட்டை விவரங்கள் அனைத்தையும் அமெரிக்காகைப்பற்றி விட்டது...


இந்திய அரசுக்கு  'கிராஸ் மேட்ச்'  என்கிற அமெரிக்க நிறுவனம் தான் ஆதார் அட்டை தொடர்பான பதிவு மற்றும் பாதுகாப்பு மென்பொருளை தயாரித்து கொடுத்தது.

அதே நிறுவனம்  அந்த ஆதார்  அட்டை விவரங்களைத்  திருடுவதற்கான மென்பொருளையும்  அமெரிக்காவுக்கு செய்து கொடுத்துள்ளது.

இதற்காக கோடி கணக்கில் அந்த நிறுவனம் பணம் பெற்றுளளது.

ஆனால் இந்திய அரசு இதை அலட்சியமாக மறுக்கிறது. விக்கி லீக்சின் இந்த தகவல்  பொய்யானது. அப்படி யாரும் நம் தகவல்களை திருடி விட முடியாது என்று  சொல்கிறது.

வந்திருக்கிற செய்தி உண்மைதானா என்று ஆராய்ந்து பார்த்து விட்டு, பிறகு பதில் சொல்லும் போக்கு இந்தியாவிடம் இல்லை. மேம்போக்கான அலட்சியமான பதில்களையே இந்தியா தருகிறது.

நாடு என்னாகுமோ என்ற பயம் நமக்கு இருக்கிறது. அவர்களுக்கு இல்லை.. ஐந்து வருடம் ஆளப்போறோம். அப்புறம் யாருக்கு என்னானா நமக்கு என்ன என்று நினைக்கிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.