20/08/2017

தமிழ்நாட்டை வடமாநிலங்களோடு ஒப்பிடுவதே தவறு, முன்னேறிய நாடுகளோடு தான் ஒப்பிட வேண்டும்...


தமிழ்நாடு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இந்தியாவின் மாநிலங்களில் நான்காவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது.

தமிழ் நாட்டின் வளர்ச்சி விகிதம் 9.39 விழுக்காடு.

தமிழ் நாட்டின் வளர்ச்சி விகிதம் மற்ற தென் மாநிலங்களை விட அதிகமாக உள்ளது.

தமிழ்நாடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவில் இரண்டாவது பெரிய மாநிலமாக உள்ளது.

தமிழ்நாடு அரசு மாநில வரி வருமானத்தில், இந்தியாவில் நான்காவது இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் பெரும்பான்மையான இந்திய மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் தமிழகத்தைப் போல மூன்று மடங்கு மக்கள் தொகை அதிகம். ஆனால், சுகாதார துறைக்கு ஒதுக்கப்படும் தொகையானது, தமிழகத்தைவிட மூன்றில் ஒரு மடங்கு தொகை குறைவு.

அந்தத் தொகையிலும் பெரும்பகுதி, ஹிந்துத்துவா வலியுறுத்தும் ஆயுர் வேதம் போன்ற பயனளிக்காத  மாற்று மருத்துவ முறைகளுக்குத் தான் செலவிடப்படுகிறது.

இத்தனைக்கும் மத்திய அரசு வட மாநிலங்களுக்கு தான் அதிக நிதியை ஒதுக்குகிறது.

அவற்றை, கோசாலை, மாட்டுக்கு ஆம்புலன்ஸ், வேதகால அறிவியல் போன்ற பயன்படாத திட்டங்களுக்கு வெட்டி செலவு செய்கிறார்கள்.

மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கு சலுகை என எந்த ஏற்பாடுகளும் கிடையாது. அதனால் அங்கெல்லாம், தரமான மருத்துவ வசதி என்பது பெரும்பான்மை மக்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது.

இது போக தென்மாநிலங்களில் உள்ளது போல பரவலாக உள்ள கிருஸ்துவ மிஷினரிகளின் மருத்துவ சேவைகளும் வட மாநிலங்களில் மிக மிக குறைவு.

எனவே தான் தமிழ்நாட்டை வடமாநிலங்களோடு ஒப்பிடுவதில்லை, முன்னேறிய நாடுகளோடுத்தான் தான் ஒப்பிட வேண்டும் என நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமெர்த்தியா சென் சொன்னார்.

தமிழகத்தின் மொத்த வருமானம், ஒட்டு மொத்த பாகிஸ்தான் நாட்டின் வருமானத்திற்கு சமம்.

ஒரு மாநிலத்தின் வருமானம் இந்தியாவிற்கே சவால் விடும் அண்டை நாட்டின் வருமானத்திற்கு நிகராக உள்ளதென்றால், அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும்.

நம் தமிழ் மாநில கல்வியின் தரத்தை அளவிட இந்தியாவில் எவனுக்கும் அறிவோ, அருகதையோ கிடையாது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.