13/08/2017

இதுநாள் வரை ரஷ்யா வழங்கிய ஆயுதங்கள் அனைத்துமே போலியானவை…


காலாவதியானதை இந்தியாவிற்கு கொடுத்து, சீனாவுடன் கைகோர்த்தது அம்பலம்...

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இராணுவ டாங்குகளுக்கான உலக டாங்க் பையாத்லான் போட்டி நடந்து வருகின்றது. இதில் ஜப்பான், சீனா, பிரான்ஸ் மற்றும் இந்தியா போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து  அந்தந்த நாடுகளின் சார்பாக டாங்குகள் போட்டிக்கு அனுப்பப்படும்.

கார் பந்தையத்தை போன்று சவால் மிகுந்த ஓடுதள பாதை அமைக்கப்படிருக்கும். இதில் டாங்குகள் ஏறி இறங்கி தனது இலக்கை சென்றடைய வேண்டும்.

நிஜத்தில் ஒரு போர்க்களத்தில் என்ன மாதிரியான பாதை இருக்குமோ அதை விட மிக மோசமான அளவில் உருவாக்கப்பட்டிருக்கும் ஓடுதள பாதை.

இதன் போது டாங்குகளின் முழு திறனும் பரிசோதிக்கப்பட்டு விடும். எந்த அளவிற்கு தாக்கு பிடிக்கும், என்ன மாதிரியான பிரச்சனை வரும், என்ன சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி வரும், உள்ளிட்ட பல விவரங்கள் சேகரிக்கப்படும்.

இதில் இந்தியா சார்பாக ரஷ்ய தயாரிப்பு  டி-90 டாங்கு அனுப்பப்பட்டது. போட்டியின் போது விரைந்து சென்ற டாங்கு பாதி வழியிலேயே இயந்திர கோளாறினால் நின்று விட்டது.

மேலும் இந்தியா சார்பாக சென்ற இரண்டு டாங்குகளும் இதே போல பாதி வழியில் இயந்திர கோளாறினால் நின்று விட்டன.

இவை இரண்டுமே ரஷ்ய தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ரஷ்யா சார்பாக பங்கேற்ற டாங்கு இலக்கை அடைந்து வெற்றி பெற்று விட்டது.

இந்தியாவின் உள்நாட்டு தாயாரிப்பான அர்ஜுனா டாங்கியை அனுப்பாமல் இந்தியா ரஷ்ய தயாரிப்பை அனுப்பி வைத்து அவமானப்பட்டுள்ளது.

இது போன்று பல ஆயுதங்கள் ரஷ்யாவில் இருந்து வாங்குவது எல்லாம், காலாவதியான தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது என்பது நிரூபணமாகி உள்ளது.

இது மட்டும் அல்லாது இந்தியாவில் ரஷ்யா சார்பில் அமைக்கப்படும் அணு உலைகளும், செர்பியாவில் மாபெரும் கோர விபத்தை ஏற்படுத்திய தொழில்நுட்பம் தான் என்பது உறுதி.

ஆயுத விவகாரத்தில் இரண்டு கம்யுனிஸ்ட் நாடுகள் ஒன்றை ஒன்று விட்டுக் கொடுக்காது, இந்தியாவை போரில் பின்வாங்க செய்யும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.