13/08/2017

டெல்லியில் ஓபிஎஸ்-ஸை சந்திக்க பிரதமர் மோடி மறுப்பு; அதிமுக அணிகள் இணைப்பில் சிக்கல்...


டெல்லி சென்ற முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அவரது அணியினர் பிரதமர் மோடியை சந்திக்காமல் திரும்பியுள்ளார்.

அணிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பினர் புதிய ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர். அதில் எடப்பாடி அணியினர் நிறைவேற்றிய தீர்மானத்தின் படி டி.டி.வி தினகரன் ஆகியோர் நியமனம் செல்லாது, எனவே எங்களது அணியே உண்மையான அதிமுக என்று அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஓபிஎஸ் அணியின் இந்த திடீர் செயல் பாஜக மேலிடத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் எடப்பாடி தரப்பினரும் அதிருப்தி அடைந்துள்ளதால் அணிகள் இணைப்பு பேச்சு வார்த்தையில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு இரு அணிகள் இணைப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் பிரதமர் மோடியை சந்திக்க சென்ற முதல்வர் பழனிசாமியை ஒன்றரை மணி நேரம் காத்திருக்க வைத்து சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அந்த சந்திப்பு சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே நீடித்ததாகவும், அணிகள் இணைப்பு குறித்தும், ஓபிஎஸ் செயல் குறித்தும் பேசியதாக கூறியுள்ளனர்.

இதன் காரணமாகதான் பிரமர் மோடி பன்னீர் செல்வதை சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது.

குடியரசு துணை தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அவரது அணியினர் டெல்லியிக்கு சென்றிருந்தனர். பிரதமர் மோடி ஓபிஎஸ்ஐ சந்திக்காததால் அதிருப்தி அடைந்த ஓபிஎஸ் மற்றும் அணியினர் டெல்லியில் இருந்து திரும்பி விட்டனர்.

அவர்கள் டெல்லியில் இருந்து மும்பை செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து ஒபிஎஸ்க்கு தலைமை பொறுப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஓ.பி.எஸ்.ஐ சந்திக்க பிரதமர் மோடி மறுப்பு தெரிவித்ததால் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.