27/08/2017

தஞ்சை பெரிய கோவிலில் பிள்ளையார் வழிபாடும் நகரத்தார் தொடர்பும்...



பெருவுடையார் கோவிலின்  மேற்குப்புற திருச்சுற்று மாளிகையின் உட்புறத்தில் உள்ள சிறு பிள்ளையார் முகப்பில்  கல் வெட்டு உள்ளது.

அதில் இக்கோவில் பிள்ளையாருக்கு தினசரி அமுது படைத்தல் வேண்டும்..

தினம் ஒன்றுக்கு 150 வாழைப்பழங்கள் வேண்டும்.

இந்த அமுது படையல் நிகழ்வானது வருடம் முழுவதும் தடையின்றி நடக்க  நகரத்தார்கள் விரும்பினார்கள்.

ஒரு வைப்புத்தொகை உருவாக்கப்பட்டது..

வாழைப்பழம் வாங்குவதற்காக  வைப்பு தொகை அளிக்க, தஞ்சையின் முக்கிய நான்கு தெருக்களை சேர்ந்த நகரத்தார்கள் கொடுத்தார்கள்.

அவர்கள் முறையே 60 காசு., 120 காசு., 120 காசு., 60காசு.. மொத்தம் 360 காசுகள்  நிவந்தனம் அளித்தனர்.

இந்த வைப்புத்தொகை 360 காசுகள்...
தஞ்சை சிறுவணிகர்களுக்கு  ஆண்டுக்கு 12.5 % என்ற வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்பட்டது..

வருட வட்டியாக 45 காசுகள் ( 360*12.5% - 45) பெறப்பட்டது.

பிள்ளையாருக்கு அமுத படைக்க நாளொன்றுக்கு 150 வாழைப்பழங்கள் தேவை.

ஆண்டுக்கு 360 நாட்கள் எனத் தெரிகிறது.

ஆக... ஒரு வருடத்திற்கு தேவைப்படும்
வாழைப்பழங்களின் எண்ணிக்கை 360* 150 - 54000..

அன்றைய நாளில் ஒரு  காசுக்கு 1200 வாழைப்பழங்கள் கிடைத்தன.

வட்டித்தொகையாக கிடைத்தது 45 காசுகள்.

எனவே 45*1200 - 54000 வாழைப்பழங்கள் கிடைத்தன.

பிள்ளையாருக்கும் தடையின்றி வருடம் முழுவதும் படையல் தொடர்ந்தது.

இச் செய்தியினை விரிவாக கூறும். கல் வெட்டு வரிகளை கீழே உள்ளது படித்து பாருங்கள்.

சமுத்திரம் போல் இருக்கும் தஞ்சை பெரிய கோவிலில்.. ஒரு சிறு துளிபோல் காணப்படும் பிள்ளையார் கோவிலுக்கு தினசரி நெய்வேத்தியம் செய்ய இவ்வளவு ஏற்பாடுகள் என்றால்..

தஞ்சை பெருவுடையாருக்கு பூஜைகள் நடக்க எவ்வளவு,  எவ்வளவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.?

நகரத்தாரின் செல்வாக்கு எப்படி இருந்திருக்கும் என நினைத்து பாருங்களேன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.