22/08/2017

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உண்மையில் நடந்தது என்ன..?


திக, திமுக கட்சியினரின் வாய் ஜாலத்தினால் மக்கள் தூண்டப் பட்டு, இந்த போராட்டத்தில் முதலில் கல்லூரி மாணவர்களும், பிறகு பொதுமக்களும் பெரும் அளவில் கலந்து கொண்டார்கள்.

இவர்கள் வாய் வார்த்தையை நம்பி பலர் மொழிக்காக போர் என்றே முடிவு செய்து தீக்குளித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார்கள்.

பொது சொத்துக்கள் தீக்கிரையாகின.

அண்ணாவும் பல தலைவர்களும் சிறை சென்றனர்.

ஆனால், இறுதியில் நடந்தது என்ன தெரியுமா..?

போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே..

இந்தப் போராட்டத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது..

1965 ஜனவரி 26ஆம் நாளை துக்கநாளாகக் கடைபிடித்ததோடு எங்கள் போராட்டம் முடிந்து விட்டது..

என்று அண்ணா அறிவித்து விட்டார்...

சிறை சென்ற பல தலைவர்கள் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து வெளி வந்தனர்.

இந்தி திணிக்கப் படமாட்டாது என்பதை மத்திய அரசின் அரசாணையாக வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தவர்கள் வெறும்  வாக்குறுதியை மட்டும் சாக்காக வைத்து போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

பாவம், இவர்களை நம்பி தீக்குளித்த தமிழர்கள்  தான் முட்டாள்கள் ஆனார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.