07/08/2017

கீழ்வாலை பாறை ஓவியங்கள்...


கீழ்வாலை என்னும் இடத்தில் (விழுப்புரம் மாவட்டம்) விலங்கு முக மனிதஓவியங்கள் கிடைத்துள்ளன.

ஓர் ஓவியத்தில் குதிரையின் மீது ஒரு மனிதன்அமர்ந்திருக்க, அக்குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து ஒருவர் அழைத்துச்செல்வது போல அமைந்துள்ளது. இதனருகே மற்றுமோர் உருவமும் காணப்படுகிறது. இந்த மூன்று மனிதர்களது முகங்களும் விலங்கின் முகங்களாக அமைந்துள்ளன.

விலங்கு போன்று வேடம் அணிந்து ஆடுதல் என்னும் வேட்டைச் சடங்குகளைப் பிரதிபலிக்கும் ஓவியங்களாக இவற்றைக் கருதலாம்.

குதிரையின் மீது மனிதன் - கீழ்வாலை..

அடுத்ததாகப் படகு ஒன்றில் நான்கு மனிதர்கள் செல்வது போன்ற ஓவியம்காணப்படுகிறது. இதில் நான்கு மனிதர்களது முகங்களும் பறவை முகங்களாகவே காணப்படுகின்றன.

கீழ்வாலையில் காணப்படும் மனித உருவங்களில் ஓர் உருவம் மட்டும்பெரியதாக உள்ளது; அம்மனிதனின் நீண்ட தலைமுடி இரு பகுதிகளாகப்பிரிக்கப்பட்டுக் காணப்படுகிறது. இது அவ்வுருவத்திற்குரிய சிறப்பைச்சுட்டுவதாக அமைகிறது. அவ்வுருவத்தை அக்குழுவின் தலைவன் என்றோஅல்லது முன்னோரது நினைவுச் சின்னம் என்றோ கருதலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.