21/08/2017

சட்டசபையில் திமுக விடம் ஜனநாயகம் பட்டபாடு..


அப்போதும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி... இங்கே கலைஞர் எம்.எல்.ஏவாக இருந்தார், அப்போ மின்சார வாரிய நிலத்தில் நடந்த ஒரு மிகப்பெரிய மோசடியை ஆதாரத்தோடு சபையில் அம்பலப்படுத்தினார் பேராசிரியர். மறுநாள் ஏதோ காரணத்தினால் பேராசிரியர் சட்டசபைக்கு வரல. காங்கிரஸ் எம்.எல்.ஏவான அனந்தநாயகி எழுந்து,

நேத்து சபையில மோசடி அது இதுன்னு பேசிய பேராசிரியர் ஏன் இன்னைக்கு சபைக்கு வரல? அவருக்கு முதுகெலும்பு இருந்திருந்தா இன்னைக்கு வந்திருக்கணும்’னு கடுமையா பேசிட்டாங்க.

உடனே எழுந்த கலைஞர், ‘பேராசிரியருக்கு முதுகெலும்பு இருக்கா இல்லையான்னு அவரோட பொண்டாட்டிக்குத் தானே தெரியும். அனந்த நாயகிக்கு எப்படி தெரியும்?’னு போட்டாரே ஒரு போடு. அவையில் சிரிப்பு சத்தம் அடங்க கிட்டத்தட்ட பத்து நிமிஷம் ஆச்சு.. என்று ஃப்ளாஷ்பேக்கை விவரிக்கும் போது தமிழக வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு இப்போதும் சிரிப்பை அடக்க முடியவில்லை..

- கலைஞர் 50, ஜூனியர் விகடன் ( ஏப்ரல் 19, 2007).

அனந்த நாயகி எம்.எல்.ஏ முதுகெலும்பு என சொன்னது அன்பழகனின் தைரியத்தை பற்றி ஆனால் நம்ம ஜனநாயக காவலர் கருணாநிதி பதில் சொன்னது.. பேராசிரியருக்கு முதுகெலும்பு இருக்கா இல்லையான்னு அவரோட பொண்டாட்டிக்குத்தானே தெரியும். அனந்தநாயகிக்கு எப்படி தெரியும்? என. அதாவது இந்த இடத்தில் படுக்கையறையை இழுத்தால் அனந்த நாயகியால் மேற்கொண்டு பேச முடியாது.

இதை மூன்றாம் தர விதன்டாவாதத்தை ஜனநாயகம்னு உடன்பிறப்புகள் பானியில் சொல்லலாம்.

இந்த ஜனநாயகம் தானே திமுக சட்டசபையில் கேட்க்கும் ஜனநாயகம்?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.