08/10/2017

மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்க மாநில தன்னாட்சி வேண்டும்...


இந்திய அரசியல் சட்டம் 370 – இது தமிழகத்திற்க்கு ஏன் வேண்டும்..

இதுவரை தமிழர்களுக்கு இந்திய அரசு எந்த ஒரு வகையிலும் பாதுகாப்பு கொடுத்ததில்லை.

தமிழன் கர்நாடாகாவில் தாக்கபட்டாலும் சரி..

கேரளாவில் தாக்கபட்டாலும் சரி..

சிங்கவர்களால் கொல்லபட்டாலும் சரி..

ஆந்திரவால் கொல்லப் பட்டாலும் சரி..

இந்திய அரசு துளியும் கவலைபட்டதில்லை அப்பறம் என்ன புடுங்கின பாதுகாப்பு கொடுத்துட்டானுங்க.

மத்திய அரசின் அதிகாரம் என்பது என்ன?

இந்தி மொழியை தமிழகத்தில் திணிப்பது.

தமிழ் தெரியாத வடநாட்டவர்களை தமிழ்நாட்டில் இருக்கும் துறைகளில் பணியில் அமர்த்துவது?

தமிழ் மொழியை புறக்கணித்து முற்றிலும் கிந்தி, ஆங்கில மையமாக மாற்றுவது.

மேலும் தமிழகத்தில் இருக்கும் எண்ணற்ற இந்திய அரசின் துறையில் வடநாட்டவர்களே பெரிய பதவிகளில் அமர்த்தபடுகிறார்கள்.

பணியில் கீழ்நிலையில் இருந்து மேல் நிலைவரை வடநாட்டவர்கள்..

எந்த பதவியில் தமிழகத்தில் இருந்தாலும் தமிழ் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது..

ஆனால் தமிழன் இந்திய அரசு துறையில் பணி செய்ய வேண்டுமானால் கிந்தி நேரடியாகவும், முறைமுகமாகவும் கட்டாயமாக திணிக்கபடுகிறது.

எ-டு... இந்திய தேர்வுகளில் இந்திக்கு மட்டும் அனுமதி உண்டு, தமிழ் மொழியில் நடத்த அனுமதி கிடையாது?

தமிழகத்தில் இருக்கும் வழக்காடு மன்றத்தில் தமிழில் வழக்காட அனுமதி கிடையாது?

அன்று,

வெள்ளையனுக்கு கப்பம் கட்டி கொண்டு அவன் நம் மேல் திணித்த ஆங்கிலத்தை பொருத்து கொண்டு அடிமையாக வாழ்ந்தோம்...

இன்று,

வடநாட்டவர்களுக்கு வரி பணம் செலுத்தி கொண்டு அவர்கள் நம் மீது திணிக்கும் கிந்தியை பொருத்து கொண்டு அடிமையாக வாழந்து வருகிறோம்?

இதற்க்கு பெயர் விடுதலையா?

இந்திய அரசியல் சட்டம் 370 ..

இது தமிழகத்திற்க்கு ஒரு முழுமையான விடுதலை இல்லை என்றாலும் ஒரு தற்காலிகமான பாதுகாப்புகாகும்...

தமிழ் குடியரசு ஒன்றே முழுமையான மெய்யான விடுதலை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.