17/10/2017

எத்தனை நாட்கள், நீங்களும், உங்கள் முட்டாள் பாஸும் - ரிபப்ளிக் டிவி ஸ்வேதா கோதாரிக்கு உதயகுமார் கடிதம்...


விசுவாசம் என்றால் என்னவென்று தெரியுமா? என ஸ்வேதா கோதாரியை பார்த்து கேள்வி எழுப்பியிருக்கிறார் அணு உலை எதிர்ப்பு போராளி எஸ்.பி உதயகுமார்.

ரிபப்ளிக் சேனலின் மூத்த ஊடகவியலாளரான ஸ்வேதா கோதாரி கடந்த புதனன்று பணி விலகினார். அர்னாப் கோஸ்வாமி தன்னை காங்கிரஸின் உளவாளி என சந்தேகிப்பதால் பணியிடத்தில் தான் சந்திக்கும் அவமானங்கள் காரணமாக பணி விலகுவதாக ஃபேஸ்புக்கில் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஸ்வேதா த்ரிபாதி தான் எஸ்.பி.உதயகுமாரின் வீட்டிற்கு சென்று, வெளிநாட்டு மாணவி போல நடித்து ஒரு ‘ஸ்டிங் ஆப்ரேஷனை’ செய்தது. அந்த செய்திக் குறிப்பை வைத்து ரிபப்ளிக் தொலைக்காட்சி பல தினங்களுக்கு உதயகுமாரையும், அவர் குடும்பத்தினரையும் துன்புறுத்திக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், ஸ்வேதா கோதாரிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் எஸ்.பி. உதயகுமார். ரிபப்ளிக் சேனல் உங்களை சந்தேகப்படுவது வேதனையளிக்கிறது என்கிறீர்களே, நீங்கள் எனக்கும் என் குடும்பத்திற்கு செய்த நம்பிக்கை துரோகம் மறந்து விட்டதா எனும் தொனியில் இருக்கும் அந்த கடிதத்தில் சில பகுதிகள் :

அர்னாப் கோஸ்வாமி நீங்கள் ஒரு உளவாளியாக இருப்பீர்கள் என சந்தேகிப்பது வருத்தமளிப்பதாக சொல்கிறீர்கள். கத்தி எடுத்தவன் கத்தியால் தான் மடிவான் என்றொரு பழமொழி இருக்கிறது கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?

எத்தனை நாட்கள், நீங்களும், உங்கள் முட்டாள் பாஸும் (அர்னாப் கோஸ்வாமி), உங்கள் டிவி சேனலும் ஏதேச்சதிகார அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் நேர்மையான எங்களை அவமானப்படுத்தினீர்கள்? ஸ்பை கேமராக்கள் எல்லாம் வைத்து எங்கள் பொருளாதார நிலைமையையும் தெரிய நீங்கள் முயற்சி செய்தீர்கள் அல்லவா?

உங்களுடைய சமூக வலைதள பக்கங்களை எல்லாம் மேனஜர் வேவு பார்த்ததாக சொல்கிறீர்களே? நீங்கள் என் வீட்டிற்குள் வந்து உங்களை உபசரித்த குடும்பத்தின் ( முதிய பெற்றோர், மனைவி, மகன்) பேச்சுவார்த்தைகளை எல்லாம் ஒரு உளவாளியாக இருந்து ரெக்கார்டு செய்தீர்களே? உங்கள் விசுவாசத்தை சந்தேகப்படுகிறார்களா? உங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘விசுவாசம்’ பற்றிய கவிதை தான் கவர் ஃபோட்டோவாக இருக்கிறதா? தமாஷாக இருக்கிறதே. உங்களுக்கு அப்படி ஒரு வார்த்தை இருப்பது தெரியுமா?

இவ்வாறு ஸ்வேதா கோதாரிக்கு எழுதியிருக்கும் பதில் கடிதத்தில் அவர்  ‘ஸ்டிங் ஆப்ரேஷன்’ எனும் பெயரில் செய்த நம்பிக்கை துரோகத்தை மையப்படுத்தி விமர்சித்திருக்கிறார் உதயகுமார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.