24/10/2017

ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் பாஜக வின் கறுப்பு சட்டம்...


அரசு அதிகாரிகள், முன்னாள், இந்நாள் நீதிபதிகள் உள்ளிட்டோர் மீது மாநில அரசின் உரிய முன் அனுமதி இல்லாமல் விசாரணை மேற்கொள்ள முடியாது என்று ராஜஸ்தான் மாநில அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பாஜக ஆட்சியில் உள்ளது.

கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி ஓர் அவசர சட்டத்தை அந்த மாநில அரசு கொண்டு வந்தது.

குற்றச் சட்டங்கள் (ராஜஸ்தான் மாநில திருத்தம்) அவசரச் சட்டம் - 2017 என்ற அந்த சட்டத்தில் உள்ள பிரிவுகள் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் எதிர்ப்பையும், விமர்சனத்தையும் சந்தித்துள்ளது. எனினும், விமர்சனங்களைப் புறம்தள்ளிவிட்டு இதனை நிரந்தர சட்டமாக்கும் முயற்சியை மாநில பாஜக அரசு மேற்கொண்டுள்ளது பிரச்னையின் தீவிரத்தை அதிகரித்துள்ளது.

மாநில அரசின் உரிய முன் அனுமதி பெறாமல் எந்த நடுவர்மன்ற நீதிபதியும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மீது விசாரணை மேற்கொள்ளவோ, விசாரணை மேற்கொள்ள உத்தரவிடவோ முடியாது. அரசு ஊழியர்கள் மட்டுமன்றி முன்னாள், இன்னாள் நீதிபதிகள் மீதும் அரசின் முன் அனுமதியின்றி எவ்வித விசாரணையும் நடத்த முடியாது.

ஊடகங்களுக்கு கட்டுப்பாடு...

அதேபோல, அரசு ஊழியர் மீது லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டு எழுந்தாலும், அவரது தவறு உறுதி செய்யப்படும் வரை அவர் சார்ந்த தனிப்பட்ட விவரங்களை, அதாவது அவரது பெயர், புகைப்படம், முகவரி, குடும்ப உறுப்பினர்கள் விவரம் உள்ளிட்டவற்றை பத்திரிகைகளும், தொலைக்காட்சி சேனல்களும் வெளியிடக் கூடாது. மீறி வெளியிட்டால் அவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

அரசை விமர்சிக்கக் கூடாது..

அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், எவ்வித அடிப்படை ஆதாரமுமின்றி தனிநபர்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் மீது குற்றச்சாட்டுகளையும், தேவையற்ற கருத்துகளையோ ஊடகங்களிடம் அல்லது சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கக் கூடாது. முக்கியமாக மாநில அரசின் கொள்கைகள், திட்டங்களை எந்த இடத்திலும் அரசுப் பணியாளர்கள் விமர்சிக்கக் கூடாது. இதனை மீறி எவரேனும் நடத்தால் அவர்கள் மீது துறைரீதியாக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அந்த அவசர சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த அவசர சட்டத்துக்கு ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் உடனடியாக எதிர்ப்புத் தெரிவித்தது. கழுத்து வரை ஊழலில் மூழ்கிவிட்ட பாஜக அரசு, தங்களையும், தவறு செய்யும் அரசு ஊழியர்களையும் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறது. அரசு அதிகாரிகள் மத்தியில் லஞ்ச, ஊழலை ஊக்குவிக்கும் வகையில் அவசர சட்டத்தை மாநில அரசு கொண்டு வந்துள்ளது என்று அந்த மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் குற்றம்சாட்டினார்.

ராஜஸ்தான் அரசின் நடவடிக்கை அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள பேச்சுரிமைக்கு எதிரானது என்று சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

quot : நடுவர் நீதிமன்றத்துக்கு உள்ள விசாரணைக்கு உத்தரவிடும் அதிகாரத்தை மாநில அரசு பறிக்க முயற்சிக்கிறது. மேலும், ஊடகங்களின் குரலை ஒடுக்கவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை எதிர்த்து விரைவில் வழக்குத் தொடரப்படும் #39; என்று சமூக விடுதலைக்கான மக்கள் அமைப்பின் மாநிலத் தலைவர் கவிதா ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார்.

இது தொடர்பாக விளக்கமளித்த மாநில உள்துறைச் செயலாளர் தேவேந்திர தீக்ஷித், quot;அரசு அதிகாரிகள், ஊழியர்களின் கண்ணியத்தைக் காப்பாற்றும் வகையிலும், அவர்கள் நம்பிக்கையுடன் பணியாற்றும் வகையிலும் மாநில அரசு இந்த அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது #39; என்றார். quot;ஊழல் செய்த அரசு அதிகாரிகளைக் காப்பாற்றும் நோக்கில் இந்த அவசர சட்டத்தை கொண்டுவரவில்லை #39; என்று ராஜஸ்தான் மாநில அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநில அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டம் பேச்சுரிமைக்கு எதிரானது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: ராஜஸ்தான் மாநில முதல்வர் அவர்களே, நாம் இப்போது 2017-ஆம் ஆண்டில் 21-ஆம் நூற்றாண்டில் இருக்கிறோம். உங்கள் இஷ்டப்படி சட்டம்போட இது 1817-ஆம் ஆண்டு அல்ல. ராஜஸ்தான் மாநில அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டம் பேச்சுரிமைக்கு எதிரானது என்று சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். வசுந்தரா ராஜே சிந்தியா மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர் என்பதால் மன்னராட்சி நடந்த ஆண்டைக் குறிப்பிட்டு ராகுல் விமர்சித்துள்ளார்...

செய்தி - தினமணி

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.