24/10/2017

தமிழர் யார் என்பதற்கான வரையறை...


கேள்வி: செம்மண், உவர் மண், களி மண் உண்டு. மாறாக 'தமிழ் மண்' என்று எங்கும் இருந்தது இல்லையே...?

இதே போல தமிழர் தேசம் என்றோ, தமிழர் என்றோ யாரும் எங்கும் இருந்தது இல்லையே...?

அப்படி என்றால், தமிழ் தேசியம் பேசும் அமைப்புகள், எந்த அடிப்படையில் 'இன்னார் தான் தமிழர்' என்று வரையறை செய்கிறீர்கள்?

பதில்: தொழில் பிரிவுகளாகவே ஆதியில் சாதி என்கிற இனக் குழுக்கள் உருவாகின என்பதையும், இந்தியா முழுக்க முன்பு 'தமிழ்' என்ற மொழி தான் பேசப்பட்டது என்று அண்ணல் அம்பேத்கார் உள்ளிட்டோர் ஆய்ந்து அறிந்து கூறியதற்கு இணங்க, அப்படி தமிழ் கூறும் மக்கள் அன்று முதல் இன்று வரை பல்வேறு இனக்குழுக்களாகவே வரையறுக்கப்பட்டு உள்ளனர் என்பதும் உண்மை.

மாறாக மொழி மட்டுமோ, அல்லது பூகோள இடமோ ஒரு இனத்தை தீர்மானிக்காது.

இந்திய அரசியல் சட்டத்தில் ஒருவர் மதம் கூட மாற முடியும். ஆனால், சாதி விட்டு சாதி மாற முடியாது.

காரணம், பல ஆயிரம் வருடங்களாக இந்த இனக்குழு (என்கிற) சாதியானது, அத்துணை இறுக்கமான ஒரு இத்யாதி.

இவ்வாறு இனக்குழுக்களின் தொகுதியே ஒரு இனத்தை வரையறுக்கிறது.

இந்த அடிப்படையில் தமிழர் என்ற இனத்தை நான் இப்படி வரையறை செய்கிறேன்.

தாய் மொழியாக தமிழை கொண்ட, தமிழ் சாதியை சேர்ந்தவனே தமிழன் ஆவான்...

இப்படி துல்லியமாக வரையறுக்கா விட்டால், எதிர் காலத்தில் என்ன என்ன கேடுகள் விளையும் என்பதற்கு சமீபத்திய நிகழ்வு தான் கேரளாவில் இருந்து தமிழர்களை வெளியேற்ற நினைக்கும் அட்டப்பாடி பிரச்சனை..

குறிப்பு : இல்லாத இந்தியத்தை போலியாக உருவாக்க முடிந்தது என்றால்...

பல்லாயிரம் ஆண்டுகளாக வரலாறாக வாழும் தமிழினம் மீண்டும் தனக்கான தேசத்தை ஏன் உருவாக்க முடியாது.?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.