05/11/2017

ஆதார் அட்டையும் அக்கபோரும்...


நல்லா கேட்டுக்குங்க,

முதல்ல ஆதார் அட்டையும் வாக்காளர் அட்டையும் தாசிதார் ஆபிஸ் குடுத்து லிங்கபண்ணுங்க.

அப்புறம்?

வாக்காளர் அட்டையையும் ரேசன் அட்டையையும் சிவில் சப்ளை அலுவககத்தில் கொடுத்து லிங்க பண்ணுங்க.

அப்புறம்?

ரேசன் அட்டையையும் பான் கார்டையும் இன்காம் டாக்ஸ் ஆபிசில் கொடுத்தி லிங்க பண்ணுங்க.

சரி அப்புறம்?

ஆதார்கார்டையும் பாஸ்புக்கையும் பேங்குல கொடுத்து லிங்க பண்ணுங்க.

ம்ம்ம் அப்புறம்?

பாஸ்புக்கையும்,கேஸ்புக்கையும் கேஸ் ஆபிஸ்கொடுத்து லிங்க பண்ணுங்க.

ஓஓஒ அப்புறம்?

பான்கார்டு , ரேசன்கார்டு, கேஸ்கார்டு, ஆதார்கார்டு, வோட்டர் ஐடி, பேங்க் பாஸ்புக்கு, கிரெடிட்கார்டு, டெபிட்கார்டு எல்லா கார்டையும் பாஸ்போர்ட் ஆபிஸ்சில் கொடுத்து லிங்க பண்ணுங்க.

ஐயையோ  அப்புறம்?

இதைஎல்லாம் லிங்க பண்ணி கலெக்டர் ஆபிசில் லெட்டர் கொடுத்தால் அவுங்க ரசீது  கொடுப்பாங்க, அதை எடுத்துகிட்டு வந்து மாநகராட்சி ஆபிசில் கொடுத்தால் அவர்கள் ஒரு கார்டு கொடுப்பார்கள்.

ஆஆ சூப்பர் இன்னோரு கார்டா?அப்புறம்?

அந்த கார்டை எடுத்துகொண்டு பல்லவன் சாலையில் உள்ள நம்ம” பாடிகார்டு” முனிஸ்வரன் கோவிலில்  டெய்லி காமிச்சால் ஒரு உண்டகட்டி சோறும் மசால்வடையும் தருவாங்க. அதை சாப்பிட்டால் எல்லா கார்டையும் நம்ம  பாடிகார்டு முனிஸ்வ்ரன் பார்த்துபார்......

அவ்வள்வு தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.