03/11/2017

பணிகள் குறைப்பால் திண்டாடும் ஊர்க்காவல் படையினர், அரசு தலையிட கோரிக்கை...


தமிழகம் முழுவதும் ஊர்க்காவல் படை காவலர்களுக்கு மாதம் முழுவதும் 5 பணிகள் மட்டுமே பார்க்க அந்தந்த மாவட்ட  ஊர்க்காவல் படை அதிகாரிகளால் ஆலோசனை கூட்டம் ஏற்படுத்தப்பட்டு காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு  வருகின்றது.

இதனால் ஊர்க்காவல் படையை மட்டுமே நம்பி இருந்த 14000 ஊர்க்காவல் படையினர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது இதுவரை 3000 க்கு மேல் ஊக்க ஊதியம் வாங்கி வந்த ஊர்க்காவல் படையினர் இனி ( மாதம் முழுவதும் ) ரூ 2800 மட்டுமே வாங்குவர். இதனால் மன உளைச்சலில் ஊர்க்காவல் படை காவலர்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இனிமேல் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலையை தேர்வு செய்து அவர்கள் பொருளாதார நெருக்கடியை ஈடு செய்ய வேண்டிய நிலைக்கு ஊர்க்காவல் படையினர்  தள்ளப்பட்டுள்ளதால், அரசாங்கம் இப்பிரச்சினையில் தலையிட்டு சுமூக தீர்வு ஏற்படுத்த ஊர்க்காவல் படையினர் எதிர்பார்க்கின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.