21/11/2017

வரலாற்று நெடுகிலும் ஒருவரை ஒடுக்க வேண்டுமென்றால் அவரது அடையாளம் மூலமே ஒடுக்கி வந்துள்ளதை நாம் காணலாம்...


உதாரணமாக..

1. பறையர் – பறப்பயல்(இதன் விளைவாக ஆங்கிலத்தில் Pariah என்ற சொல் உருவாகி an outcast (தீண்டத்தாகதவர், ஒதுக்கப்பட்டவர், தனித்து விடப்பட்டவர்) என்ற அருத்தத்தில் பயன்படுத்துவார்கள்… இந்தச் சொல்லின் அருத்தத்தை ஆங்கிலத்தில் மாற்றுவோம்…)

2. சாணார் (நாடார்) – சாணப்பயல்

3. பள்ளர் – பள்ளப்பயல்

4. பள்ளி (வன்னியர்) – பள்ளிப்பயல்

5. கள்ளர் – கள்ளப்பயல்

6. இடையர் – எடப்பயல்

7. தமிழர் – பாண்டிப்பயல் (சேரலம்),  பறத் தமிழா (இலங்கை)

சரி… இந்த சூத்திரர் என்றால் யார்… சூத்திரர் என்ற சொல்லின் உண்மையான அருத்தம் என்ன…

சூத்திரர் என்பது வேளாளர்களின் வேறு பெயர்களுள் ஒன்று என்று பிங்கல நிகண்டு கூறுகிறது…

வேளாளர் என்பவர்கள் “தொல்குடி சூத்திரர்கள்” என்று பெரியபுராணம் எழுதிய சேக்கிழார் அவர்கள் குறிப்பிடுகிறார்கள் (அவரும் “வேளாளர்” சமுகத்தை சார்ந்தவர் ஆவார்)…

சூத்திரர் என்பது இழிசொல்லாக இருந்திருந்தால், சேக்கிழார், தான் சார்ந்த சமூகத்தையே அப்படிக் கூறியிருக்க வேண்டிய அவசியமில்லை…

அப்போது, சூத்திரர் என்ற சொல்லின் உண்மையான அருத்தம் தான் என்ன…

சாதியொழிப்பு என்ற தமிழர் இன அடையாள அழிப்பில் அரசியலுக்காக சார்திக் கட்டமைப்பில் பிராமணியமும் திராவிடமும் சேர்ந்து வேறு என்னென்ன வரலாற்றுத் திரிபு வேலைகளைச் செய்து வைத்துள்ளார்களோ… அரிசனம் (அரி+சனம்), பஞ்சமர், சண்டாளன், தேவரடியாள் (தேவடியாள்(திரிபு)) ஆகிய சொற்கள் யாரைக் குறிக்கும்… அவற்றின் உண்மையான அருத்தம் என்ன…

பொருள் மாற்றம் அடைந்துள்ள சொற்கள்..

1. தமிழகத்தில் இருக்கும் தொல்குடி சூத்திரர்>தாழ்த்தப்பட்ட சூத்திரர்.

2. ஏற்றத்தாழ்வு இல்லாத Horizontal வருணமுறை>ஏற்றத்தாழ்வு கொண்ட Vertical வருணமுறை.

3. பறையர்>தீண்டத்தாகதவர், ஒதுக்கப்பட்டவர், தனித்து விடப்பட்டவர்.

4. பஞ்சமர்>நால்வருணத்துக்குப் புறம்பான வருணத்தார்.

5. அரிசனம்>தாழ்த்தப்பட்டவர், ஒடுக்கப்பட்டவர், சூத்திரர்.

6. தமிழகத்தில் இருக்கும் தேவரடியாள்>தேவதாசி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.