21/11/2017

தன்னை ஜாதி வேறுபாடு பார்க்காத திராவிட தலைவனாக தமிழர்கள் மத்தியில் காட்டிக் கொள்ளும் தெலுங்கர் வைகோ நாயூடு வின் பின்புலத்தை தோலுறிக்கும் குறிஞ்சாங்குளம் பதிவு...


தமிழர்கள் அனைவரும் வாசித்து வைகோவை தெரிந்துக் கொள்ளுங்கள்...

குறிஞ்சாக்குளம் - ஒரு மீள்
பார்வை....

நெல்லை மாவட்டத்தின் கடைக் கோடியிலுள்ள இந்த குறிஞ்சாக்குளம் சங்கரன்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட குருவிகுளம் யூனியனுக்கு உட்பட்ட ஒரு கிராமம்....

ஜனத்தொகை என்று பார்த்தால் நாயக்கர்களுக்கு இங்கு நாலாவது இடம்தான்.. ஆனால் அதிகாரத்தில் அவர்களே முதலிடம்...

ஏற்கெனவே இந்தப் பகுதியில் அரசியல் அதிகாரத்தில் கொடிகட்டி பறந்த கலிங்கப்பட்டி வையாபுரி நாயக்கரின் வீட்டிற்கு வந்தவர்களின் பட்டியலைப் பார்த்தால் உங்களுக்கே புரியும், வைகோவின் அன்றைய
அதிகாரம்.....

இந்திராகாந்தி
காமராசர்
எம்ஜிஆர்
கருணாநிதி
பக்தவச்சலம்
ஜெயலலிதா ஆகியோர்...

குருவிகுளம் யூனியன் சேர்மனாக தன் அதிகாரத்தை ஆரம்பித்த வைகோ இவ்வளவு எளிதாக உயர்ந்த அதிகாரபீடத்தை நோக்கி நகர்வார் என யாரும் எதிர் பார்க்கவில்லை.....

அருகிலுள்ள மீன்துள்ளி என்ற ஊருக்கு வைகோ வின் சகோதரி மணமுடித்துப் போனார்....

அதனால் கலிங்கப்பட்டிக்கும்.. மீன்துள்ளிக்மிடையே இந்த கூண்டு வண்டிகள் அதிகமாய் பறந்து கொண்டு இருக்கும். திரைச்சீலைகளால் மூடிதிறையிடப்பட்ட அந்த கூண்டு வண்டியை பார்ப்பதற்க்கே தமிழ்சாதிகளை சேர்ந்தவர்கள் அச்சம் கொள்வார்கள். அந்த அளவிற்கு வைகோவின் ஆதிக்கம் கொடி கட்டி பறந்த காலம்.

90விழுக்காடு பள்ளர்களை கொண்ட மீன்துள்ளி கிராமத்தில் வெறும் 6விழுக்காட்டு நாயக்கர்கள் சுதந்திரத்திற்கு பின் 40 ஆண்டுகள் அதிகாரத்தை கையில் வைத்திருந்தது தான் காலத்தின் கோலம்..

இப்படித்தான்1980களின் பிற்பகுதியில் குறிஞ்சாகுளம் காந்தாரியம்மன் கோவில் பிரச்சனையும் வைகோவின் வீட்டிற்கு சென்றிருக்க வேண்டும். அதுவரை குறிஞ்சாகுளத்தில் உள்ளூர் பிரச்சனையாக இருந்த காந்தாரியம்மன் கோவில் பிரச்சனை இப்போது உலக பிரச்சனையாக மாற்றப்பட்டுவிட்டது.

ஏற்கனவே திமுக வின் தேர்தல் பணிக்குழு செயலாளராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும், அசைக்க முடியாத பெரும் பொறுப்புகளில் இருந்த வைகோவின் கலிங்கப்பட்டி வீட்டிற்கு சென்ற இந்த பிரச்சனை அவரின் தம்பியால் விரைவிலேயே முடித்து வைக்கப்பட்டது..

1991ஆம் ஆண்டு இதே நவம்பர் மாதத்தின் இறுதியில் காந்தாரியம்மனுக்கு ஒரு பீடத்தை கட்டி முடித்தார்கள் அங்குள்ள ஆதித்தமிழர்கள்..

கட்டிமுடிக்கப்பட்டுள்ள இந்த பீடத்தில் காந்தாரியம்மன் சிலையை தூக்கி வைத்தவர் அன்றைக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளராக. இருந்த ஜான்பாண்டியன்..

இருதரப்பும் கைகலப்பில் இறங்கியது. வழக்கம் போல் காவல்துறை வைகோவின் அரசியல் அதிகாரத்திற்கு பயந்து காந்தாரியின் சிலையை தூக்கி எறிந்தது..

1991ஆம் ஆண்டு வைகோவின் அரசியல் அதிகாரத்தால் தூக்கி எறியப்பட்ட காந்தாரி 24 ஆண்டுகளாக தனக்காக கட்டப்பட்ட பீடத்திற்கு அருகே உள்ள வானொலி பெட்டி அறையில் முடங்கி கிடக்கிறாள்..

இந்த பிரச்சனையை முடிவிற்கு கொண்டு வருவதற்க்காக அன்றைக்கு சங்கரன் கோவில் கோட்டாச்சியர் அலுவலகத்தில் சமதான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

அன்றைக்கு அந்தப்பகுதியில் இருந்த அத்தனை MF டிராக்டரிகளிலும் சங்கரன் கோவிலில் வந்து குவிந்தார்கள் நாயக்கர்கள்..

அப்பாவிகளான உள்ளூர் தமிழர்கள் அன்றைக்கு திருவேங்கடத்திற்கும் சங்கரன் கோவிலுக்கும் இடையே ஓடிகொண்டிருந்த அஜீஸ் நகரப் பேருந்தில் ஏறி சங்கரன் கோவில் சென்றார்கள்..

கோட்டாச்சியர் அலுவலகத்தில் தங்களுக்கு எதிராக நின்று கொண்டிருந்த நாயக்கர்களை பார்த்ததும் கூனிக்குறுகி போய் இருக்க வேண்டும் அவர்கள்.

வைகோவின் வானுயுயர்ந்த அதிகாரத்தின் கீழ் எதுவும் செய்ய முடியாத சங்கரன் கோவில் கோட்டாச்சியர் அரிதிலும் அரிதான தீர்ப்பு ஒன்றை வழங்கினார்.

அதாவது தமிழர்கள் தங்கள் பட்டா நிலத்திலும் நாயக்கர்கள் தங்கள் பட்டா நிலத்திலும் நடந்து கொள்ளலாம்.....
பயன்படுத்திக்கொள்ளலாம்..

நாயக்கர்கள் எந்த காரணத்தை கொண்டும் தமிழர்களுடைய பட்டா நிலத்திற்குள் வரக்கூடாது. இது தமிழர்களுக்கும் பொருந்தும் என உத்தரவிட்டார்..

தமிழர்கள் கண்ணீர் வடித்தார்கள் குடிசைகளில் மட்டுமே தங்களுடைய வாழ்க்கையை அமைத்து கொண்ட ஆதித்தமிழர்களுக்கு அந்த கரிசல்காட்டில் சொந்தம் கொண்டாட கையலக நிலம் இல்லை....

கோட்டாச்சியர் தீர்ப்பு வழங்கிய மறுநாளில் இருந்து குறிஞ்சாகுளத்து தமிழச்சிகளுக்கு தங்களுடைய காலைக்கடனை கழிப்பதற்க்கு கூட வழியற்று போனார்கள்....

அதுவரை விவாசய வேலைகளுக்கு கூப்பிட்ட நாயக்கர்கள் இப்போது புறக்கணிக்க ஆரமபித்தார்கள்.. வாழ வழியற்ற மண்ணின் மைந்தர்கள் முறையிட ஆள் இன்றி தவித்து போனார்கள்.

இடையில் அன்றைக்கு ஒடுக்கப்பட்ட சமூக தலைவர்களாக இருந்த இளையபெருமாள், பசுபதிபாண்டின், சாத்தை பாக்கியராஜ் போன்றவர்கள் எல்லாம் குறிஞ்சாகுளத்திற்கு வந்து போனார்கள். இவர்களில் முக்கியமானவர் வை.பாலசுந்தரம்.

1992ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ம் தேதி.... குறிஞ்சாக்குளத்து தமிழர் தெருவைச் சேர்ந்தவர்கள் .. அருகில் உள்ள திருவேங்கடம் சங்கர். திரையரங்கத்திற்கு நடிகன் திரைப்படம் பார்ப்பதற்காக சைக்கிளில் சென்றார்கள்...

திரைப்படம் பார்த்துவிட்டு இரவு பதினோரு மணியளவில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்து இடைமறித்த இனவெறிக் கும்பல். சைக்கிளில் வந்தவர்களை சராமரியாக தாக்கி வெட்டியது....

அப்பாவிகள் நாலுபேர் துடி துடிக்க தங்கள் உயிரை நீத்தார்கள்....

ஒருவருடைய ஆண் உறுப்பை வெட்டி செத்துப்போன இன்னொருவரின் உறுப்பிலும் வைத்து வெறியாட்டம் ஆடியது காலிக்கும்பல்....

செய்தி காட்டுத்தீயாய் பரவியது.. ஆனால் எதுவும் நடக்கவில்லை....

செத்த நான்கு பேரை இரண்டு குழிகளில் போட்டு மூடினார்கள்....

கொலைவழக்கு விடுதலை ஆனது..

இந்தக்கொலைக்கு பின்னால் யார் இருந்தார்கள் என்பது அன்றைக்கு நெல்லை மாவட்ட காவல் துறைக்கு தெரியாமலில்லை..

ஆனால் வைகோவின் அசுர பலத்திற்கு முன்னால் காவல்துறை மண்டியிட்டது..

உலகத் தமிழர்களுக்காக
குரல்கொடுத்து கண்ணீர் சிந்திய வைகோ அவர்கள்.....

கூப்பிடு தூரத்தில் குறிஞ்சாக்குளத்தில் நடந்த நான்கு அப்பாவிகளின் படுகொலைக்காக இன்றுவரை ஒரு இரங்கல் தெரிவிக்கவில்லை என்பதற்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்....

குறிஞ்சாக்குளம் உலகம் கண்டிராத ஒரு பெருந்துயர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.