15/11/2017

தமிழகத்தில் நீங்கள் இனவாதம் பற்றி பேசுகிறீர்களே.. மற்ற மாநிலத்தில் வாழும் தமிழனின் நிலையை எண்ணிப் பாருங்கள்... நண்பரின் கேள்வி இது...


பதில் : பிற மாநிலங்களில் பெரும்பான்மையாக உள்ள தமிழர்களுக்கு எந்த ஒரு அரசியல் அங்கீகாரமோ அடையாளமோ வழங்கப்படவில்லையே, ஏன்?

சில கட்சிகள் பிறமொழியாளர்களுக்கு அவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அரசியலில் இடம் கொடுக்க வேண்டும் என்கிறார்கள் . நல்ல விடயம் தான். அது தான் சனநாயகப் பூர்வமானது.

ஆனால் அப்படிச் சொல்பவர்கள் ஆந்திராவில் 30 விழுக்காடு தமிழர்களும்.

கர்நாடகாவில் 33 விழுக்காடு தமிழர்களும்.

கேரளாவில் 30 விழுக்காடு தமிழர்களும் வாழ்கிறார்கள் .

அங்கு அவர்களுக்கு எத்தனை விழுக்காடு அரசியலில் இடம் கொடுத்து இருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து பார்த்த பின்பே வழங்க வேண்டும்.

ஆனால் ஒரு விழுக்காடு கூட அந்த மாநிலங்களில் தமிழர்களுக்கு அரசியலிலும் சரி அரசு சார்ந்த பணியிலும் சரி இடம் வழங்கப்படவில்லை என்பதே கசப்பான உண்மை.

இது இப்படிச் சொல்கின்ற கட்சியினருக்கும் உங்களுக்கும் புரியுமா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.