15/11/2017

பச்சோந்தி பற்றிய சில தகவல்கள்...


ஓந்தி அல்லது பச்சோந்தி ஊர்வன பிரிவைச் சேர்ந்த ஒரு விலங்கு குடும்பம்.

ஓந்திகளுள் ஒரு சில அவற்றின் மனநிலை, வெப்பம், ஒளி ஆகியவற்றைப் பொறுத்து தங்களின் தோலின் நிறத்தை மாற்றவல்லவை..

ஓந்திகளுள் சில இனங்கள், தாம் இருக்கும் இடத்திற்கு ஏற்றாற்போல் தமது நிறத்தை மாற்றிக்கொள்ளும் ஆற்றல் படைத்தவை.

இதற்கு காரணம் அவற்றின் தோலில் உள்ள நிற கலங்களுக்கும், மூளைப் பகுதிகளுக்கும் இடைவிடாது தொடர்பு இருந்து கொண்டேயிருப்பதாகும்.

பச்சோந்திக்கு காக்கை, கழுகுகளால் ஆபத்து அதிகம். அதுமட்டுமல்லாமல் ஒரு பயந்த பிராணி.

அதனால் ஒரு நிமிடத்திற்கு மேல் அது தன்னுடைய நிறத்தை மாற்றிக் கொள்ளும்.

பச்சோந்திக்கு இன்னொரு குணமும் உண்டு.

பச்சோந்தி தன் ஒரு கண்ணால் ஒரு இடத்தையும் மற்றொரு கண்ணால் வேறு இடத்தையும் பார்க்கும் ஆற்றல் பெற்றது.

அது மட்டுமின்றி தன்னுடைய இரு கண்களையும் 360°க்கு சுழலும் தன்மையையுடையது.

பச்சோந்திகள் கட்புலனாகும் ஒளியை மட்டுமன்றி புற ஊதாக்கதிர்களையும் கண்டுணரவல்லது.

அத்துடன் இவைகள் நாக்கினாலே வேட்டையாடுகின்றன.

இதன் நாக்கு ஒட்டும் தன்மையையும் நீண்ட தூரம் நீட்டும் வகைலும் காணப்படுகிரமையினால், இதனால் இருந்த இடத்திலேயே இரையை வேட்டையாடலாம்.

பச்சோந்தியின் நாக்கு அதன் உடம்பைப் போல் இரண்டு மடங்கு நீளம் கொண்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.