06/12/2017

கன்னட ஈ.வே.ரா வும் பிராமண எதிர்ப்பும்...


நெல்லூர் மகாநாட்டில் பார்ப்பனர்களை சட்டச்சபைக் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற தீர்மானம் தென்னிந்திய நல உரிமைச்சங்க நிர்வாக சபையின் பேரால் பிரேரேபிக்கப்பட்டு, என்னால் ஆமோதிக்கப்பட்டு அது விஷயாலோசனைக் கமிட்டியில் ஒரு ஓட்டில் தோல்வியடைந்து விட்டது  - ஈ.வே.ரா 'எனது தோல்வி' என்ற தலைப்பில் 'குடியரசு' ஏட்டில் 13.10.1929 இல் எழுதியது.

1929இல் செங்கற்பட்டில் ஈ.வே.ரா நடத்திய முதல் சுய மரியாதை மாநாட்டிலும் தெலுங்கரான மணத்தட்டை சேதுரத்தின ஐயர் தலைமை தாங்கினார்.

அதாவது இதற்கு முன்னர் மதுரையில் (1926) மற்றும் கோவையில் (1927 ) நடத்திய முதல் இரண்டு மாநாடுகளை 'பிராமணரல்லாதார் மாநாடு' என்று நடத்திய ஈ.வே.ரா மூன்றாவது மாநாட்டை 'சுயமரியாதை மாநாடு' என்று பெயர் மாற்றி ஒரு பிராமணரையே தலைமையும் தாங்க வைத்தார்..

1930ல் இரண்டாவது சுயமரியாதை மாநாட்டிலும் மணத்தட்டை சேதுரத்தின ஐயர் முன்னிலை வகித்தார்.

ஈ.வே.ரா வின் ஆதரவுடன் 1946ல் தெலுங்கு பிராமணரான தங்கதூரி பிரகாசம் பந்துலு (இடைக்கால) சென்னை மாகாண அரசின் தலைமை அமைச்சரானார்.

1957ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் சட்ட மன்றத் தொகுதியியல் சி.என்.அண்ணாத்துரையை எதிர்த்துக் காங்கிரசு தரப்பில் போட்டியிட்ட பிராமணரான மருத்துவர் பி.எசு. சீனிவாசனை ஆதரித்து ஈ.வெ.ரா. நேரடியாகவே வாக்குக் கேட்டார்.
இருந்தாலும் அண்ணாதுரை வென்றார்.

இதே 1957இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தலில் தி.மு.க. ஆதரவுடன் போட்டியிட்ட பி.பாலசுப்பிரமணியத்தை தோற்கடிக்க காங்கிரஸின் காலில் விழுந்தார் ஈ.வே.ரா.

காங்கிரசு தரப்பில் போட்டியிட்ட பிராமணரான டி.டி.கிருஷ்ணமாச்சாரியை ஆதரித்து ஈ.வெ.ரா. வாக்குக்கேட்டார்.

அதோடு நில்லாது பி.பால சுப்பிரமணியத்தைத் தோற்கடிக்க வேண்டுமென்றே சுயேட்சையாக எஸ்.இராமநாதன் என்பவரை என்ஜின் பெட்டிச் சின்னத்தில் போட்டியிட வைத்தார் ஈ.வே.ரா.

1967இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தஞ்சைத் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க உறுப்பினர் எஸ்.டி. சோமசுந்தரத்தை தோற்கடிக்கவேண்டும் என்பதற்காக காங்கிரசு கட்சியின் சார்பில் இந்திராகாந்தியால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிராமணராகிய ஆர்.வெங்கட்ராமனை நேரடியாக ஆதரித்து ஈ.வெ.ரா. வாக்குக் கேட்டார்.

தேர்தல் பரப்புரை செய்த ஈ.வெ.ரா,
கழுதைகளாக இருந்தாலும் பிராமணராக இருந்தாலும் எல்லாக் காங்கிரசு வேட்பாளர்களுக்கும் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.