25/01/2018

எம்.எல்.ஏகளுக்கு ஜியோ சிம் நாங்களே வாங்கி தர்றோம்...7000ரூ போன் மானியம் எதற்கு?


கோவை: பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி சாலை மறியலில்  ஈடுபட்ட அரசு கலை கல்லூரி மாணவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

தமிழக அரசு வரலாறு காணாத அளவுக்கு பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. இதனைக்கண்டித்து  தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நூற்றுக்கும் மேற்பட்ட கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று (23-01-18) சாலை மறியலில் ஈடுபட்டதால்  போக்குவரத்து அப்பகுதியில் பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து மாணவர்களுக்கும், காவல் துறையினருக்கும்  இடையே தள்ளு முள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

பின்னர் காவல் துறையினர் மாணவர்களை சமாதானப்படுத்தியதை தொடர்ந்து,  கலைக்கல்லூரி முன் மாநில அரசுக்கு எதிராக பேருந்து கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

பேருந்து கட்டண உயர்வால் பணக்காரர்கள் யாரும் பாதிக்கப்படுவதில்லை எனவும், மாதம் 3000 சம்பாதிக்கும் நடுத்தர குடும்பத்தைச்சார்ந்தவர்கள்    தான் தினமும் 100 ரூபாய் வரை பேருந்துக்கே செலவு செய்ய வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டினர்.

மக்கள் இந்த பணத்தை கொடுத்து பயணிப்பார்கள் என்று அமைச்சர்கள் அதிலும் குறிப்பாக செல்லூர் ராஜு தெரிவிக்கிறார்.

நாங்கள் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எம்.எல்.ஏகளுக்கு ஜியோ சிம் வாங்கி தருகிறோம். எம்.எல்.ஏ களுக்கு போன் மானியமாக மாதம் கூடுதலாக 5000ரூ எதற்கு? என்றும் கேள்வி எழுப்பினர்,   

மேலும் அரசு இலவசம் கொடுப்பதற்கு பதிலாக வேலை கொடுத்தால் பிரச்சனை இருக்காது எனவும், ஸ்கூட்டி வேண்டாம் வேலை தான் வேண்டும் என வலியுறுத்தினர். 

கட்டண உயர்வால் நடுத்தர மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அரசு கலைக்கலூரியில் படிக்க முடியாத சூழல் தற்போது உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.

வேலைக்கு செல்லும் பெற்றோர்களும் தற்போதுள்ள பேருந்து கட்டண உயர்வால் வேலைக்கு செல்ல முடியாமல் திணறி வருவதாகவும் வருத்தம் தெரிவித்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.