11/01/2018

மராட்டிய கன்னட ரஜினி வரலாறு...


நண்டு கொழுத்தால் வளை தங்குமா ?

மராட்டிய மாநிலத்தில், மாவாடி கேடாபதார் என்ற கிராமத்தில் கெய்க்வாட் சமூகத்தினர் நிறையவே உள்ளனர்.

அங்கு பிழைக்க வழியின்றி கருநாடக மாநிலம் விஜயபுரா பகுதிக்கு குடி பெயர்ந்து, வேலை நிமித்தம் பெங்களூருக்குப் போய், பஸ் கண்டக்டராக வேலை செய்து கொண்டிருந்த சிவாஜி ராவ் கெய்க்வாட் என்பவரை, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் - இயக்குநரான பாலச்சந்தர் பிடித்து வந்து, அபூர்வ ராகம் என்ற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்க வைத்தார்.

பின்னர் பாரதிராசாவின் 16-வயதினிலே படத்தில் பரட்டை எனும் பொறுக்கியாக அறிமுகமாகி பிரபலமான நடிகன் தான், சேட்டைகளுக்குப் பெயர் போன ரஜனிகாந்த் எனும் மாஜி ` சிவாஜிராவ் கெயிக் வாட்..

பிறகு மைலாப்பூர் நூல் மாஃபியா  கூட்டத்திற்கு நெருக்கமாகி, அதனால் சட்டையைக் கிழித்துக் கொண்டு கொஞ்ச காலம் காணாமல் போன இந்த நபரை, ஜானவாசம் செய்து வைத்துக் கொண்டார் ஒரு லதா.

அப்புறம் தொடர்ந்த சினிமா வாழ்க்கையில் சிகரம் தொட்ட இந்த நபர், எப்போதுமே ஒரு நிலையில்  நில்லாது, திடீர் திடீர் என காணாமல் போய் விடுவார்.

பிறகு பாபா, பேபே என்று ஒரு நாள் திரும்பி வந்து, மட்டை அடிவாங்கி, மண்டை காலி ஆகிப்போனார்.

ஊத்திக் கொண்ட படங்களால் ஊத்திக் கெட்டவரை, தூக்கிவிட்டனர் நம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள்.

தமிழ் நாட்டு அரசியலில் இவரைப் போலவே தட்டுக் கெட்டு தடுமாறிய நிலையில், ஜெயலலிதாவின் உதை தாங்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த சில மூதேவிகள், அதே ஜெயலலிதாவால் அப்போது அவதிப்பட்ட இந்த மூஞ்சூரைப் பிடித்து, பெருச்சாளி வேடம் கட்டினர்.

அப்போது இந்த அசல் கிறுக்கனுக்குப் பிடித்தது தான் இப்போதைய அரசியல் கிறுக்கு.

குறுக்கும் நெடுக்கு மாக நடந்ததில் மடங்கள், மடாதிபதிகள், பி.ஜே.பி., மோடி என்று தொடர்பும் நீண்டதால், ஜட்டிக்குள்ளேயும் பெட்டி.. படப்பெட்டிகளிலும் மீண்டும் கொட்டியது துட்டு..

இப்போது வெளிவரவிருக்கும் பெரிய பட்ஜட் படங்களின் வசூலை முந்தியதை விடவும் தூக்கி நிறுத்த வேண்டிய நெருக்கடியில் உள்ள இந்த சினிமா ரவுடி, தனது அரசியல் பிரவேசம் பற்றிய ஆசை கொண்ட ரசிகர்களிடம் அந்த பிஸ்கட் பீஸ்களை இப்போது தூவி தூபம் போட்டு, வரப் போகும் தன் படங்களின் வசூலுக்கு அச்சாரம் போட்டதோடு, அடுத்த தேர்தலுக்கு கட்சி ஆரம்பிக்கப் போவதாக ஒரு பிட்டைப் போட்டு, ஆன்மீகம் அது, இது என்று கோட்டை கட்டி வருகிறார். இந்த கொட்டை கட்டி.

கோவணம் கட்ட வழியில்லாது, இங்கே பிழைக்க வந்த எவனுக்கும் கோடி கோடியாய், துட்டு சேர்ந்து விட்டால், வானம் தொட்டுவிடவே, திட்டம் போடுகிறான்.

அன்சிகாவை ஒருவன் சுற்றினால் , அரசியலை இன்னொருவன் சுற்றுகிறான்.

மொத்தத்தில் நண்டு கொழுத்தால், வளை தங்காது என்பது தமிழ் உலகம் அறிந்த வாழ்க்கைத் தத்துவம்.

தலையின் இழிந்த மயிரனையர், இப்படித் தம் நிலையின் இழிந்த மாந்தர். இவர்களைத் தூ...எனத் தூக்கி எறியுங்கள் தமிழர்களே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.