23/01/2018

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு...


உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை வசூலிக்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர் சித்திரவேலு என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், பேருந்து கட்டணம் 67 விழுக்காடு உயர்த்தப்பட்டு இருப்பது, பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இரவோடு இரவாக எந்தவித அறிவுப்பும் இல்லாமல் இந்த கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதாகவும், கட்டண உயர்வு தொடர்பாக அரசு பொதுமக்களிடம் எந்த கருத்துக்களையும் கேட்கவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு தொடர்பாக அரசிதழில் வெளியிடப்படவில்லை என்றும், எனவே இந்த கட்டண உயர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.