28/02/2018

உல்லாசம் தான் வாழ்க்கை என்று நினைத்து நண்பருடன், இருபத்திமூன்று வயதில் பயணிக்கும் ஒரு சாமானிய இளைஞன், பயணத்தின் முடிவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் எழுப்ப, அது அவனது வாழ்வை மாற்றி அமைக்கிறது...


அதன் பின்னர் போராட்டமே வாழ்வு
என மாற, உலகின் வல்லரசுகளை எதிர்த்து நின்று முழங்குகிறான்.

முப்பத்தியொன்பது வயதில்
ஒரு போராட்டத்தில் அமெரிக்க
கூட்டு படையால் கொலை செய்யப்படுகிறான்.

உலகம் இந்த இளைஞனை மறந்துவிடும் என்று உலகின் வல்லரசுகள் நினைக்க,
உலகில் எந்த மூலையில் மக்கள்
புரட்சி வெடித்தாலும் அங்கெல்லாம்
இவனது முகமே சர்வாதிகாரத்திற்கும்,
வல்லரசுகளின் கொட்டதிற்க்கும்,
முதலாளித்துவ சுரண்டலுக்கும் எதிரான
அடையாளமாக காட்டப்படுகிறது.

அந்த முகத்தின் பெயர் 'சே' என்று செல்லமாக அழைக்கப்படும் எர்நெஸ்டொ 'சே' குவேரா.

"எனது போராட்டத்தை யாரேனும்
தொடரும் நிலையில், நான்
வீழ்வதை பற்றி எனக்கு கவலையில்லை"

என்று முழங்கிய மாவீரனின்
வாக்குப்படி இன்றும் உலகில் ஏதேனும்
ஒரு மூலையில் மக்கள்
ஒடுக்குமுறைக்கு எதிராக
முழங்குகின்றனர்.

அக்டோபர் ஒன்பதாம் திகதி உலகின் மாபெரும் போராளிகளில்
ஒருவரான சே குவேரா மறைந்த தினம்.

அநீதிக்கு எதிராக உன் உள்ளம்
குமுறினால், நீயும் எனது சகப் போராளி
என்றுரைத்த மக்களின் போராளி
சே குவேரா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.