"கால்பொரு நிவப்பிற் கடுங்குர லேற்றொடுஞ்
சூன்முதிர் கொண்மூப் பெயல்வளஞ் சுரப்பக்
குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு
கடல்வள னெதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை
ஓவிறந் தொலிக்கு மொலியேயல்லது
ஆம்பியுங் கிழாரும் வீங்கிசை யேத்தமும்
ஓங்குநீர்ப் பிழாவு மொலித்தல் செல்லாக
கழனிச் செந்நெற் கரும்புசூழ் மருங்கில்
பழனத் தாமரைப் பைம்பூங் கானத்துக்
கம்புட் கோழியுங் கனைகுர னாரையுஞ்
செங்கா லன்னமும் பைங்காற் கொக்கும்
கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும்
உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்
வெல்போர் வேந்தர் முனையிடம் போலப்
பல்வேறு குழூஉக்குரல் பரந்த வோதையும்"
- நாடுகாண் காதை: சிலம்பு...
பன்னெடுங்காலம் தமிழரின் இலக்கிய வரலாற்றிலும், நிலம் மற்றும் புவிசார் வரலாற்றிலும் இருக்கின்ற உரிமையை இல்லை என்று சொல்ல 'இந்தி'யத்திற்கு என்ன உரிமையிருக்கிறது?
பாடலுக்கான விளக்கம் பெற இந்த இணைப்பிற்கு போகவும்...
http://silapathikaram.com/blog/?p=3776

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.