09/04/2018

மனித மிருக சங்கிலிப் போராட்டம்...


காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பை மத்திய அரசு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அரியலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியான திருமானூர் மற்றும் டி பழூரில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், திருச்சி மாவட்டம் கல்லணை முதல் தஞ்சை மாவட்டம் கீழணை வரை மணல் குவாரி அமைக்கக் கூடாது என வலியுறுத்தி இலை தளைகளைக் கட்டிக் கொண்டும், கழுத்தில் தூக்கு கயிறு கட்டி கொண்டும், ஆடு மாடுகள் நிறுத்தி மனித மிருக கால்நடைகள் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள்  மேலும் விவசாயிகளை காப்பாற்ற நீராதாரம் முக்கியம் நீராதாரத்தைக் காப்பாற்ற மணல் குவாரிகள் அமைப்பதை மாவட்ட நிர்வாகம் உடன் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஒன்றிய செயலாளர் வரப்பிரசாதம் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க அரியலூர் மாவட்ட தலைவர் மூ.மணியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் பிச்சைப்பிள்ளை மற்றும் அகில இந்திய மக்கள் சேவை இயக்க தலைவர் தங்க சண்முக சுந்தரம் முன்னிலை வகித்தனர். நெப்போலியன் லூர்து சாமி காணிக்காபுரம் மு.ஊ.ம.தலைவர், கனகராஜ் தி.மு.க ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர், சாம்பசிவம் பூண்டி மு.ஊ.ம.தலைவர், ஆரோக்கியசாமி மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளை செயலாளர் ,  லூர்து சாமி ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் காணிக்காபுரம், இமானுவேல், ஜல்லிக்கட்டு பேரவை செயலாளர், கிராம நாட்டாண்மைகள், கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.