04/05/2018

தமிழ்நாட்டிற்கு மீண்டும் வருகிறான் லாட்டரி அரக்கன்...


தமிழக பட்ஜெட் கூட்டுத்தொடரில், மீண்டும் லாட்டரி டிக்கெட் அறிமுகப்படுத்தப்படலாம் என்று கூறப்பட்டது. புதிய முறையில் மீண்டும் லாட்டரி டிக்கெட் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. தமிழகத்தின் கடன் சுமை வருடாவருடம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சென்ற வருட கடன் சுமையே 3 லட்சம் கோடியாக இருக்கிறது. இந்த வருடம் இன்னும் அதிக அளவில் கடன் சுமை கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்கு பிறகு பல்வேறு மாநிலங்களின் நிதி வருவாய் குறைந்துவிட்டது. லாட்டரிக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி  விதிக்கப்பட்டுள்ளதால் அதன் மூலமாக கிடைக்கும் வருவாய் மாநில செலவினங்களை ஈடுகட்ட பயன்படுத்தலாம் என்ற நோக்கத்தில் மாநில அரசு லாட்டரிக்கு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது. லாட்டரி டிக்கெட் விற்பனையை அறிமுகப்படுத்தும் போது அரசின் வருவாய் கணிசமாக அதிகரிக்கும். இது கடன்சுமை பெரிய அளவில் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லாட்டரி டிக்கெட் விற்பனை செய்வதன் மூலம் ரூ.2450 கோடி வருவாய் கேரளாவுக்கு கிடைத்துள்ளதால் தற்போது தமிழக மாநில அரசும் லாட்டரி விற்பனைக்கு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதா தயார் செய்யும் பணியில் மாநில அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஏழ்மையான வீட்டில் லாட்டரி டிக்கெட் விற்பனையால் நிறைய பிரச்சனை நடக்கிறது என்றே அதன் விற்பனைக்கு தடை வழங்கப்பட்டது. லாட்டரியால் அழிந்த பல குடும்பங்கள் உள்ளது. தற்கொலை, மன உளைச்சல் என தமிழர்களை மனநோயாளிகளாக்கியது இந்த லாட்டரி. இப்போது மீண்டும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது

இப்போதுள்ள டம்மி அரசை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள மத்திய அரசும் அதன் பீட பாஜக அரசும் அதன் துணையுடன் தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரியை கொண்டுவரும் திட்டத்திற்கான அனைத்து வேலைகளையும் செவ்வனே முடித்தாகி விட்டது.

லாட்டரியை தமிழ்நாடு அச்சடிக்கப் போவதில்லை. மற்ற மாதிலத்தில் அச்சடித்து இங்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

இதனை தமிழர்களாகிய நாம் தடுக்கவில்லை என்றால் தமிழர்களின் பொருளாதாரம் அனைத்தையும் ஒரு சிலர் அதுவும் அயலவர்கள் மொத்தமாக சுரண்டி சென்றுவிடுவார்கள். இப்போதே தமிழ்நாட்டில் பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டுவருகிறது. இதுவும் சேர்ந்தால் நம் பொருளாதாரம் அதல பாதாளத்திற்க்கு சென்று விடும். பொருளாதார ரீதியாக தமிழகத்தை அழிக்கவே இந்த லாட்டரியை கொண்டுவர இருக்கிறது மத்திம பாஜாகவும் அதன் அடிமை அரசான எடுபிடி அரசும் அதன் லாபியாளர்களும்.

இதனை தமிழ் மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். லாட்டரி விற்பனையை தடுக்க அனைவரும் ஒன்றினைந்து போராடு வேண்டும் இல்லையேல் தமிழர்களை பொருளாதார அழிவிலிருந்து காப்பது சிரமமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.