04/05/2018

ஒன்றுக்கும் உதவாத மத்திய பாஜக அரசு எங்கு பார்த்தாலும் திருட்டு...


ஆதார் உடன் லின்க் செய்யப்பட்ட பிஎப் கணக்குகளில் திருட்டு; 2.7 கோடி மக்களின் நிலை என்ன.?

ஆதார் அட்டை அமல்படுத்திய பின்னர் நாட்டில் உள்ள அனைத்து இடங்களில் பயன்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. செல்போன் எண் முதல் வாக்களர் அடையளா அட்டை மற்றும் சகல அடையாள அட்டைகளுடன் ஆதார் இணைக்கப்பட்டது.இந்தியாவில் குறிப்பாக பல மில்லியன் மக்கள் பிஎஃப் (தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி) கணக்குதார்களாக உள்ளனர். மேலும் அவர்களின் அனைத்து தகவல்களும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் வி.பி ஜாய் என்பவர் மத்திய தொழில்நுட்ப துறைக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் எழுதிய கடிதம் என்னவென்றால் ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்த 2.7 கோடிக்கும் மேற்பட்ட கணக்குதாரர்களின் தகவல்களை ஹேக்கர்கள் திருடி விட்டனர். இதனால், ஆதார் சேவை இணையதளம் தற்காலிகமாக செயல்பாட்டில் இருந்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கடிதத்தின் மேற்பகுதியில் மிக ரகசியம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது, அதன்பின்பு ஒவ்வோரு பணியாளரின் ஊதியத்திலும் 12சதவீதம் பிஎஃப தொகை பிடித்தம் செய்யப்படுகிறது, எனவே சம்பளம் தொடர்பாக தகவல்கள் வங்கி கணக்கு குறித்த தகவல்கள் ஆகியவையும் திருடப்பட்ருக்கலாம் என சைபர் கிரைம் துறை வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் வருங்கால் வைப்பு நிதி துறை அதிகாரிகள் தெரிவித்தது என்னவென்றால், திருட்டு எதுவும் நடக்கவில்லை, எனினும் பாதுகாப்பு காரணங்களுக்கு வேண்டி தற்சமயம் சர்வர் நிறுத்தப்பட்டுள்ளது என்றனர்.ஆதார் தகவல்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிஎஃப் கணக்கு விவரங்கள் திருடப்பட்டதாக கூறப்படுவது நாட்டில் இருக்கும் தொழிலாளர்கள் மத்தியில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நேற்று மத்திய அரசு தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு சில அறிவறுத்தல்களை வழங்கியுள்ளது, அதன்படி செல்போன் சிம்கார்டுக்கு வேண்டி ஆதார் அட்டையை வாடிக்கையாளர்களிடம் கட்டயாகப்படுத்தக் கூடாது என்று உத்திரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஆதார் கார்டு அளிக்காவிட்டாலும் சிம் கார்டு கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.