22/05/2018

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வு முறை மத்திய அரசு மாற்றம் : ஏழைகளின் கனவிற்கு பேராபத்து?


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு முறையில் தற்போதுள்ள நடைமுறையை மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள முறைப்படி, சிவில் சர்வீஸ் பணியின் கீழ்வரும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட 24 மத்திய அரசு பணிகளுக்கு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) ஆண்டுதோறும் தேர்வு நடத்துகிறது.

அதன்படி தேர்வாளர்களுக்கு முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முக்கியத் தேர்வு நடத்தப்படும். இதைத்தொடர்ந்து தேர்வில் தகுதிபெற்றவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தப்பட்டு, இரு தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கீடு செய்யப்படும். அதன்படி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

ஆனால் தற்போது மத்திய அரசு திட்டமிட்டுள்ள புதிய முறைப்படி, முக்கியத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முசோரிக்கு செல்ல வேண்டும். அங்கு அவர்களுக்கு 3 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும்.

அந்த பயிற்சியில் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலும், இதற்கு முன்னர் அவர்கள் பெற்ற முக்கிய மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த முறையால் கிராமப்புற மற்றும் ஏழை, எளிய மாணவர்கள் கடும் பாதிப்படைவார்கள் என கல்வியாளர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் கூறிய கருத்துக்கள்

அவர் கூறும் போது, “ஆண்டுதோறும் அடிப்படை பயிற்சியின் துவக்கத்திற்கு முன்பே, சிவில் சர்விஸ் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி ஒதுக்கீடு மற்ரும் பணியிட ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. பிரதமர் அலுவலகமானது நடப்பாண்டு முதலே, பின்வரும் ஆலோசனைகள் மற்றும் அமல்பாட்டிற்காக, அவற்றின் மீதான அத்தியாவசியமான நடவடிக்கைகளை கருத்தில் கொள்ள
விருப்பம் தெரிவித்துள்ளது.

சிவில் சர்விஸ் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட பயிற்சிப் பணி அதிகாரிகளுக்கு, அடிப்படை பயிற்சிக்கு பின்பே பணி ஒதுக்கீடு மற்றும் பணியிட ஒதுக்கீட்டை மேற்கொள்ளலாமா? என்பதை ஆராய்தல்.
அடிப்படை பயிற்சியில், பயிற்சிப்பணி அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு முறையான முக்கியத்துவத்தை வழங்குவதில் உள்ள சாத்தியக்கூறினை ஆராய்தல்.
சிவில் சர்விஸ் தேர்வு மற்றும் அடிப்படை பயிற்சி ஆகியவற்றில் பெறும் கூட்டு மதிப்பெண்களின் அடிப்படையில், அனைத்திந்திய குடிமைப் பணியாளர்களுக்கு பணி ஒதுக்கீடு மற்றும் பணியிட ஒதுக்கீட்டை மேற்கொள்வதில் உள்ள சாத்தியக்கூறினை ஆராய்தல்.
ஏற்படும் விளைவுகள் :

கிராமப்புற மாணவர்கள் விரும்பும் குடிமைப்பணியை பெற இயலாது.
தாய்மொழி வழிக்கல்வியில் மாணவர்கள் அடிப்படை பயிற்சியின் போது, மற்ற பாவனை மட்டுமே செய்யும் மாணவர்கள் மத்தியில் திறம்பட செயல்பட்டாலும், திறமையை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பு கொடுக்கப்படுமா? என்பது கேள்விக்குறி. அப்படியே வாய்ப்பு கொடுக்கப்பட்டாலும், அது தாய்மொழி வழிக்கல்வி மாணவர்களுக்கு அவர்களைப்போல் ஆங்கிலப்புலமையை வெளிப்படுத்த முடியாமல் தலைகுனிவை ஏற்படுத்தும்.
ஆங்கிலத்திலோ அல்லது வெளிநாடுகளிலோ படித்த மாணவர்கள் பாவனை மூலம் தாங்கள் செய்யும் செயல்கள்யாவும் சிறப்பானவை என்று அனைத்து ஆசிரியர்களையும் நம்பவைக்கும் திறமை உடையவர்கள்.
அதிகாரத்தில் இருக்கும் அமைச்சர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் வாரிசுகள், உறவினர்கள் தாங்கள் விரும்பும் சேவையையும் (ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்), விரும்பும் மாநிலத்தையும் தேர்வு செய்துகொள்ள முடியும்.

தேர்வு செய்யப்பட்டவர்கள், கல்லூரி காலங்களில் பேராசியர்களுக்கு பயந்து இருந்ததுபோல் இருக்க நேரிடும்.
எல்.பீ.எஸ்.என்.ஏ.ஏ (LBSNAA)-வில் உள்ள பேராசிரியர்கள் இதனை பயன்படுத்தி தேர்ச்சி பெற்ற மாணவர்களை பயமுறுத்த நேரிடும்.

கையூட்டு பெரிய அளவில் நடைபெறும்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்தவர்களுக்கு உயரிய பதவியான ஐ.ஏ.எஸ் கிடைப்பது கடினம்.

மேல் வகுப்பை சார்ந்தவர்களுக்கு மட்டுமே ஐஏஎஸ் பணி கிடைக்கும். (உதாரணம் : ஐஐடி-ல் எஸ்.சி/எஸ்.டி பிரிவை சேர்ந்தவர்களின் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை)
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மதிப்பு குறைந்து, எல்.பீ.எஸ்.என்.ஏ.ஏ-யின் மதிப்பு அதிகரித்து விடும்.

மத்திய தேர்வாணையத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள், எல்.பீ.எஸ்.என்.ஏ.ஏ-வில் பெறும் மதிப்பெண் மூலம் உயரிய பதவியான ஐ.ஏ.எஸ் பதிவியை பெற இயலும்.

மத்திய அரசால் எடுக்கப்பட்ட இந்த முடிவு ஒரு தலைபட்சமானது.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பணி நியமனங்களில் வெளிப்படைத்தன்மை இருக்காது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.