06/06/2018

13 கிலோ மனுக்களை தலையில் சுமந்துவந்த தொழிலாளி.. தூக்கி எறிந்த கலெக்டர்...


மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தண்டபாணி தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில்
மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிமக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதிப் பதிவு செய்து கலெக்டரிடம் கொடுத்தனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்ட எல்லையில் உள்ள கூத்தகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. கூலித்தொழிலாளியான இவருக்கு தனக்குச் சொந்தமான 2 ஏக்கர் 40 சென்ட்  நிலத்தைக் கடந்த 2008 ம் ஆண்டு ரியல் எஸ்டேட்காரர்கள் அபகரித்துவிட்டனர். இது குறித்து முனுசாமி வருவாய்த்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட கலெக்டர், அமைச்சர் எனப் பலமுறை மனுக்கள் கொடுத்துள்ளார்.

ஆனால், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. அவர் தனது நிலத்தினை மீட்டு தரக்கோரி 10 ஆண்டுகளில்  200க்கும் மேற்பட்ட முறை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் முனுசாமி இதுவரை அனுப்பிய அனைத்து மனுக்களை தனது தலையில் சுமந்தபடி வந்து  கலெக்டர்  தண்டபானியிடம் மீண்டும் மனு கொடுத்தார். ஆனால், கலெக்டர் அந்த மனுவைப் படித்துகூட பார்க்காமல் உங்களுக்கு `உங்கள் நிலம் கிடைக்காது' என்று கூறி மனுவைத் தூக்கி எறிந்தார். இதனால் மனமுடைந்த தாய், மகன் இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் கலெக்டர் அலுவலகத்தில் மனுவைத் தலையில் சுமந்தபடி சுற்றி வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.