23/06/2018

குரளிகளால் கொங்கும் அழியுமா?


எட்டுவழி பசுமைச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று தமிழக அமைச்சர் ஒருவர் சென்னை - சேலம் எட்டுவழிச்சாலை எந்த எதிர்புமின்றி போடப்பட்டால், இத்திட்டம் கோவை வரை நீட்டிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இது எதிர்பார்த்த நிகழ்வு தான்.

சேலம் - அரியானூர் வரை வரும் எட்டுவழிச்சாலை முழு கிழக்கு தொடர்ச்சி மலைகளையும் பின் தொடர்ந்து கோவையில் முடிப்பதே  ஆட்சியாளர்களின் முழு திட்டம்.

மக்கள் எதிர்பை மட்டுப்படுத்தவும்,
வட தமிழக மக்களும், கொங்கு பகுதி மக்களும் ஒருசேர இணைந்து போராட்டத்தை பெரியஅளவில் நடத்தி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டும் பாதித்திட்டத்தை மட்டும் வெளிபடுத்தி உள்ளதாக தெரிகிறது.

மக்களை பிரித்தாண்டு  எட்டுவழி பசுமைச் சாலை திட்டத்தை நிறையேற்றிக் கொள்வதில்
ஆட்சியாளர்கள் வெகுமுனைப்பாக உள்ளனர்.

சென்னை, -சேலம் சாலைப்பணிகள்  முடிவடைந்தால் அடுத்து இச்சாலை  நாமக்கல், ஈரோடு, திருப்பூர், வழியாக கோவையின் மேட்டுப்பாளையத்தை வந்தடையலாம்.

கிழக்கு தொடர்ச்சி மலையின் கனிம வளங்கள் மொத்தத்தையும் கொள்ளையிட இச்சாலை மொத்த கிழக்குத் தொடர்ச்சி மலையையும் ஒட்டியே போடப்பட இருக்கிறது,

கொங்கு மக்கள் இனியும் விழித்துக் கொள்ளவில்லையானால் மஞ்சள் வயல்களிலும், கரும்பு தோட்டங்களிலும் எட்டுவழிச்சாலை நீளமாக சொல்வதை ஓரமாக நின்று பார்க்கத்தான் முடியும்.

முதல்வர் கொங்குப்பகுதியை சேர்ந்தவர் என்ற நம்பிக்கையில் இருப்பீர்களேயானால் நடுவீதியில் நிற்பது உறுதி.

விழித்துக்கொள் கொங்கு மண்டலமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.