01/06/2018

ராணிப்பேட்டையில் குரோமியம் மற்றும் தோல் கழிவுகளின் அவலம்... எங்களுக்காக குரல் கொடுக்க யாருமில்லையா..?- மக்கள் கதறல்...


வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை நகரங்களில் இருந்து மட்டும் ஆண்டுக்கு தோராயமாக ரூ.15 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தோல் தொழிற்சாலை மூலம் வேலூர் மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்டைகின்றனர்.

1960-ம் ஆண்டுகளில் ஆம்பூர், வாணியம்பாடி நகரில் உள்ள தோல் தொழிலை அறிமுகம் செய்தனர்.

பாலாற்றில் கிடைத்த வளமான தண்ணீர், இயற்கை மூலப்பொருட்கள் மூலம் கால் நடைகளின் தோலை சுத்தம் செய்தனர். ஆரம்ப காலத்தில் செமி பினிஷ்டு லெதர் என்ற சுத்தப்படுத்திய தோலை ஏற்றுமதி செய்தனர்.

ஏற்றுமதி வாய்ப்புகள் பெருகிய நேரத்தில் முழுமையாக பதப்படுத்திய தோல் உற்பத்தி செய்யும் ஆர்வம் ஏற்பட்டது.

சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தோல் பதப்படுத்தும் இந்த நகரங்கள் இருந்ததால் ஏற்றுமதி வாய்ப்புகளால் வேகமாக வளரத் தொடங்கியது.

தோல் வர்த்தகத்தில் உலகளாவிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் இயற்கை முறையில் இருந்து குரோமியம் அதிகமுள்ள ரசாயனங்களைப் பயன்படுத்தி தோல் பதனிட தொடங்கினர்.

இதன் பாதிப்புகள் என்னவென்று தெரிந்துகொள்வதற்குள் பாலாற்றுப் படுகை தோல் கழிவு மாசு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

நிலத்தடி நீர் உவர்ப்பாக மாறியது. நெல், வாழை, கரும்பு, தென்னையின் மகசூல் குறையத் தொடங்கியது.

தோல் பதப்படுத்தும் டேனரியில் இருந்து வெளியேறும் கழிவு 7 முதல் 8 கி.மீ. தொலைவுக்கு நிலத்தடி நீரை பாதிக்கும் தன்மையுடையது என ஆய்வில் தெரியவந்தது.

பாலாற்றில் அதிகப்படியாக உறிஞ்சப்பட்ட தண்ணீர், பருவ மழை தட்டுப்பாடு காரணமாக நிலத்தடி நீர் வெகுவாக கீழ்நோக்கிச் சென்றபோது தோல் கழிவும் சேர்ந்தது.

வெட்டவெளியில் கொட்டிய கழிவுகள், மழை காலங்களில் தண்ணீரில் கரைந்து அருகில் உள்ள ஏரிகளிலும், பாலாற்றிலும் கலந்திருந்தது.

அடுத்த தலைமுறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த குரோமிய கழிவை அகற்றாததால் Blacksmith institute of New York என்று நிறுவனம் 1996-ம் ஆண்டு வெளியிட்ட உலகில் மாசடைந்த நகரங்களின் வரிசையில் ராணிப்பேட்டை நகரத்தையும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது தூத்துக்குடியை நாசப்படுத்திய ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் வெற்றி கண்டதால், கடந்த 30 வருடங்களாக காற்றையும் நீரையும் நாசம் செய்யும் தோல் தொழிற்சாலைகளை எதிர்த்து போராட யாருமில்லையா? குறைந்த பட்சம் மாசுபடுதலையாவது தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் வேலூர் பகுதி மக்கள்.

பாதிக்கபட்டவரின் வாக்குமூலம்...

என் பறம்பறையே தோல் தொழில் செய்பவர்கள்தான்  இன்றும் அதே நிலைத்தான்.. உண்மை கொஞ்சம் கசந்தாலும் இது உண்மை தான் காரணம் இதுபோல் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியில் நான் வாழ்ந்திருக்கிரேன் இன்னும் அங்கு என் உறவுகள் வாழ்கிறார்கள் இதே பாதிப்பு அங்கும் உள்ளது.. என்று இயற்கை முறைக்கு மாறுப்பட்டு அதிக உற்பத்திக்காக கெமிக்கலை பயன்படுத்த தொடங்கினறோ அன்றே அதன் பாதிப்பு தொடங்கியது..

மேலும் அங்கு மழை காலங்களில் கழிவு நீரை சுத்திகரிக்காமல் அங்குள்ள குளத்தில் சேமிப்பதால் அந்த பகுதியின் நிலத்தடி நீர் முற்றிலும் மாசுபட்டுவிட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.