01/06/2018

வல்லரசு கனவும் மேற்கத்திய தாக்கமும்...


2020 இல் இந்தியா வல்லரசாகி விடும்..

அப்புறம் என்ன எல்லாவற்றுக்கும் டிஜிட்டல் மயம் தான்..

இப்பவே க்ளீன் இந்தியா டிஜிட்டல் இந்தியா எல்லாம் வந்து விட்டது.

இன்னும் 3 வருசத்துல இந்தியாவை கொண்டு போய் முதலாளிகளுக்கு அடகு கொடுத்துவிட்டால் அவர்கள் ஏற்கனவே வல்லரசு கனவை உருவாக்கி மக்களை மயக்கி வைத்துள்ள வல்லரசு பட்டத்தை தந்து விடுவார்கள்.

பின்னர் என்ன விவசாயம் சுத்தமாக செத்து விடும் அதற்கு முன்னோட்டமாக தான் விவசாயிகள் சாவதை கள்ளத்தொடர்பில் சாவுறானுக என்று மத்திய அமைச்சர் ஒருவர் சொன்னதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.

அய்யா சில வருடங்களுக்கு முன்பு கோழி எல்லோர் வீட்டிலும் இருக்கும் கிராமத்தில் அவைகளென்று தனி கோழி கூடைகள் இருக்கும், காலையில் சேவல் கூவியதும் கோழி கூட்டத்தை திறந்து விட்ட பின்பு..

அது பாட்டுக்கு தன் சக குஞ்சிகளுடன் செடிகொடி இடங்களில் மண்ணை கீறி கீறி இரைகளை உண்ணும், பின்பு அங்கையே அது கழிவையையும் உரமாக இட்டுவிட்டு செல்லும்..

திடீர் விருந்தாளிகள் வந்தால் கவலையே படவேண்டாம்...

கொல்லையில் உள்ள செடிகளில் இரண்டு தக்காளி கொஞ்சம் பச்சை மிளகாய் எடுத்து அம்மியில் அரைத்து மசாலா தயாரித்து ஏற்கனவே வளர்த்து வந்த கோழிகளில் ஒன்றை அறுத்து குடும்பமே உட்கார்ந்து சாப்பிட்டு உண்டு மகிழ்ந்து வந்த இனம் நாங்கள்.

அதை அப்படியே குத்தி குதறுவது போன்று அந்த கோழிகளை மட்டம் தட்ட மிகவும் லேசாக 30 ரூபாய்க்கு பிராய்லர் கோழி வந்தது, அதிலும் நம் மக்களை முட்டாளாக்காக வெள்ளை கலரில் பார்க்கும் பொழுதே தகதகன்னு இருக்கும் அமைப்பில் பிராய்லர் கோழிகளை உருவாக்கினார்கள்..

நன்றாக யோசித்து பாருங்களேன்...

பிராய்லர் கோழி உடலுக்கு மிகவும் கேடு என்று தெரிந்தும் எத்துனை பேர் நாட்டு கோழியை நாம் உண்ணுகிறோம்..

காரணம் என்ன தெரியுமா ? இது ஒரு வகையான திட்டமிட்டு காய் நகர்த்தும் காரியம்..

திரைப்படங்களில் ஆரம்பத்தில் கண்கள் காமத்தை காண்பித்தார்கள் பின்பு இரட்டை அறுத்த வசனங்கள் பின்பு முத்தம் பின்னர் உதட்டு முத்தம்..

இப்பொழுது தெளிவாக  கட்டில் ஆடுதல், முக்கல்கள் முனகல்கள் ஆபாச தழுவல்கள்..

ஆரம்பத்தில் நாம் இதை சும்மா போயிட்டு போவுது என்று விட்ட விளைவு. இன்று இதுவரை நிக்கிறது..

நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்..

இன்றைய சமூக அவலங்களுக்கு  மிகப்பிரதான காரணம் இந்த சினிமா கூத்துகாரணுக்கள் தான்..

அப்படி தான் தமிழகத்தின் தொன்மையான கலாச்சாரம் , பண்பாடு , உணவு முறைகள் , எல்லாவற்றையையும் அழித்துவிட்டு நாம் கையேந்தி பிச்சை கேட்க வேண்டும் அயல் நாட்டவனிடம்..

இதற்காக உருவாக்கப்பட்டது தான் வல்லரசு..

உலகத்திலையே ஒரு நாடு நாட்டு மக்களுக்குகாக எவருமே செய்யாத செயலை செய்தது..

அது தண்ணீருக்காக செயற்கை பிரமாணட ஆறு ஆயிரக்கணக்கில் நீண்டு கொண்டே செல்லும் இந்த ஆறை
உருவாக்கிய மனிதர் கடாபி..

அவருடைய நாடான லிபியாவை எவனுமே வல்லரசாக அங்கீகரிக்கவில்லை.. காரணம் அவர் உலக முதலாளித்துவத்தை
கடுமையாக எதிர்த்தார்..

அமரிக்கா பல வருடம் பொருளாதார தடை விதித்த போது.. இவன் யார்  மக்களுக்கு தடை விதிப்பது என்று இங்கே விளையும் பொருட்கள் எம் விவசாயிகளுக்கு மட்டும் தான் பின்னர் தான் மத்தவனுக்கு என்று ஒலிபெருக்கியை வைத்து அமெரிக்காவுக்கு எதிராகவே இருந்தார் , அதன் விளைவு அவர் அமெரிக்காவால் கொல்லப்பட்டார்.. 

விவசாயியை சாவடித்து விட்டு வல்லராசக ஆக்குவது தான் இவனுக இலட்சியமே..

இதற்க்கு மிக தெளிவாகவே சொல்கிறேன் இன்றைய அத்துணை அரசுகளும் உடந்தை தான்..

2020 வல்லரசாக ஆக்கிவிட்டு
தக்காளிக்கு பதிலாக கையில்
தங்கத்தை வைத்து எதை தின்பீர்கள்  ?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.