31/07/2018

வரலாற்றை புரட்டி போட்ட சம்பவம் - 1...


மறதி மறதி நாம் சில சமயங்களில் மறதியை நினைத்து வேதனைப்பட வேண்டும்.

தீண்டாமை என்ற கொடூரம் எது வரை சென்றது தெரியுமா?

ஒரு குளத்தில் உள்ள தண்ணீரை தலித்துகள் என்று சொல்லக்கூடிய சக மனிதன் எடுப்பதால் உண்டான கலவரமே இந்த வரலாற்று பதிவு.

1923 ல் மஹாராஷ்டிரா மாநிலத்தில் மஹத் என்ற இடத்தில் செளதார் என்ற பகுதியில் உள்ள குளம் தான் இந்த பிரச்சினையை ஊட்டி விட்டது

இங்கு தீண்டதகாதவர்கள் என்று ஒதுக்கி வைத்த ஆயிரக்கணக்கான மக்களை இந்த குளத்தில் தண்ணீர் எடுக்க விடாமல் பார்பனியம் துன்புறுத்தியது.

ஒரு அளவுக்கு மேல் பார்த்த மக்கள் பிரச்சனையை பெரியதாக ஆக்குகிறார்கள்.

பிரச்சினை மும்பை சட்டமன்றம் வரை செல்கிறது எஸ் கே போலே என்ற சட்டமன்ற உறுப்பினர் மூலம் இப்பிரச்சினை பேசப்பட்டது.

இறுதியில் முழு மனதுடன் அந்த குளத்து நீரை அனைவரும் பங்கு போட்டு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சட்டம் இயற்றியது.

இச்சட்டத்தால் மக்கள் சந்தோசம் அடைந்தாலும் ஊர் தலைவர்கள் என்று (ஷத்ரியர்களாம்) இருந்தவர்களை தூண்டிவிட்டு கொடுக்கவே முடியாது சூத்திரனும் நாமும் ஒரே குளத்தில் லா

அதெல்லாம் சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்தது ஊர்.

பிரச்சினை பெரிதாக ஆகி நம்ம தலையெழுத்து என அந்த மக்களும் விட்டுவிட்டனர்.

இப்படியாக  3 வருடம் போகிறது.

இந்த நிலையில் தான் அந்த ஊரில் உள்ள சில இளைஞர்கள் முயற்சியில் சரி போவுது பா அவங்களும் எங்க போவாங்க தண்ணீர் குடிக்க..

சரி தண்ணிய அவங்களையும் குடிக்க எடுக்க அனுமதிப்போம் என்று மஹத் நகர சபை முடிவெடுக்கிறது.

நகர சபை முடிவெடுத்ததும் மீண்டும் பார்பனர்கள் சாதிய இந்து மக்களை தூண்டிவிட்டு  பயங்கர எதிர்ப்பு அம்மக்கள் மீது காட்டினார்கள்.

இதற்கு மேலும் பொறுத்தால் சரிவராது என்று அந்த மக்கள் அனைவரும் சென்று ஒருவரை பார்த்து இநத கொடுமையை அவரிடம் முறையிடுவது என்று முடிவெடுத்தனர்.

அவர் தான் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்.

இதனிடையே 1927 ம் ஆண்டு  19 மற்றும்  20 வது தேதிகளில்  இரண்டு நாட்களுக்கு பெரிய மாநாடு நடத்தி அரசின் கவனத்தையும் பார்பனர்களை ஒடுக்கவும் முடிவெடுத்தனர்.

இதற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்றக்கதான் அம்பேத்கரை அழைத்தனர்.

இதற்காக இரண்டு மாதத்திற்கு முன்பே காடு மேடு பள்ளம் என்று தாழ்த்தப்பட்டவராக ஒதுக்கி வைத்துள்ள மக்களை சந்தித்து இப்படி ஒரு பிரமாண்ட மாநாடு நடக்கப்போகிறது எல்லாரும் வந்துடனும் நாம தண்ணிர் எடுக்க கூடாதுன்னு சொல்வதற்கு இவனுக யாரு?  இப்படியே விட்டால் நாம இன்னும் கீழ்த்தரமாக போய்
விடுவோம்.

முக்கியமாக நமக்காக பேசவும் தலைமையேற்று நடத்தவும் அம்பேத்கர் வருகிறார்.

என பட்டி தொட்டி கிராமங்களில் தகவல் பரப்பப்பட்டது.

இதன் காரணமாக பதினைந்து வயது சிறுவன் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரொட்டி துண்டுகளை பொட்டலங்களாக கட்டி தோள்களில் தொங்க விட்டு பல மைல் தூரத்தில் இருந்து மஹத்தை வந்தடைந்தனர்.

மஹாராஷ்டிரா குஜராதை  சேர்ந்த தலித் மக்கள் பத்தாயிரம் பிரதிநிதிகளும் ஊழியர்களும் இன்னும் பல இளைஞர்களும் கலந்து கொண்டனர் என்று வரலாறு கூறுகிறது.

இதற்கிடையே இவ்வளவு பிரமாண்டத்தை பார்த்த சாதி வெறியர்கள் மாநாடு போட்டுள்ள திடலுக்கு தண்ணீர் விடாமல் தடுத்து வைத்து இருந்தனர்.

இதையடுத்து மாநாட்டில் பங்கேற்க வந்த பிரமுகர்கள் எல்லாம் சேர்ந்து தண்ணீரை பணம் கொடுத்து வெளி ஊரில் இருந்து வரவழைக்கப்பட்டது அக்காலத்தில் இதன் மதிப்பு  40 ரூபாய் செலவில் தண்ணீர் மட்டும்.
கிழிந்த ஆடையும் ஒட்டிய வயிறும் கண்களில் சோகமும் ததும்ப நின்ற மக்கள் மத்தியில் அம்பேத்கர் உரையாற்ற ஆரம்பித்தார்.

அவருடைய கால வாழ்கையும் அவர் தீண்டாமை கொடுமையால் வேதனை பெற்றதையும் கூறி விட்டு

முழு இந்தியாவே மறைத்து வைத்திருந்த ஒரு தகவலை
சொன்னார்..

இந்தியாவே ஆட்டம் கண்ட தகவல் அது.

பின்னர் என்ன நடந்தது ?
பேசுவோம்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.